Wednesday, January 8, 2014

கோவை மெஸ் - ஜூனியர் குப்பண்ணா, ஈரோடு

ஈரோட்டில் ஒரு இரவு வேளை.... பத்து மணிக்கு மேல் ஆகிக்கொண்டிருந்தது. பசி வயிற்றை பதம் பார்க்கவே எங்காவது ஹோட்டல் தட்டுப்படுமா என்று பார்வைகள் அலைமோதிக்கொண்டே வர, பார்க் செல்லும் வழியில் ஜூனியர் குப்பண்ணாவின் பச்சை போர்டு கண்களில் தட்டுப்பட்டது.ஏற்கனவே மற்றொரு பச்சை போர்டு கடையால் அதிகமாய் பசியின் தீவிரத்தில் இருந்தோம்.வியாபாரம் முடிவடையும் நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த கடையில், ஆள் அரவமின்றி இருந்த கடையில் எதுவும் கிடைக்காது போல என எண்ணிக்கொண்டே அங்கிருந்த பணியாளர்களை நெருங்கி சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்க, வாங்க சார் எல்லாம் இருக்கு என சொல்லி எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்.சந்தோசமாய் உள்ளே நுழைந்தால் நம்மளைப் போலவே நிறைய பேர் இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அதில் அம்மணிகளும் அடக்கம்...
அமர்ந்த உடனே இலை வந்து சேர்ந்தது.என்ன இருக்கு என்று கேட்க, எல்லாம் ஒப்பித்த சர்வரிடம், நாங்கள் நான்கு பேரும் பிளைன் பிரியாணி, மட்டன் தலைக்கறி, கொத்துக்கறி, சிக்கன் 65, தோசை, முட்டை தோசை, கோதுமை உப்புமா என ஆளாளுக்கு ஆர்டர் பண்ண ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது.
பிளைன் பிரியாணி குஸ்கா ரகத்தில் தான் இருந்தது.மணம் குணம் சுவை எல்லாம் ஓகே....மட்டன் பீஸ் இல்லாததால் அதைப்பற்றிய குறிப்புகள் நஹி....
அடுத்து தோசை....செம சாஃப்ட்....பிய்ப்பது கூட தெரியாமல் இருக்கிறது.ஒவ்வொரு விள்ளலாய் பிட்டு பிட்டு சட்னியிலும் கொத்துக்கறியிலும், தலைக்கறி சாந்திலும் தோய்த்து தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்..அதிலும் கொடுத்த குருமா இருக்கே செம டேஸ்ட்..பஞ்சு போல் மென்மையாக இருக்கிறது தோசை..சாப்பிட சாப்பிட செம டேஸ்ட்.கொஞ்சம் தோசை பிய்த்து ஈரல் கறியில் மடக்கி அப்படியே வாயில் போட்டால் கரைகிறது...சுவை நரம்புகள் அதிகமாய் மீட்டப்பட்டதால் சீக்கிரம் காலியாகி அடுத்த ஆர்டரும் தோசையாகிப்போனது....

பக்கத்து இலைக்கு கோதுமை உப்புமா வர அதை எடுத்து டேஸ்ட் பார்க்கையில் அதுவும் செம டேஸ்ட்...வழுக்கிக்கொண்டு போகிறது.முந்திரிலாம் போட்டு நெய் வாசத்துடன் இருக்க ஆஹா செம டேஸ்ட்..அட இது ரொம்ப நல்லாஇருக்கே என்று சொல்லவும் சுத்தியிருந்த கைகள் நீண்டு சீக்கிரம் தட்டைத் துடைத்துவிட்டன.....
சிக்கன் 65, கொத்துக்கறி, ஈரல் வறுவல் என எல்லாம் நன்றாகவே இருந்தது.
எல்லாம் சாப்பிட்டுவிட்டு கைக்கழுவச் செல்லும் போது ஒரு இடத்தின் சுவற்றில் குளிர்ந்த பாயாசம் கிடைக்கும் என எழுதியிருக்க, இதை எப்படி கைவிட்டோம் என்றெண்ணி கைகழுவி வந்தவுடன் பாயாசம் ஆர்டர் செய்தேன்..ஒரே ஒரு பாயாசம் போதும் என்று சொல்லிவிட்டபடியால் ஒன்று மட்டும் வர குடித்து விட்டு ஆகா,..சூப்பரோ சூப்பர் என சொல்ல, மற்றவர்களும் ஆர்டர் செய்ய மீண்டும் அவர்களின் ருசி அறிய வந்தது.வறுத்த சேமியா, முந்திரிலாம் போட்டு பாயாசம் ரொம்ப டேஸ்டியாக இருந்தது.ஊர் வந்து சேரும் வரை அதன் சுவை நாக்கைவிட்டு அகலவே இல்லை...
எல்லாம் முடிந்து பில் வர, விலை கொஞ்சம் கூடுதலாகவே தெரிந்தது.ஈரோட்டில் ரொம்ப பேமஸான ஹோட்டல் வேற, விலையும் அப்படித்தான் இருக்கும்....செட்டில் செய்து விட்டு வெளியேறி ரோட்டில் நின்று ஆசுவாசமாய் பேசிக்கொண்டிருக்க ஹோட்டலுக்கு எதிரில் ஈரோட்டின் பிரபல மரப்பாலம் முதலியார் மெஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு பலகை கண்ணில் பட....ஒரு நாள் இங்கு வரணும் என்று சொன்னபடியே கிளம்பினோம்.

