Saturday, January 4, 2014

ஃபேஸ்புக் துளிகள் - 1

ஃபேஸ்புக் துளிகள்
              இன்று கொஞ்சம் அதிகாலையிலேயே எழுந்து விட்ட படியால் சும்மா இருக்க வேண்டாமே என்றெண்ணத்தில் வரும் வாரத்திற்க்கான காய்கறி தேவையைப் பூர்த்தி செய்யலாமே என்று சாய்பாபா கோவில் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் சென்றிருந்தேன்.உள் நுழையும் போது ஃப்ரஷ் ஆன காலைப் பொழுதைப்போலவே மிகவும் ஃப்ரஷ்  ஆக வரவேற்றன நுழைவாயிலில் இருந்த புதினா, கொத்தமல்லி கறிவேப்பிலைகள் கொத்துகள்...
                    அந்த காலைவேளையிலும் ஏகப்பட்ட கடைகளில் காய்கறிகளும், அண்ணாச்சிகளும், வீட்டில் மனைவி பிக்கல் தாங்காமல் ஒரு சேஞ்சுக்கு காய்கறி வாங்க வந்த ஒரு சில குடும்பத்தலைவர்களும், ஓய்வு பெற்ற பெரியவர்களும் தத்தம் நேரங்களை கழித்துக்கொண்டிருந்தனர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு.....
            ஏகப்பட்ட சந்து பொந்துகளை உள்ளடக்கி நீண்டு பரந்து விரிந்து இருந்தது மார்க்கெட்.ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடிய இடைவெளியில் இருபுறமும் கடை கண்ணிகள்(கன்னிகள் என்பது சுத்தமாய் இல்லை...).
           வந்திருந்த வாடிக்கையாளர்களை வரவேற்று ஒவ்வொரு கடைக்காரரும் பேரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.பேரத்தில் முடிந்த வியாபாரம் காய்கறிகளாய் கைப்பைகளில் முடங்கியது.
           நானும் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ( படிக்கட்டுகள் இல்லாமலே ) எனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தேன் .கடைசியாய் உருளைக்கிழங்கு மட்டும் பாக்கியிருந்தது. வாங்க சென்ற கடையில் கொஞ்சம் கூடியிருந்த நால்வர் கூட்டத்தில் நானும் ஐக்கியமானேன். அக்கூட்டத்தில் ஒரு பெண்மணியும் ஒரு திருநங்கையும் அடக்கம்...அப்போது கடைக்காரருடன் உரையாடிய திருநங்கையின் பேச்சில் இரட்டை அர்த்தம் தொனிக்கவே, கடைக்காரரின் முட்டுச்சிரிப்பில் கள்ளப்பார்வையும் சேர்ந்து கொள்ள, முகம் சுளித்த பெண்மணி அடுத்த கடை நோக்கி நகர ஆரம்பித்தார்...பொது இடங்களில் பேசித்திரியும் திருநங்கைகள் சமூகத்தில் தன் மதிப்பை இழந்து கொண்டிருப்பது இந்த மாதிரி செய்கைகளில்தான்.என்ன தான் தங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று சொன்னாலும் இம்மாதிரி பேசித்திரியும் ஒரு சில வர்க்கங்களால் எப்போதும் சமூகத்தில் ஒன்று பட முடியாது.

