Thursday, March 7, 2013

கள்ளுக்கடை ஓரத்திலே....திருச்சூர், கேரளா

 கடவுளின் தேசம் - சாரி குடிமகன்களின் தேசம் - கேரளா
கள்ளுக்கடை ஓரத்திலே...திருச்சூர், கேரளா....
 
எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.

ம்ம்ம்...இப்படிலாம் சிலைடு எல்லாம் போடற அளவுக்கு என் நிலைமை ஆயிடுச்சே.....இதை நினைச்சாத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு....இதுக்கே இன்னொரு வாட்டி கேரளா போகனும் போல......
 
போன மாசம் கோவிலுக்கு போலாம்னு கேரளா திருச்சூர் போய்ட்டு அப்படியே என்னோட பக்தி பயணத்தை முடித்துவிட்டு நம்ம பயணத்தை எங்காவது ஆரம்பிக்கலாம் அப்படின்னு நம்மள கூட்டிட்டு போன சேட்டன் கிட்டே அடிபொளி கள்ளும் , பீஃப்மும் எவிட கிட்டும் என்று மலையாளத்தில் கேட்க (ஏதோ கொஞ்சம் கொஞ்சம் மலையாளம் அறியும் ஞான் ..ஹி ஹிஹி ) .....வண்டி போய் நின்ன இடம் கள்ளுக்கடை..
 
 
 
அந்த காலை வேளையிலும் நம்மோடு போட்டி போட ஒரிரு பங்காளிகள்...அந்த இடத்தின் சூழ்நிலை மிக ரம்மியமாக இருந்தது..ரோட்டோரத்தில் கடை...கடைக்கு பின்புறம் வாழை மற்றும் தென்னந்தோப்பு...
தகரக்கொட்டாயில் நம்ம கடையும் கள்ளுக்கடைக்கே உண்டான மணத்துடன் இடமும் , ஆங்காங்கே இப்பவோ அப்பவோ என தள்ளாடிக்கொண்டிருக்கிற மர பெஞ்ச்சும் போடப்பட்டிருக்கிறது...... 
இன்னும் கூட்டம் கூடவில்லை...ஒருவேளை நம்ம பங்காளிக ரொம்ப லேட்டாத்தான் வருவாங்களோ....(இதே நம்ம ஊருல ஷட்டர் முன்னாடி தவமாய் தவம் கிடப்போம்....)ஒரு சில பேர் மட்டுமே மலையாளத்தில் தீவிர ஆலோசனையில்...
 விலைப்பட்டியல் பார்த்தேன்..ரொம்ப கம்மிதான்..கிங் ஃபிஷர் பீர் பாட்டிலில் நிரப்பப்பட்டு இருக்கிறது கள்ளு.அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிற பாட்டில்களை பார்க்க பார்க்க மனம் குதூகலித்தது...நமக்கு போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து என்பதால்....ஒரே ஒரு கள்ளு பாட்டில் வாங்கி ஆரம்பித்தேன் கச்சேரியை...கூட துணைக்கு பீஃப் கறியும்....
ஏகப்பட்ட சைட் டிஷ்கள்..கள்ளுக்கடையில் மட்டுமே கிடைக்கும்..மத்தி, பொரிச்ச மீன், கப்பா, போர்க், பீஃப், ஊறுகாய் என பல்வேறு வெரைட்டிகள்..நமக்கு ரொம்ப பிடிச்சது மீனும் பீஃப் தான்..மீன் சூடாக வேறு இல்லை..அதனால் மீன் சாப்பிடவில்லை..அதனால் பீஃப் மட்டுமே...இரண்டும் செம டேஸ்ட்...கொஞ்சம் கொஞ்சமாய் கள்ளு காலியாக மிதமான நிலைக்கு மனம் நிறைந்து போனது....
விலையும் கம்மிதான் ..650 மிலி 40 ரூபாய் தான்...இன்னும் அதிகம் சாப்பிட ஆசைதான்...அதிகமாய் சாப்பிட்டால் அடிக்கிற வெயிலில் வயிற்றுக்கு உபாதை ஏற்படுத்திவிடும் என்ற அபாய காரணத்தால் ஒரு பாட்டிலோடு நிறுத்திவிட்டேன்..(இல்லேனா எப்போ திரும்பி வர்றது கோவைக்கு...அப்புறம் அங்கேயே ரூம் போட்டு ஆரம்பிக்கனும் மீண்டும்...)

 குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன்.

இதுக்கு முன்னாடி போன அனுபவம் குடிமகன்களின் தேசம்

 
கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்ம்ம்ம்ம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி  இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....

 
நேசங்களுடன்
ஜீவானந்தம்

6 comments:

  1. யோவ் இது மாது ச்சே மது இல்லை, கள்ளு'ய்யா கள்ளு...!

    கள்ளு உடம்புக்கு நல்லதுதான் டோன்ட் ஒர்ரி...

    ReplyDelete
  2. ஸ்லைட் போட்டதோட அப்படியே சினிமாவில காட்டுறமாதிரி பிராண்ட் பேரையும் மறைச்சிருக்கலாம்...

    ReplyDelete
  3. குடிமகன்"கள்" தேசமா?

    ReplyDelete
  4. நீங்கள்லாம் நல்லா வருவீங்க !

    ReplyDelete
  5. குடி மகனே....பெருங்குடி மகனே....
    ஞாபகப்படுத்தறேன்.
    வசந்தமாளிகை டிஜிட்டலில் அர்ச்சனா தியேட்டரில் நாளை ரீலிஸ்.

    ReplyDelete
  6. வந்த பங்காளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....