Showing posts with label குடிமகன். Show all posts
Showing posts with label குடிமகன். Show all posts

Thursday, March 7, 2013

கள்ளுக்கடை ஓரத்திலே....திருச்சூர், கேரளா

 கடவுளின் தேசம் - சாரி குடிமகன்களின் தேசம் - கேரளா
கள்ளுக்கடை ஓரத்திலே...திருச்சூர், கேரளா....
 
எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.

ம்ம்ம்...இப்படிலாம் சிலைடு எல்லாம் போடற அளவுக்கு என் நிலைமை ஆயிடுச்சே.....இதை நினைச்சாத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு....இதுக்கே இன்னொரு வாட்டி கேரளா போகனும் போல......
 
போன மாசம் கோவிலுக்கு போலாம்னு கேரளா திருச்சூர் போய்ட்டு அப்படியே என்னோட பக்தி பயணத்தை முடித்துவிட்டு நம்ம பயணத்தை எங்காவது ஆரம்பிக்கலாம் அப்படின்னு நம்மள கூட்டிட்டு போன சேட்டன் கிட்டே அடிபொளி கள்ளும் , பீஃப்மும் எவிட கிட்டும் என்று மலையாளத்தில் கேட்க (ஏதோ கொஞ்சம் கொஞ்சம் மலையாளம் அறியும் ஞான் ..ஹி ஹிஹி ) .....வண்டி போய் நின்ன இடம் கள்ளுக்கடை..
 
 
 
அந்த காலை வேளையிலும் நம்மோடு போட்டி போட ஒரிரு பங்காளிகள்...அந்த இடத்தின் சூழ்நிலை மிக ரம்மியமாக இருந்தது..ரோட்டோரத்தில் கடை...கடைக்கு பின்புறம் வாழை மற்றும் தென்னந்தோப்பு...
தகரக்கொட்டாயில் நம்ம கடையும் கள்ளுக்கடைக்கே உண்டான மணத்துடன் இடமும் , ஆங்காங்கே இப்பவோ அப்பவோ என தள்ளாடிக்கொண்டிருக்கிற மர பெஞ்ச்சும் போடப்பட்டிருக்கிறது...... 
இன்னும் கூட்டம் கூடவில்லை...ஒருவேளை நம்ம பங்காளிக ரொம்ப லேட்டாத்தான் வருவாங்களோ....(இதே நம்ம ஊருல ஷட்டர் முன்னாடி தவமாய் தவம் கிடப்போம்....)ஒரு சில பேர் மட்டுமே மலையாளத்தில் தீவிர ஆலோசனையில்...
 விலைப்பட்டியல் பார்த்தேன்..ரொம்ப கம்மிதான்..கிங் ஃபிஷர் பீர் பாட்டிலில் நிரப்பப்பட்டு இருக்கிறது கள்ளு.அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிற பாட்டில்களை பார்க்க பார்க்க மனம் குதூகலித்தது...நமக்கு போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து என்பதால்....ஒரே ஒரு கள்ளு பாட்டில் வாங்கி ஆரம்பித்தேன் கச்சேரியை...கூட துணைக்கு பீஃப் கறியும்....
ஏகப்பட்ட சைட் டிஷ்கள்..கள்ளுக்கடையில் மட்டுமே கிடைக்கும்..மத்தி, பொரிச்ச மீன், கப்பா, போர்க், பீஃப், ஊறுகாய் என பல்வேறு வெரைட்டிகள்..நமக்கு ரொம்ப பிடிச்சது மீனும் பீஃப் தான்..மீன் சூடாக வேறு இல்லை..அதனால் மீன் சாப்பிடவில்லை..அதனால் பீஃப் மட்டுமே...இரண்டும் செம டேஸ்ட்...கொஞ்சம் கொஞ்சமாய் கள்ளு காலியாக மிதமான நிலைக்கு மனம் நிறைந்து போனது....
விலையும் கம்மிதான் ..650 மிலி 40 ரூபாய் தான்...இன்னும் அதிகம் சாப்பிட ஆசைதான்...அதிகமாய் சாப்பிட்டால் அடிக்கிற வெயிலில் வயிற்றுக்கு உபாதை ஏற்படுத்திவிடும் என்ற அபாய காரணத்தால் ஒரு பாட்டிலோடு நிறுத்திவிட்டேன்..(இல்லேனா எப்போ திரும்பி வர்றது கோவைக்கு...அப்புறம் அங்கேயே ரூம் போட்டு ஆரம்பிக்கனும் மீண்டும்...)

 குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன்.

இதுக்கு முன்னாடி போன அனுபவம் குடிமகன்களின் தேசம்

 
கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்ம்ம்ம்ம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி  இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....

 
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, October 15, 2012

குடிமகன்களின் தேசம் -பாண்டிச்சேரி - ஒரு பார்வை

குடிமகன்களின் தேசம் -  பாண்டிச்சேரி ஒரு பார்வை...மறுபடியுமா....

எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.
         
        செங்கல் பட்டு போய்ட்டு ரிட்டர்ன் வரும்போது விழுப்புரம் வந்தவுடன் வண்டி கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்தது.சரி ஏதோ சமிக்ஙை செய்யுது அப்படின்னு பார்த்தா வண்டி பாண்டிச்சேரி போற ரோட்டுக்கு  பக்கத்துல நிக்குது..சரி வந்தது... வந்தோம்....பார்த்துட்டே போவோம் பாண்டியை அப்படின்னு கிளம்பினேன்.
விழுப்புரம் ரொம்ப டிராஃபிக்...மெதுவாகவே வண்டி ஊற மனசுக்குள் வேகம் எடுக்க ஆரம்பித்தது.செல்லும் வழியில் தென்பட்ட அம்மணிகளில் மனம் லயிக்க மறுத்தது.என் மனதை படித்தது போல பாய்ந்து சீறியது என் சிங்கம்.(அதாங்க நம்ம வண்டி...)
விழுப்புரத்தில் இருந்து இருபது இருபத்தஞ்சு கிலோ மீட்டருக்குள் பாண்டி பார்டர் வர ரொம்ப சந்தோசமாக இருந்தது....போலிஸ் செக் போஸ்ட் கள் பாண்டி பார்டர் வந்துவிட்டதை ஞாபக படுத்தின....புதுச்சேரி அரசின் முத்தமிழ் வாயில் நம்மை வரவேற்றது.
 
அப்படி ஒண்ணும் சுத்தி பார்க்க போறது கிடையாது.போறதே கொஞ்சம் நம்ம ஜாதிக்காரங்களை பார்க்கத்தான்.வழி நெடுக நமக்கான கடைகள் நிறைய இருக்க, ஆங்காங்கே பங்காளிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்க மனம் மிக மகிழ்ச்சி அடைந்தது...கொஞ்ச நேரத்தில்  சரியான இடத்தில் வண்டி நிற்கவே அங்கே  இருந்த ஒரு புதுச்சேரி அரசின் மதுபானக் கடை நம்மை வரவேற்றது.
கை பரபர வென துடிக்க கால் முன்னேறி செல்ல கடைக்குள் உள்ளே நுழையவும் நமக்கு முன்னே  ஏற்கனவே ஒரு கூட்டம்..ரொம்ப பேருக்கு இதுதான் வேலை போல...நம்மளை மாதிரியே....இந்த கடையை பத்தி சொல்லி யாகணும்..எவ்ளோ நீட்டா இருக்கு.கொஞ்சம் கூட குப்பை இல்லாமல் மிக நன்றாக வைத்து இருக்கின்றனர்.நம்ம டாஸ்மாக் நினைச்சா படு கேவலம்...சுகாதாரம் லாம் சுத்தம் நம்ம ஏரியாவுல....ஆனா இங்க பரவாயில்லை...
 