நேசங்களுடன்

ஜீவானந்தம்

23 comments:

 1. ஹோட்டல்ல மட்டன் தலைக்கறி சாப்பிடலாமா ஜீவா!? ஆட்டுத்தலைல என்னென்னமோ இருக்குன்னுலாம் நான் படிச்சிருக்கேனே!

  ReplyDelete
 2. தலையில புழு இருக்கும்னு சொல்வாங்க....அதை வெட்டும் போது எடுத்துடுவாங்க....அப்படியே இருந்தாலும் அதுவும் அசைவம் தானே....

  ReplyDelete
  Replies
  1. // அதுவும் அசைவம் தானே.... // சூப்பரு...

   Delete
  2. என்ன தனபாலன் சார்....இப்போ பதில் கமெண்ட் போட ஆரம்பிச்சிட்டீங்க...மெயின் கமெண்ட் எங்க..?

   Delete
  3. ஐயே! நீ என்ன சைனாக்காரனா!? இல்ல ஜப்பான் காரனா!? புழு பூச்சிலாம் சாப்பிட!?

   Delete
 3. ஏன் சார் காலங்காத்தால..................ஹி!ஹி!!ஹீ!!!பகிர்வுக்கு நன்றி!(படம் பார்த்து நாக்க சப்பு கொட்டிக்க வேண்டியதான்!)

  ReplyDelete
  Replies
  1. சார்...வணக்கம்...நன்றி..உங்க வருகைக்கும்...வாழ்த்திற்கும்

   Delete
 4. நம்ம ஊர்ல சாப்பிட்டிருக்கேன்.. பிரமாதமா இருக்கும் ..

  ReplyDelete
  Replies
  1. நானும் போயிருக்கேன்...இன்னும் போஸ்ட் போடல....ரசம் ரொம்ப அருமையா இருக்கும்,..

   Delete
 5. சுவை ஜோருன்னுதும் ஒரு கட்டு கட்டிட்டீங்க போலிருக்கு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க எப்படி இருக்கீங்க....பசி அதிகமானதும் ஒரு காரணமும் கூட....

   Delete
 6. அடடா, பாத்தவுடனே பசிக்குதே....

  ReplyDelete
  Replies
  1. வாங்க பாஸ்....சாப்பிட போலாம்...

   Delete
 7. try once in kongu parotta stall

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா அந்த ஹோட்டல் என் லிஸ்ட்ல இருக்கு,....வருகைக்கு நன்றி....

   Delete
 8. ஆட அருமையான சாப்பாடு போல அண்ணாச்சி. விரைவில் ஒரு முறை போகப்பார்ப்போம் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கங் சாமியோவ்.....கண்டிப்பா போய்ப்பாருங்க....

   Delete
 9. நன்று. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வணக்கம்
  உணவகத்திற்கு நல்ல விளம்பரம்.. உணவுகளை பார்த்தவுடன் சாப்பிடச்சொல்லுது. படத்தில் இருக்குது எடுக்கமுடியது... கோவை நேரம்.......வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ரூபன்......

   Delete
 11. இங்கு சிக்கன் வகையறாவை விட மட்டன் 'மிக' டேஸ்ட் ஆக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. மட்டன். சிக்கன் ஒரு சில வகைகள் டேஸ்டாகத்தான் இருக்கின்றன....

   Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....