Sunday, June 2, 2013

சமையல் - அசைவம் - பால் சுறா - கருவாட்டுக்குழம்பு

வாரா வாரம் ஞாயிறு அன்னிக்கு வீட்டுல நம்ம கைவண்ணம் தான். (அன்னிக்கு மட்டும் நம்ம அம்மணிக்கு ரெஸ்ட்) இந்த வாரம் கருவாட்டுக் குழம்பு வைத்தேன்..செம டேஸ்ட்.சாப்பாட்டிற்கு இது செம மேட்ச்.அதுவும் அடுத்த நாள் பழைய சாதத்திற்கு இந்த குழம்பை தொட்டு சாப்பிட்டா இன்னும் செம டேஸ்ட்....
கருவாட்டுக்குழம்பு..
கனக்கச்சிதமா யாரு வச்சது..

நம்ம நண்பர் நாகர்கோவிலில் இருந்து போனை போட்டு நான் கோவை வர்றேன் அப்படின்னு சொல்லி பால் சுறா கருவாடு ஒரு ஐந்து கிலோ பக்கம் வாங்கி வந்துட்டாரு.இப்போ வீடு முழுக்க ஒரே கருவாட்டு வாசம்...ஆனா செம டேஸ்டா இருக்கு அதை செஞ்சு சாப்பிடும் போது.....

செய்முறை சொல்லிடறேன்.

வேண்டிய பொருட்கள்:
பால்சுறா கருவாடு - 250கிராம்
சி - வெங்காயம் - 100 கிராம்
கத்தரிக்காய் - 3
தக்காளி - 3
பூண்டு - 20 பல்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
இஞ்சி - சிறிதளவு
பட்டை, கிராம்பு, - கொஞ்சம்
கடுகு - தாளிக்க
சீரகம் - தாளிக்க
மிளகாய்த்தூள்- தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொ.மல்லி - தேவையான அளவு

 

செய்முறை :
முதலில் கருவாட்டினை தேவையான அளவு சைசுக்கு நறுக்கிக்கொண்டு உப்பு போக வெந்நீரில் ஊறவைத்து அலசிக் கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் புளி கெட்டியாக கரைத்துக்கொள்ள வேண்டும்.வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு ,கடுகு ,சீரகம்   வெந்தயம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்க வேண்டும்.பின் அரிந்த பூண்டு, நறுக்கிய இஞ்சி போட்டு வதக்க வேண்டும்.பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.பின் தக்காளி சேர்க்க வேண்டும்.வதங்கிய பின் அரிந்து வைத்து இருக்கிற கத்தரிக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.அதில் மஞ்சள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து (கருவாட்டில்  உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை) சேர்த்து வதக்க வேண்டும்.பின் கரைத்து வைத்திருக்கிற புளி தக்காளி கரைசலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்தவுடன் அலசி வைத்துள்ள கருவாட்டினை போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து நிறுத்திவிடவும்.(தேங்காய் சேர்க்க விருப்பம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம் )
பின் கொத்தமல்லி தழை போட்டு மூடிவிடவும்.சுவையான கருவாட்டு மீன் குழம்பு தயார்...

சுடச்சுட சாதம் போட்டு இந்த குழம்பை ஊத்தி பிசைந்து சாப்பிட்டா ஆஹா...அருமை....அப்படியே சுறா கருவாட்டினை கொஞ்சம் கொஞ்சமா பிச்சி சாதத்துல வச்சி சாப்பிட்டா ஆஹா...என்ன சுகம்...என்ன டேஸ்ட்.....சான்ஸே இல்ல....

இந்த பால் சுறா கருவாட்டு குழம்பு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஏற்றது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



9 comments:

  1. கத்தரிக்காய் சேர்த்தது புதிது... செய்து பார்த்திடுவோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கருவாடுன்னா கத்தரிக்காய் போட்டு சமைச்சா தான் டேஸ்ட்.நண்பரே

      Delete
  2. நான் சமைச்ச சாப்பிடற மாதிரி இருக்காதே தல

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா வேற யாரையாவது சமைக்க சொல்லுங்க

      Delete
  3. வடகம் போட்டு தாளிச்சா இன்னும் கமகம வாசத்தோடு சூப்பரா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இப்பவே ஊரை கூட்டுது....

      Delete
  4. அடப்பாவிப்பயலே இப்பிடியா நாக்குல தண்ணி ஊற வைப்பே அவ்வ்வ்வ்.....

    மணம் இங்கே வர வருதுய்யா....!

    ReplyDelete
    Replies
    1. உனக்கென்ன மாம்ஸ் ..ப்ரெஷ் மீன் கிடைக்கும் அங்க..

      Delete
  5. இது எங்கே கிடைக்கும்?

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....