Monday, September 30, 2013

கோவை மெஸ் - மீனாட்சி பவன், திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருந்தபோது தினமும் பிரியாணியா சாப்பிட்டு போர் அடிக்கவே ஒரு மாறுதலுக்காக போனது மீனாட்சிபவன்.சைவ ஹோட்டல்.மிகப்பிரசித்தமான ஹோட்டல்.காபிக்கு ரொம்ப ரொம்ப பேமஸ்.
கோர்ட் அருகே இருக்கிறது இந்த மீனாட்சி பவன்.உள்ளே நுழைகையிலேயே சைவ ஹோட்டலுக்குண்டான மணம் நம் சுவாசத்தினை எட்ட, அதன் வாசமே நன்றாக இருக்க அதை முகர்ந்தபடியே முன்னேறினோம்.செம பிஸியாக ஹோட்டல் இயங்கிக்கொண்டிருக்க நிறைய சீட்கள் ஆக்ரமிக்கப்பட்டு இருக்கவும்,  காலியான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டோம்.



ஹோட்டலுக்குள் நுழையும் முன்பே இன்றைய ஸ்பெசல் போர்டு பார்த்துவிட்ட படியால் எனது முதல் சாய்ஸ் ராகி தோசை யானது.அது வர லேட்டாகும் அதுவரைக்கும் சும்மா இருப்பது (சுத்தி முத்தி ஒரு அம்மணிகள் கூட காணோம்.திண்டுக்கல் மாதிரியே வறண்டு கிடக்கு) நல்லா இருக்காது என்பதால் பொங்கல் சொன்னேன்.
பொங்கல் செம டேஸ்ட்.வழுக்கிக்கொண்டு செல்கிறது.நல்ல நெய்மணம் ஊரையே தூக்குகிறது.அதற்கு சட்னியும் சாம்பாரும் ஏகப் பொருத்தமாக இருக்கிறது.கொஞ்சம் விள்ளல் எடுத்து சட்னியில் கொஞ்சம் சாம்பாரில் கொஞ்சம் தொட்டு நனைத்து சாப்பிட ஆகா....அமிர்தம்...கொஞ்ச நேரத்திலேயே பொங்கல் தீர்ந்து விட நமக்கு ருசியின் பசி இன்னும் அதிகமாகி போனது.அதற்குள் ராகி தோசை வந்து விடவே அதை ஒரு கைபார்த்தேன்.

கேழ்வரகு தோசை டேஸ்ட் நன்றாக இருக்கிறது.கொஞ்சம் தடிமனாக இருப்பதால் சட்னியிலும் சாம்பாரிலும் ஊறவைத்து சாப்பிட நன்றாக இருக்கிறது.தக்காளி சட்னி இந்த ராகி தோசைக்கு அருமையாக இருக்கிறது.
அப்புறம் பூரி ஒரு செட் சொல்ல அது சுட சுட ஹண்சிகா மாதிரி உப்பி இருக்க மேலே ஆவி அலைபாய்ந்தது.மசால் உடன் கொஞ்சம் தொட்டு சட்னி தொட்டு பூரி சாப்பிட சுவையோ சுவை..மொத்தத்தில் அனைத்தும் அருமை.

அதற்கப்புறம் காபி சொல்ல அதுவும் வந்து சேர்ந்தது.காபியும் அருமையோ அருமை.இந்த ஹோட்டலுக்கு காபி குடிப்பதற்காகவே நிறைய பேர் வருவாங்களால்.அவ்ளோ சுவையாக இருக்குமாம்.அதுமட்டுமல்லாமல் ஹோட்டல் வெளியே நிறைய பிரபலங்கள் காரில் இருந்து கொண்டே வெறும் காபி மட்டும் குடித்து விட்டு செல்வார்களாம்.அம்புட்டு பேமஸாம்.விலை பரவாயில்லை.அந்த ஊருக்கு ஏற்றமாதிரி இருக்கிறது.


