Sunday, January 6, 2013

சமையல் - அசைவம் - ரத்தப்பொரியல்

இந்த வாரம் நம்ம வீட்டு சமையல் ஆட்டு ரத்த பொரியல்...இது சாப்பிட ரொம்ப சுவையா இருக்கும்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இது ரொம்ப பிடிக்கும்.இட்லிக்கு தொட்டுக் கொள்ள செம டேஸ்டாக இருக்கும்.இதனோட செய்முறை ரொம்ப ஈஸி தான்.

வேண்டிய பொருட்கள் :
ஆட்டு ரத்தம் - ஒரு கப்
சி - வெங்காயம் - 1/4 கிலோ
தேங்காய் - ஒரு மூடி துருவியது
இஞ்சி பூண்டு - 2 பல் - நசுக்கியது
சீரகம். சோம்பு, கடுகு - கொஞ்சம்
ப.மிளகாய் -  4
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொ.மல்லி, புதினா, கறிவேப்பிலை - தேவையான அளவு 

செய்முறை :
உறைந்து போய் கட்டி போல இருக்கும் ஆட்டு ரத்தத்தினை  கழுவி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.கட்டி இருக்க கூடாது.
பின்னர் வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, சீரகம், சோம்பு, போட்டு தாளிக்க வேண்டும்.கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.நசுக்கிய 3 பூண்டு பற்கள், சிறிது இஞ்சி தட்டி போட்டு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கிய உடன் அதில் பிசைந்து வைத்துள்ள ரத்தத்தை ஊற்றி நன்கு கிளறவும். அடிப்பிடிக்காமல் கிளற வேண்டும்.ஆடு அறுக்கும்போதே உப்பு போட்டு தான் பாத்திரத்தில் பிடிப்பார்கள்.அதனால் உப்பு போட தேவையில்லை.உப்பு தேவைப்படின் சேர்த்துக்கொள்ளலாம்.ரத்தம் அதன் நிறம் மாறி தண்ணீர் வற்றி நன்கு உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவும்.நன்கு உதிரியாக ஆனவுடன் தேங்காய் துருவல் போட்டு கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். மேலே கொத்தமல்லி புதினா இலைகளை போட்டு பரிமாறவும்.

 
தேங்காய் துருவிய கொட்டாங்குச்சியில் இந்த பொரியலை போட்டு சாப்பிட செம டேஸ்டாக இருக்கும்.இட்லிக்கு இதனோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்தால் தான் சுவை அதிகமாக இருக்கும். 
 
கிசுகிசு : ஞாயிறு அன்னிக்கு எப்பவும் விசேசம் தான்...காலையில் எட்டு எட்டரை மணிக்குள் அசைவம் ரெடி ஆகிவிடும்..அப்போ இருந்து மதியம் மூணு மணி வரை பொழுது நல்லாப்போகும்....ஹி ஹி ஹி..
 

நேசங்களுடன்
ஜீவானந்தம்.

6 comments:

  1. கலக்கல் பொரியல்...எனக்கு ரொம்ப பிடிச்ச அயிட்டம்...கிராமத்துல இது ரொம்ப ஃபேமஸ்..

    ReplyDelete
  2. சாப்பிட தூண்டும் சமையல் விரைவில் சமையல் கலை நிபுணராக உங்களை பார்க்கலாம் போல நண்பா அசத்துங்க

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு. தயவுசெய்து எனது முகவரிக்கு பார்சல் அனுப்பவும். நன்றி

    ReplyDelete
  4. அசைவ சமையல் வகைகள், அசைவ போரியல் வகைகள், அசைவ குழம்பு வகைகள், போன்ற பலவகையான அசைவ உணவு வகைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள். http://www.valaitamil.com/recipes_non-vegetarians

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....