Friday, April 26, 2013

கோவை மெஸ் - குளத்தூர் பிரியாணி ஹோட்டல், சூலூர்

ஒரு நாள் கோவை நோக்கி வந்துகிட்டு இருக்கும் போது சூலூர் வந்தபோது செம பசி. சிட்டிக்குள்ள போக எப்படியும் ஒரு மணி நேரத்துக்கும் மேல  ஆகிடும்.பாவம் எப்படியும் பசி தாங்கமாட்டேன்னு....பக்கத்துல ஒரு ஆள் கிட்டே கேட்க ....சைவமா அசைவமா என எதிர்கேள்வி கேட்க...எப்பவும் போல அசைவம் தான் என சொல்ல....கலங்கல் ரோட்டுல ஒரு ஹோட்டல் இருக்கு போங்க என சொல்ல..சூலூரில் இருந்து கலங்கல் செல்லும் வழியில் தேடிகிட்டே செல்ல  வலது புறம் மரத்தடியில் அமைதியாய் இருக்கிறது...
 
வண்டியை ஓரங்கட்டிவிட்டு வர....பிரியாணி மணம் நம்மை இழுத்தது..கடைக்குள் நுழைய ஏகப்பட்ட பேர் பார்சல் வேண்டி காத்திருந்தனர்.ஒரு ஓரமாய் இடம்பிடித்து உட்கார சர்வர் இலையை போட்டு மெனுவினை அடுக்க ஆரம்பிக்க பசி இன்னும் அதிகமானது.பிரியாணி தலைக்கறி, குடல் கறி, சிக்கன் சாப்ஸ், மட்டன் சுக்கா என நிறைய வெரைட்டி சொல்ல சொல்ல எச்சில் ஊறியது..நான் மட்டும் தான் ஆதலால் அதிகம் ஆர்டர் பண்ணமுடியாது என்று பிரியாணி , தலைக்கறி மட்டும் சொன்னேன்.
இலை போட்டு சூடாய் பிரியாணி வைக்க மணம் பட்டையக் கிளப்பியது..சிக்கன் பீஸ்கள் நன்றாக வெந்து இருந்தன.சுவை பரவாயில்லை.ஆனால் தலைக்கறி மிக அற்புதம்.அந்த ஆட்டு மணத்துடன் அப்படி ஒரு சுவை..சாப்பிட சாப்பிட செமையாக இருந்தது.அதிக பீஸ்களும் கிரேவியும் அருமையோ அருமை.
விலையும் குறைவுதான்.இரண்டு பிரியாணி ஒரு தலைக்கறி இரண்டும் சேர்த்து 220 தான் ஆனது.
சூலூரில் இப்படி ஒரு ஹோட்டல் இருப்பதே இப்போது தான் தெரிகிறது.அந்த வழிப்போக்கனுக்கு நன்றி..
சூலூர் டூ கலங்கல் செல்லும் வழியில் இருக்கிறது.கண்டிப்பாக சாப்பிட்டு பார்க்கலாம்.தலைக்கறி அம்புட்டு டேஸ்ட்...

நேசங்களுடன் 
ஜீவானந்தம்


8 comments:

  1. நாங்கல்லாம் ஏற்கனேவே அங்க சாபிட்டுவிட்டோம் ஆனாலும் ..........மீண்டும் சாப்பிட தூண்டும் பதிவு போட்டதுக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கிறோம்

    ReplyDelete
  2. எங்க ஊர் கிளையாக இருக்குமோ....?

    சகோதரி உங்களுக்கு முன்னே சென்று அறிந்து விட்டார்கள்...! ஏனிந்த தாமதம்...?

    ReplyDelete
  3. நல்லா சாப்புடுங்கடே....சாப்புட்டு அண்ணனை கடுப்பேத்துங்கடே...நாங்களும் நெல்லை போயி ஆபீசர் கையால மணக்க மணக்க சாப்புடுவோம்ல அப்போ நானும் பதிவு போடுறேம்லேய் ஹி ஹி...

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன்April 26, 2013 at 12:21 PM
    எங்க ஊர் கிளையாக இருக்குமோ....? //



    உங்க ஊர் பிரியாணி கடை பஹ்ரைனிலும் இருக்கு தனபால், போட்டோ எடுத்து போடறேன் பாருங்க.

    ReplyDelete
  5. அண்ணே சாப்பிட்டு விட்டு பதிவ போட்டு எங்கல வெருபெதுரிங்கலா

    ReplyDelete
  6. மாப்ள இது எல்லாம் நல்லதுகில்ல
    வெறுப்பேத்தப்படாது

    ReplyDelete
  7. சாப்பாட்டு பத்தி நாக்கு ஊற படிக்கனும்னா இங்கதான்யா வரனும்....

    ReplyDelete
  8. விலை ரொம்ப கம்மி... அந்தப்பக்கம் வந்தா டிரை பண்றேன்...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....