அங்கே இருந்த குடிமக்களில் நானும் ஒருவனாக ஆனேன்.நம்ம ஃபெவெரைட் பக்கார்டி ஆர்டர் செய்து விட்டு அப்படியே சைட் டிஷ் எல்லாம்ஆர்டர் செய்தேன்.
நமக்கு பிடித்த நெத்திலி ஃபிரை, நண்டு வறுவல், சங்கரா மீன், சுண்டல், என அனைத்தும்...
 
பாண்டியில் எப்பவும் சைட் டிஷ் மிக நன்றாக இருக்கும்.தனி கவனம் எடுத்து செய்வார்கள் போல...அவ்ளோ சுவை.
முதலில் வந்தது  நெத்தில் ஃபிரை.மிக டேஸ்ட்.மொறு மொறு வென....அருமை...அதிகமா விரும்பி சாப்பிடுவது சரக்குக்கு அப்புறமா இதுதான்...
சங்கரா மீன் ....தோசைக்கல்லில் சுட்டு கொண்டு வந்து இருந்தனர்.கொஞ்சம் கூட எண்ணை இல்லாமல் மிக சுவை உடன்.....

நண்டு....நல்ல சுவை...பொடி பொடி நண்டாய் நிறைய...ஒவ்வொன்றையும் கடித்து கடித்து இருக்கிற சாறை உறிஞ்சி  எடுத்து விட்டு  கீழே போட வெறும் ஓடு மட்டும்  ஓடியது.
அப்புறம்...ஆப்பாயில்...இதை சொல்லவே வேணாம்...அவ்ளோ பிடிக்கும்...எல்லா விலையும் ரொம்ப குறைவு தான்.சரக்கு விலையும் கம்மி தான்.அப்புறம் ஒரு ரெண்டு மணி நேரம் இந்த தேசத்தில் குடிமகனாய்  இருந்து விட்டு கிளம்பினேன்.
 
கிளம்பும் போது மனசுக்குள் ஒரு சின்ன தடுமாற்றம்...நாம பெட்ரோல் போட்டுகிட்டோம். நம்ம வண்டிக்கும் எதாவது கருணை காட்டணுமே அப்படின்னு  பக்கத்துல இருந்த பங்க்ல வண்டிக்கு டீசல்  ஃபில் பண்ண சொன்னேன்.பார்த்தா டீசல் விலையும் குறைவுதான்.48.06 பைசாதான். பரவாயில்லையே...எல்லாம் கம்மியா இருக்கே அப்படின்னு ரொம்ப சந்தோசத்துடன் கோவை திரும்பினேன்...கூட அடுத்த நாளுக்கு உண்டான சங்கதிகளுடன்...

 குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன்.

இதுக்கு முன்னாடி போன அனுபவம் குடிமகன்களின் தேசம்

கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்கூம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Sunday, June 24, 2012

பாண்டிச்சேரி குடிமகன்களின் தேசம் - 1


பாண்டிச்சேரி  குடிமகன்களின் தேசம் - 1

                        எச்சரிக்கை
                  குடி குடியை கெடுக்கும்
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மட்டும்.

வணக்கம் (குடி)மக்களே.......
இது கொஞ்சம் மப்பான பதிவு...
ஏதோ...... படம் ஆரம்பிக்கும் போது சர்டிபிகேட் காட்டுவாங்களே அது மாதிரி நம்ம நிலைமை ஆயிடுச்சு..ம்ம்ம்...எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு.
ஓகே...மேட்டருக்கு வருவோம்....
பாண்டியில் இருந்து ஈ சி ஆர் ரோட்டில் கிளம்பினோம்.செல்லும் வழியில் கொஞ்ச தூரம் எங்கும் நம்ம கடைகளை காணோம்...கேட்டால் இது தமிழ்நாடு பார்டராம்.....கொஞ்ச தூரம் சென்றவுடன்  மீண்டும் பாண்டி நம்மை வர வேற்றது..முதல் வேலையாக நம்ம கடையை தேடி சென்றோம்..அருகிலேயே சாராய கடையும்.அரசு நடத்தும் சாராய கடை....தகர சீட் ஷெட் போட்டு எந்த ஒரு உட்காரும் வசதியோ இல்லாமல் இருக்கிறது.