----------------------------------------------

நூறடி ரோட்டில் ஒரு பிரபல மருத்துவமனை...நண்பரின் மனைவிக்கு பெண்குழந்தை பிறந்த சேதி கேட்டு ஆஜரானேன்...
நுழைவாயிலிலேயே ஏகப்பட்ட கூட்டம்...நிறை மாதமும் குறை மாதமுமாய் ஏகப்பட்ட பெண்டிர்கள் மருத்துவரைக்காண...உள் நுழைந்ததுமே ஆஸ்பத்திரிக்குண்டான எந்த ஒரு மணமோ சுவையோ நிறமோ குணமோ (தேங்கஸ் திரி ரோசஸ்) சுத்தமாக இல்லை...ஒவ்வொரு வார்டிலும் கர்ப்பம் தாங்கிய பெண்மணிகள், நோயாளிகள் என அவர் தம் குடும்பத்தினரோடு காத்திருக்கின்றனர்.ஒவ்வொரு முகத்திலும் விதவிதமாக கவலை படிந்த சந்தோசம் தேங்கிக்கிடக்கிறது.
         வெள்ளையுடை அணிந்த தேவதைகள் போல் நர்ஸ்கள்.... மலையாளக்கரையில் வந்தவர்கள் என அப்பட்டமாக பறை சாற்றியது அவர்களின் தாராள மனதும், நடை உடை பாவனைகளும்....கண்கள் அவர்களை நோக்கி சென்றாலும் தவிர்க்க முடியாது தத்தளித்தது மனது...சிஸ்டர் என்று அழைக்க மனம் ஒப்பாது திடப்படுத்திக்கொண்டு அவர்களை கடந்து சென்றேன்....
         முதல் புளோரில் ஐசியு அறைக்கு முன்பாக கைகளை பிசைந்தபடி நின்று கொண்டிருந்த நண்பரை சந்தித்து விவரம் கேட்டபடி அலைபாய்ந்தது மனது அறுவைச்சிகிச்சை முடிந்து வெற்றிப் பெருமிதத்துடன் வெளி வந்த இளம் டாக்டரின் ஸ்டெதஸ் கோப் செய்த புண்ணியத்தினை நினைத்தபடி....தொடர்ந்து எட்டுமாதங்களாய் ஆரம்பத்தில் இருந்து சுகப்பிரசவம் என்று நம்பிக்கை அளித்த டாக்டர் தற்போது ஏதேதோ காரணங்களைச்சொல்லி சிசேரியன் செய்துவிட்டனர்....என்று சொன்ன நண்பரை சமாதானப்படுத்திவிட்டு, நான் சொன்னது, மாசம் பொறந்து விட்டது, ஆஸ்பத்திரி வாடகை, டாக்டர்கள் சம்பளம் என ஏகப்பட்ட வேலைலாம் இருக்குல்ல அதான்...தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் அல்லவா அது போதும்....சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்கையில் சாய்வு தளத்தில் இருந்து நிறைமாதக்கர்ப்பிணியை அவசர அவசரமாக ஸ்டெச்சரில் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர் ஆஸ்பத்திரி சிப்பந்திகள்.....


நேசங்களுடன்
ஜீவானந்தம்

16 comments:

 1. கடைசியாய் உருளைக்கிழங்கு வாங்குனீர்களா...?

  உங்களுக்கும் தாராள மனது... இல்லை இல்லை திடமான மனது...! ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தன்பாலன்...வாங்காம வருவோமா....

   Delete
 2. நானும் வந்திருந்தேனே, உங்களைப் பார்க்கலையே?

  ReplyDelete
  Replies
  1. சார் வணக்கம்....நானும் பார்க்கலையே உங்களை....

   Delete
 3. உண்மைதான் .எனக்கு நார்மல் பிரசவம்ன்னு சொல்லி கடைசியில் சிசேரியன் பண்ணிடாங்க.பின் அறிந்த சேதி மாதம் இவ்வளவு தான் நார்மல் பிரசவம்ன்னு கணக்கு இருக்கு.அது முடிந்ததால் சிசேரியன் பண்ணாங்களாம்.எங்கபோய் இந்தகொடுமையை சொல்லுறது

  ReplyDelete
  Replies
  1. வாங்க....நம்ம குடும்பத்திலயும் இப்படித்தாங்க நடந்தது....முதல் குழந்தை பிறந்தை நார்மலாக பிறக்கும் போது இரண்டாவதும் நார்மலாக பிறக்க வாய்ப்பு இருக்கிறது தானே....கடைசி வரைக்கும் நம்பிக்கை அளித்து பின் சிசேரியன் ......என்ன பண்றது...

   Delete
 4. வணக்கம்
  பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு!///ஒட்டு மொத்தமாக மகப்-பேற்று மருத்துவர்களை குற்றம் சொல்லி விடக் கூடாது.தாய்க்கும்,சேய்க்கும் ஆபத்தான நிலை என்றால்??????

  ReplyDelete
  Replies
  1. எல்லாரையும் சொல்லவில்லை...ஒரு சில நல்ல டாக்டர்களும் இருக்கின்றனர்.....

   Delete
 6. ரெண்டு பக்கத்துக்கு எழுதிட்டு துளிகள்ன்னு தலைப்பு வச்சா எப்படிங்க சார்?

  ReplyDelete
  Replies
  1. துளிகள்னா....ரெண்டு சொட்டு நீலம் தான் போல....

   Delete
 7. நல்ல பகிர்வு.

  பல மருத்துவமனைகளில் இன்னொரு பிறவி என்று சொல்லப்படும் பிரசவத்தினையும் வியாபாரமாக்கி பல நாட்கள் ஆகிறது ஜீவா. இதற்கு மக்களும் ஒரு வழியில் காரணம் - நல்ல நாளில் குழந்தை பிறக்க என்னவேண்டுமானாலும் செய்யும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்!

  அது சரி உருளைக்கிழங்கு வாங்கினீங்களா..... :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சார்....நீங்கள் சொல்வதும் சரிதான்.....ம்ம்,,,,,,வாங்கிட்டேன்......

   Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....