Saturday, August 31, 2013

பதிவர் சந்திப்பு - கிளம்பிட்டோம் சென்னைக்கு

கிளம்பிட்டோம்...கட்டுச்சோறு கட்டிகிட்டு....
கரெக்டா வண்டி எடுத்தாச்சு..9.45க்கு....

நிகழ்காலம் எழில் அவர்களின் கைமணத்தில் தக்காளி சாதமும் கூடவே அவிச்ச முட்டையும் ,  கலாகுமரன் அவர்கள் வீட்டு அம்மணி கைமணத்தில் மஸ்ரூம் பிரியாணியும், நம்ம கை வண்ணத்தில் சிக்கன் வறுவலும் சாதமும் செஞ்சு கொண்டு வரோம்...இதப்பத்தி நம்ம ஆவிகிட்ட சொல்லவும், அதுவும் ரொம்ப ஆவலா கொஞ்சநேரம் யோசிச்சு என்ன கொண்டு வரட்டும் அப்படின்னு கேட்டுட்டு கடைசியா ஒரு பிட்டைப்போட்டான் பாருங்க...அப்படியே மெர்சலாயிட்டேன்......என்ன சொன்னான் இந்த ஆவிப்பயல் தெரியுமா...நான் வேணா வெறும் வாயை மட்டும் கொண்டு வர்றேனே.....

ஏ......நியாயமாரே....இது அடுக்குமா....?



      
சென்னை வந்தவுடன் முதல் வேலை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சமாதிக்கு போய் ஒரு கும்பிடு போட்டுட்டு வரணும்...( வந்தவங்களுக்கு மெட்ராசை சுத்திக்காட்டணும்....ஒரு வரலாறு வேணும்ல...) அப்புறம் அப்படியே மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டு தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் சாப்பிட்டுகிட்டு காலாற நடந்துகிட்டே அங்க இருக்கிற அம்மணிகளை தரிசனம் பண்ணிட்டுத்தான் பதிவர் சந்திப்பு விழா மண்டபத்திலயே கால் வைப்பேன்....ஹிஹிஹி

நாங்க வந்துட்டோம்...மறக்காம நீங்களும் விழாவிற்கு வந்துடுங்க...அங்க சந்திப்போம்...வணக்கமுங்க...

கிசு கிசு : ஏ.சி வண்டி வேற.....கை வேற நடுங்குது...சிக்கன் வாசம் மூக்கைத்துளைக்குது...கார சாரமா அவிச்ச முட்டை வேற ....என்ன பண்றது.....? சரோஜா...சாமான் நிகாலோ.......ஹிஹிஹிஹி


நேசங்களுடன்
ஜீவானந்தம்



6 comments:

  1. ஜீவா சொல்ல மறந்தது எழிலாக 4 பேர் ஆவோஜி ஆவோஜி என்று வரவேற்றனர்.

    ReplyDelete
  2. என்சாய் ...! என்சாய் ...!

    ReplyDelete
  3. ஆஹா எழில் நீங்க இரண்டு நாளைக்கு பேஸ்-புக் பக்கம் ஆப்செண்ட்டா..? கலக்குங்க.. !

    ReplyDelete
  4. என் நன்றியும் அன்பும்.

    ReplyDelete
  5. அன்பின் ஜீவா - சென்னைக்குப் போறதப் பத்தி ஒரு பதிவா - பலே பலே - நல்லாவே இருக்கு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....