உள்ளே நுழைந்தால் ஏகப்பட்ட ஏழைகளின் சொர்க்கமாக இருக்கிறது. சீல் வைக்கப்பட்ட இரண்டு கேனில் சாராயம்.அதை அளந்து கொடுக்க கேனுக்கு ஒருவர். ஐந்து ரூபாயில் இருந்து தொடங்குகிறது. சாராயத்துடன் சோடா கலந்தே தருகிறார்கள்.தொட்டு கொள்ள சத்தியமாய் மட்டை ஊறுகாய் இல்லை.(எடுத்து செல்ல மறந்து விட்டேன்)சரக்குக்கு சைட் டிஷ் கொடுக்கும் இரண்டு மூதாட்டிகளின் வாழ்வாதாரமாக இந்த கடை இருக்கிறது.மாங்காய், சுண்டல், அவிச்ச முட்டை, மீன், கிழங்கு, கருவாடு என அனைத்தும் இருக்கிறது.கொஞ்சம் சுகதாரமற்று சாராயக்கடைக்கே உரித்தான அம்சங்களுடன் இருக்கிறது.
பாண்டிச்சேரி அரசே வில்லியனூர் என்கிற ஊருக்கு அருகில் சாராய ஆலை வைத்து இருக்கிறதாம்.மூன்று டாக்டர்களின் மேற்பார்வையில் இது தயாரிக்க படுகிறதாம்.சொன்னது அங்குள்ள ஒரு பங்காளி...நம்ம பங்குக்கு நாமும் கொஞ்சம் (ஹி ஹி ஹி ) டேஸ்ட் பார்த்து விட்டு வெளியேறினோம்.அப்படி ஒன்றும் பெரிதாய் இல்லை.வோட்கா போன்று வாசமில்லாமல் இருக்கிறது....அப்புறம் இன்னும் திருப்தி அடையாமல் அடுத்து  சென்றது அருகில் உள்ள ஈ சி ஆர் ஒயின்ஸ்...

நல்ல விசாலமாக பீச்சுக்கு அருகில் இருக்கிற இந்த கடையில் தஞ்சமடைந்தோம்.ரொம்பவும் பிடித்த போஸ்டர் பீரினை ஆர்டர் செய்து விட்டு காத்து இருந்தோம்.(இந்த பீர் கொஞ்சம் கூட கசப்பே இல்லாமல் குடிக்க குடிக்க சுவையாய் இருக்கிறது)...கூடவே சைடு டிஷ் ஆக கணவாய் மீன், பீப் வறுவல் நெத்திலி 65....என....




கணவாய் மீன் கொஞ்சம் ரப்பர் மாதிரி இருக்கிறது.முதல் முறை சாப்பிடுவதால் என்னவோ நெத்திலி அளவுக்கு மீன் பிடிக்கவில்லை.நன்றாக இருந்தது என்று நண்பர் சொன்னார்.ஆனால்.பீப் பெப்பர் வறுவல் செம டேஸ்ட்...நல்ல மிருதுவாக இருக்கிறது இந்த வறுவல்...அப்புறம் நெத்திலி மீன்...சொல்லவே தேவையில்லை..அவ்ளோ சுவை....சரியான பதத்தில்..உப்பும் மசாலாவும்...நாக்கில் இன்னும் எச்சில் ஊறுகிறது...சரியான சைடு டிஷ்...
எப்படியோ...போதும் போதும் என்கிற அளவுக்கு.....சாப்பிட்டு விட்டு வேணும்கிற அளவுக்கு பார்சல் வாங்கிட்டு செங்கல் பட்டு கிளம்பினோம்.....
கிசுகிசு : இதை படித்து விட்டு உங்களுக்கு ஞாபகம் எடுத்தால் கம்பெனி பொறுப்பாகாது..அப்புறம் இது என்னோட 200வது பதிவு.ரொம்ப மப்பான பதிவு,,,

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...