Sunday, January 19, 2014

பயணம் - கோல்வா பீச் ( COLVA BEACH ), கோவா (GOA)

கோல்வா பீச், கோவா...
கோவாவில் மட்கான் (MADGOAN) என்றழைக்கப்படும் ஊரின் ரயில்வே ஸ்டேசனில் வந்து வலது காலை வைத்து இறங்கிய போது மணி அதிகாலை மூன்றாகியிருந்தது.அந்த நேரத்திலும் ரயில்வே ஸ்டேசன் ஆட்கள் நடமாட்டத்தால் மிகவும் பிஸியாக  இருந்தது.எந்தவித முன்னேற்பாடும் இல்லாத காரணத்தினால் அதிகாலை குளிரினை தடுக்க ஏதாவது செய்யனுமே என்று யோசித்தபடியே மெதுவாய் ஸ்டேசனை விட்டு வெளியேறிய போது டூவீலர் டாக்ஸி ஓட்டி ஹிந்தியில் பாத் ஹர்த்த போது கோல்வா பீச் என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் எங்களை டிரிபிள்ஸ் ஆக்கி இரவு நேரத்தில் பீச்சினை நோக்கி பயணித்தோம்..
பனி படரும் குளிரில் டூவீலரின் சத்தம் மட்டுமே கேட்க எந்த வித வாகன்ங்களும் எங்களுடன் போட்டிக்கு வராமல் தனித்தே பயணித்தோம்...இருட்டிய சாலைகளில் இரவினை துணையாகக் கொண்டு பதுங்கிக்கிடக்கின்ற தெருநாய்கள் எங்களுடன் போட்டிக்கு வந்து இயந்திர சக்திக்கு முன்னால் தோற்றுப்போனதை தாங்கமுடியாமல் வெறியுடன் குலைத்த அவைகளின் முன் எங்களின் புறமுதுகை காண்பித்து பயணித்தோம்....அனாதையாய் வெறிச்சோடிக்கிடந்த ரோட்டில் வேகமாய் பயணித்து வெகு சீக்கிரமே கோல்வா பீச் வந்தடைந்தோம்....

பொங்கல் விடுமுறையை ஒட்டி நம்மவர்களின் கூட்டத்தால் லாட்ஜ்கள் ரிசார்ட்கள் நிரம்பி வழிந்தன.டூவீலர் ஓட்டியின் கைங்கர்யத்தால் பீச்சினை ஒட்டி அமைந்துள்ள ஒரு ரிசார்ட்டில் எங்களுக்கு ஒதுங்க இடம் கிடைத்தது.விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்த அந்த அதிகாலை வேளையிலும் எங்கள் கண்களுக்கு ஆபத்பாந்தவனாக தெரிந்தான் ஃபிரீசரில் இருந்த கிங் ஃபிஷர் நண்பன்.....ஒருவனை எடுத்து திறந்து தொண்டையை நனைத்தபோது சில்லென்ற குளிர்ச்சி வந்து சேர்ந்து கொண்டது அகமும் புறமும்....அங்கிருந்து நகர்ந்தபடி ரூம் வந்து சேர, மிச்சத்தினையும் காலி செய்துவிட்டு சீக்கிரம் பீச் செல்லவேண்டிய ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தோம்.....
தங்கியிருந்த இடத்திற்கும் பீச்சிற்கும் ஒரு சில மீட்டர் தூரமே இருக்க பொடிநடையாய் நடந்து பீச்சினை அடைந்தோம்....



தென்னை மரங்கள் கரையோரம் கடலுக்கு அழகு சேர்த்துக்கொண்டிருந்தது..இன்னும் தன் விடியலை ஆரம்பிக்காத பீச் வெறிச்சோடி கிடந்தது. நேற்றைய பனியால் தற்காலிக உடை உடுத்தி இருந்த பீச்சின் வெண்ணிற மணல், ஆட்கள் வருகையினால் தன் உடைகளை களைய ஆரம்பித்தது... ஆங்காங்கே ஒரு சில பேர் மட்டும் காலை விடியலை ரசிக்க வந்திருந்தனர்....படகுக்காரர்கள் தங்கள் விற்பனையைத் துவக்க ஆரம்பித்து இருந்தனர்.மணல் மேட்டில் படகுகள், வாட்டர் கேம்ஸ் படகுகள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தன.நடுக்கடலினுள் அலைகளின் உதவியால் ஆடிக்கொண்டிருந்த சிறு படகுகள் வாடிக்கையாளர்களை கரையினில் கண்டவுடன் கரைகளை நோக்கி வர தத்தம் ஓனர்களை எதிர்பார்த்து அசைந்து கொண்டிருந்தது.பீச்சோரம் இருக்கின்ற கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்க ஆயத்தமாகினர். ஒவ்வொரு கடைக்கு முன்னும் இருக்கிற சாய்வு நாற்காலிகள் தன் மேல் வெளிநாட்டு அம்மணிகளின் உடல் படும் சுகம் வேண்டி சோபா குஷன் போட்டு காத்துக்கொண்டிருந்தன....




