Monday, October 7, 2013

சமையல் - கொழுக்கட்டை

இந்த விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு என்னோட கிராமத்துல இருந்தேன்.அப்போ சாமிக்கு படைப்பதற்காக அம்மா கொழுக்கட்டை செஞ்சாங்க .(ஒத்தாசைக்கு கூட மாட நானும் கொஞ்சம்) நாம தான் சும்மா இருக்க மாட்டோமே..உடனே அதை போட்டோ எடுத்தாச்சு....அதுதான் இப்போ இந்த பதிவு.

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 250 கிராம்
வெல்லம் அல்லது சர்க்கரை - 200 கிராம்
பொட்டுக்கடலை - 200 கிராம்
தேங்காய் - 2 மூடி
ஏலக்காய் - சிறிது
வேர்க்கடலை - கொஞ்சம்
எள் - கொஞ்சம்

முதலில் பூரணம் செய்து கொள்ளவேண்டும்.
துருவிய தேங்காயை வாணலியில் வதக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும், சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.அதில் வறுத்து உடைத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்க்கவும்.எள் சேர்க்கவும்.ஏலக்காய் பொடித்து அதில் சேர்த்து அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும்.


அடுத்து கொழுக்கட்டை மாவு 
புழுங்கல் அரிசியினை இரண்டு மணி நேரம் ஊறவைத்து பின் உப்பு சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.அந்த மாவினை  வாணலியில் எண்ணெய் விட்டு தண்ணீர் சுண்டும் வரை பதமாக வதக்கி கொள்ளவேண்டும்.அந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி குழி போல் ஆக்கி அதில் பூரணத்தினை வைக்கவேண்டும்.பின் அதை மூடி ( டிசைடிசைனாக கூட மூடலாம்) இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.பத்து நிமிடங்களுக்கு பின் கொழுக்கட்டை ரெடி...

இப்போலாம் ரெடி மேட் கொழுக்கட்டை அச்சு வருது பிளாஸ்டிக்ல.அந்த அச்சுல மாவை வைத்து பூரணம் வைத்து ஒரு அமுக்கு அமுக்கினா கொழுக்கட்டை அழகா வந்திடும்.அதை வேக வச்சா அவ்ளோதான்...ரெடி...





காரக்கொழுக்கட்டை இதே மாதிரிதான்.ஆனால் பூரணம் தேவைப்படாது.வெங்காயம், வர மிளகாய், உப்பு, சேர்த்து மாவாக ஆட்டி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லித்தட்டில் வைத்து வேக வைக்க வேண்டும்.

இதை அப்படியே சாப்பிடலாம்.இல்லையேல் சாமிக்கு படைத்துவிட்டும் சாப்பிடலாம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


14 comments:

  1. ‘அம்மா கொழுக்கட்டை’ ...
    மக்களே... ஏடா கூடமா கமெண்ட் போட்டு ’குண்டர் சட்டத்துல’ உள்ள போயிராதீங்க!

    ReplyDelete
  2. நாங்க பச்சரிசி மாவுலதான் செய்வோம்!

    ReplyDelete
    Replies
    1. பச்சரிசி கொஞ்சம் வழவழப்பா இருக்குமாம்...

      Delete
  3. அம்மாவிற்கு உதவி செய்ததற்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்....அவங்களுக்கு தானே பண்ணனும்...

      Delete
  4. Replies
    1. வாங்க காவ்யா...என்னங்க நீங்க...படம் போட்டு பாகத்தை குறிச்சிருக்கேன்,...என்னன்னு கேட்கறீங்க...
      அப்புறம் வந்ததுக்கு நன்றிங்க...

      Delete
  5. பச்சரிசி மாவு வேக வைத்தும் செய்யலாம்! அடுத்து உருண்டை கொழுக்கட்டை செய்வது பற்றி எழுதுவீர்களா? பிள்ளையாருக்கு அதுதானே படைப்பார்கள்?!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஸ்....இது சும்மா.

      Delete
  6. Nice. I miss my mother because for my love...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி...உங்க அம்மா ஆசிர்வாதம் எப்பவும் கிடைக்கும் உங்களுக்கு வருத்தப்படாதீர்கள்...

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....