சைவப்பிரியர்களுக்கு ஏத்த இடம்.AMC ரோட்டில் இருக்கிறது.விலையும் குறைவாக அதே சமயம் தரமாகவும் இருக்கிறது.கூடவே ஸ்வீட் ஸ்டாலும் இருக்கிறது.அந்தப்பக்கம் போனால் சாப்பிட்டு விட்டு வாங்க.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



26 comments:

  1. இங்கு எல்லாமே வறட்சி தான்... ஹிஹி...

    பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலாஜி பவன் இதை விட கூட்டம் அள்ளும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் DD...
      நெக்ஸ்ட் அங்க போறோம்..நீங்க வரீங்க...ஓகே..

      Delete
  2. காலையில் படங்களைப் போட்டு பசியை கிளரி விட்டீரே! கோவை!
    ஞாயமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா...உங்களுக்காகவே....சைவ பதிவு...

      Delete
  3. Coffee should be excellent. You had two coffees!!!!

    ReplyDelete
    Replies
    1. காபியின் சுவை ரொம்ப அதிகம்.அதனால் தான் நிறையபேர் வெறும் காபி மட்டும் சாப்பிட்டு விட்டு செல்வாராம்.ஹோட்டல்குள்ளேயே வரமாட்டாங்களாம்...

      Delete
  4. சுட சுட ஹண்சிகா மாதிரி உப்பி இருக்க மேலே ஆவி அலைபாய்ந்தது.
    >>>
    நஸ்ரியா இருந்தாதானே ஆவி அலைப்பாய்வாப்பல!! ஹண்சிகாவுக்குமா அலைப்பாயுறார்!?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா,,ஆவி அலையும் நஸ்ரியாவுக்கு மட்டும்,,,.நஸ்ரியா இல்லாத போது ஆண்ட்ரியாவுக்கு மாறலயா..அது மாதிரி தான்,,,

      Delete
  5. ஒரு ஆளு.. நூற்று முப்பது ரூபாய்க்கு சாப்பிட்டா என்னாவது? .. :( வெரி பெட் வெரி பெட்.

    ReplyDelete
    Replies
    1. என்னாகும்..கொஞ்சம் குண்டாகும்..அவ்ளோ தானே....

      Delete
  6. நல்ல சாப்பாட்டுப்பிரியர்தான். ரெண்டு காப்பி. பில்’ல உத்து உத்துப்பார்த்தேன். :P lolss

    ReplyDelete
    Replies
    1. அப்படிலாம் இல்லீங்க....கொஞ்சமாத்தான் சாப்பிடுவேன்..அன்னிக்கு நண்பர் ஒருவரும் கூட காபி சாப்பிட்டார்...

      Delete
  7. பூரி மசாலா , பார்க்கும் பொழுதே நாவில் உமிழ் நீர் சுரக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபக்...சாப்பிட்டா இன்னும் சுரக்கும்....

      Delete
  8. பார்க்கவே சுவையாக தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டாலும் சுவையாக இருக்கிறது...என்ன சைவமா போச்சு...அதான்...

      Delete
  9. சுவையாக எழுதி நா ஊற வைத்து விட்டீர்கள்! நன்றி!

    ReplyDelete
  10. Replies
    1. ஏன்பா...ஏன்...நான் சாப்பிட்டதுக்கு நான் தான் தரணும்,,,பின்ன யாரு தருவா...?

      Delete
  11. சுவைபட இருக்கிறது பதிவும்..... :)

    அது சரி எதுக்கு ரெண்டு காபி - ஒரு வேளை உங்களை கூப்பிட்டுப் போனவர் எனக்கு காபி மட்டும் போதும்னு சொல்லிட்டாரோ :)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...நன்றி....எப்படி சார் கண்டுபிடிச்சீங்க...

      Delete
  12. எனக்கு இப்பவே ராகி தோசை சாப்பிடனும் போல இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. என்னாது...இப்பவேவா...சரி..சரி கிளம்புங்க...கூட்டிட்டு போறேன்,..

      Delete
  13. நான் கோவை வருகிறேன் அங்கேயே சாப்பிடலாம்

    ReplyDelete
    Replies
    1. கோவை வந்தால் நாம வேற சாப்பிடலாம் சார்....ஐ மீன் நான் வெஜ் சொன்னேன்..

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....