காலை வேளை... சுத்தமான காற்று....மெல்லிய வெயில்...அலையடிக்கும் ஆரவாரமிக்க கடற்கரை...வெண்ணிற மணற்படுக்கைகள்..நம்மைப்போலவே ரசிக்க வந்திருக்கும் வெளிநாட்டு அம்மணிகள் என ரம்மியமாக பொழுது போனது...குளிக்க ஆரம்பித்து விடலாமென்று சில்லென்ற கடல் நீரில் கால் வைத்தபோது குளிர்ச்சி உடம்பெங்கும் பரவியது..மெதுவாய் கடலினுள் நோக்கி நகர உடல் கொஞ்சம் கொஞ்சமாக நனையவும் மூழ்கவும் ஆரம்பித்தது.....எதிர் வரும் அலைகளை தாண்டி அதில் விழுந்து, புரண்டு கடலின் அலைகளோடு விளையாட்டில் ஐக்கியமானோம்.... அவ்வப்போது கடற்பரப்பினையும் பார்த்துக்கொண்டு கடந்து செல்லும் அரைகுறை அம்மணிகளின் அழகிலும் அதிசயத்துக்கொண்டே மும்முரமாய் கடலோடு விளையாடிக்கொண்டிருந்தோம்.

 ரொம்ப நேரம் கடலில் விளையாண்டதில் சீக்கிரம் களைத்துப்போகவே தாகம் தீர்க்க கடைக்கு வந்தோம்.பிரிட்ஜில் நிறைந்து இருந்த கிங் ஃபிஷர் இரண்டை எடுத்து ஒரு ஓரமாய் அமர்ந்து கடலினையும் கடந்து செல்லும் அம்மணிகளையும் ரசித்தவாறே காலி செய்ய ஆரம்பித்தோம்.....
இன்னும் இருங்குங் சாமியோவ்.....................

நேசங்களுடன்
ஜீவானந்தம்
  

22 comments:

  1. வணக்கம்
    பயண அனுபவம் பற்றிய பதிவு சூப்பர்.... ஒவ்வொரு படங்களும் மிக அழகு... வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    --அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ரூபன்....

      Delete
  2. //பொங்கல் விடுமுறையை ஒட்டி நம்மவர்களின் கூட்டத்தால் லாட்ஜ்கள் ரிசார்ட்கள் நிரம்பி வழிந்தன.//

    நம்ம மக்கள் பொங்கல் கொண்டாட கோவா வரை போறாங்களா? என்ஜாய் பண்ணுங்க...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஸ்கூல் பையா.....எங்க திரும்பினாலும் ஹிந்திக்கு அடுத்து நம்ம தமிழ் தான் கேட்குது......

      Delete
  3. கோல்வாவில் ஓட்டிய ‘வோல்வோக்களை’ பற்றிய பதிவையும் எதிர்பார்கிறோம்.
    இப்படிக்கு,
    கோவை நேர ஜொள்ளர்கள்.

    ReplyDelete
    Replies
    1. சார்...அது சென்சார்ல கட் ஆயிருச்சு......

      Delete
  4. பார்த்தா கோவா பீச் மாதிரி இல்லையே; குளுமையா ஒன்னும் காணோமே? இது கோடிக்கரை பீச் மாதிரி "காஞ்சு" இருக்கு!
    +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்...இதெல்லாம் காலையில் எடுத்த போட்டோ...வெளினாட்டு அம்மணிகள் வேற பதிவுல வருவாங்க....ரொம்ப பசுமைதான் சார்....

      Delete
  5. நல்ல பகிர்வு!என்ஜாய்!!!

    ReplyDelete
  6. துவக்கம் அருமை! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.....சுரேஷ்...

      Delete
  7. அழகான படங்கள் ஜாலியான பயணம் தொடரட்டும் அண்ணாச்சி

    ReplyDelete
  8. சூப்பர்ஜி...... பதிவர்கள் எல்லாம் சேர்ந்து போகலாமே ! அங்க போய் அடுத்த பதிவர் திருவிழா நடத்தினா என்ன ?!

    ReplyDelete
    Replies
    1. ஏற்பாடு பண்ணலாம்ஜி.....தொடர்ந்து ஒரு நாலு நாள் லீவ் வந்தால் போதும்....கலக்கிடலாம்....

      Delete
  9. இன்னமும் இருக்கா!?

    ReplyDelete
    Replies
    1. அப்போ வேணாமா.....மொத்தம் ரெண்டு நாள் தங்கியிருந்தேனே....

      Delete
  10. தொடரட்டும் பயணம்....

    நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி...சார்...

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....