Showing posts with label டிவி. Show all posts
Showing posts with label டிவி. Show all posts

Friday, March 16, 2012

போலிகளின் சாம்ராஜ்யம் – டிவிகள்


வர வர டிவி களுக்கு விவஸ்தை இல்லாமல் போய் விட்டது.போலிகளை ஊக்குவிக்க இவர்களும் துணை போவது தான் வருத்தமாக இருக்கிறது..(கூட நம்ம டிவி மெகா சீரியல் அம்மணிகள் வேற.ஒருவேளை அங்கேயும் நடிக்க தான் கூப்பிடறாங்களோ) காலங்காத்தால டிவி பக்கம் போனால் போதும்,ஒரு டிவியில் பெயர் மாத்தினால் போதும் உங்களுக்குஅதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் அப்படின்னு ஒரு அம்மா.... (எனக்கொரு சந்தேகம்...ஊர் ஊரா லேகியம் விக்கிற மாதிரி ஒவ்வொரு ஊரிலேயும் எப்படி லாட்ஜ் போட்டு வியாபாரம் பண்றாங்கன்னு)



 கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு ஆளு ..பார்க்க டீசண்டா இருக்காரு (ஏமாத்துவதற்கு கூட முக லட்சணம் வேணும் போல ) இவரு பேர படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும் போல..இதுல எப்படி ஞாபகம் வச்சி எழுதறது..?...அவரு வேற....




அதுக்கு அப்புறம் இன்னொரு டிவியில் சாமியார் மாதிரி இருக்கிற மாந்திரீக வாதியின் பேட்டி.. (ஆளானபட்ட நித்தியானந்தாவே போலின்னு தெரிஞ்சு போச்சு.... இவரெல்லாம் எம்மாத்திரம்)  .....



அப்புறம்...இன்னொருத்தர் .பார்க்க இளையராஜா அண்ணன் மாதிரியே இருக்காரு .வெள்ளையும் சொள்ளையுமா....



அப்புறம் என்ன.. ஏமாறுவதற்கு மக்கள் ரெடி....  ஏமாத்த இவங்களும் ரெடி.....  


நேசங்களுடன்
ஜீவானந்தம் 


இன்னும் கொஞ்சம்...

Sunday, March 11, 2012

சன் டிவி - கையில் ஒரு கோடி - எது டாப்பு....எது டிராப்பு ( SUN TV - K O K ) வைக்கப் போறாங்க ஆப்பு


எது டாப்பு....எது டிராப்பு.....

நேத்து சன் டிவியில்ஒளிபரப்பான கையில் ஒரு கோடி ப்ரோக்ராமில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட ஒரு வார்த்தை  இது...

அப்புறம்  இன்னொன்னும் கூட...

கேள்வி கேட்டு பணம் கொடுப்பது பழசு
பணம் கொடுத்துட்டு கேள்வி கேட்பது புதுசு..

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கபா ...

பிரம்மாண்ட மேடை...

கட்டு கட்டா பணம். ( அதுக்கு இரண்டு அழகான அம்மணிகள் செக்யுரிட்டி..அப்பப்ப அடுக்கி வைக்க..) நாலு பெட்டி...இரண்டு தலைப்புக்கள்..மொத்தம் ஏழு கேள்விகள். கேட்கப்படும் கேள்விக்கு முன்னரே பதில் வந்து விடுகிறது.அப்புறமா தான் கேள்வி.சரியான பதில் உள்ள பெட்டியில் பணம் அடிக்கி வைக்கவேண்டும் வேற பதிலில் சாய்ஸ் இருந்தால் அங்கும் வைக்கலாம்..ஒரு பெட்டி மட்டும் காலியாக விட வேண்டும்..மொத்தம் அறுபது செகண்ட்களில் முடிக்க வேண்டும்.இது கொஞ்சம் புதுமை...


இங்கே கேள்விகள் கொஞ்சம் பரவாயில்லை....விஜய் டிவியில் கேட்கப்படும் கேள்விகள் போல மொக்கையாய் இல்லை (ஈ அடிச்சான் காப்பி, கண்கட்டு , கழுத்துகட்டு எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால், இதுமாதிரி )

...ஆயினும் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் பதில் சொல்ல வேண்டும்.
தலைநகரம், சினிமா, இந்தியா, கலவை, அரசியல் கோவில்கள்  இதுமாதிரி தலைப்புக்கள்..
...ஈஸி போல தான் தெரிகிறது (இதுல என்ன வெடிகுண்டு இருக்கோ)....பார்ப்போம்....

என்ன அடிக்கடி இந்த நிகழ்ச்சி நடத்துபவர் அங்கும் இங்கும் ஓடி கொன்னு எடுக்கிறார்...அப்புறம் கலந்து கொள்பவர்கள் யாரும் ரொம்ப படித்தவர்கள் போல தெரியவில்லை...எங்கேயோ பிடித்து கொண்டு வந்தது போல இருக்கிறது..பணத்தை மோந்து பார்த்து வாசம் பிடிக்கின்ற ஆளுங்களா இருக்காங்க..( ம்ம் ...என்ன பண்றது...இப்படி ஒட்டு மொத்தமா பணத்த வச்சு நம்மளை அதுக்கு அடிக்ட் ஆக்கிறாங்க.....?)

போட்டியில் தோத்து போனவங்க அடிக்கிற டிராமா இருக்கே.கட்டி புடிச்சு எல்லாம் அழறாங்கப்பா ..யப்பா..சாமி முடியல...


அதுக்கு  அப்புறம் எப்பவும் போல எஸ் எம் எஸ் கேள்விகள் கேட்கிறாங்க எதுக்கு......அவங்க சம்பாதிக்க....

பாப்போம் ..போக போக தெரிந்துவிடும் இந்த ப்ரோக்ராம்...
டாப்பா....இல்ல டிராப்பா... 

இதுக்கு முன்னோடி விஜய் டிவி ஒரு கேடி

அதுக்கும் முன்னோடி ராஜ் டிவி - ஏமாத்து வேலை

நேசங்களுடன் 
ஜீவானந்தம்











இன்னும் கொஞ்சம்...

Thursday, March 1, 2012

விஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....

 விஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....
எதேச்சையாக இன்னிக்கு டிவி பக்கம் ஒதுங்குனதில் சூர்யா நடத்துகிற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற ப்ரோக்ராம் பார்க்க நேர்ந்தது..பார்த்தவுடன் ஏன்டா பார்த்தோம் என்றாகி விட்டது.கேள்வியா அது...ரொம்ப கேனத்தனமா.....(இதை விட பொருத்தமான வார்த்தை இல்லை ).இத பார்த்தோம் எனில் இருக்கிற கேள்வி ஞானம் , பொது அறிவு எல்லாம் போய் தொலைந்து விடும் என்று நினைக்கிறேன்.இதுக்கா இம்புட்டு விளம்பரம்...இத நடத்த சூர்யா வேற....எப்படித்தான் இவரோட அகரம் பவுண்டேசன்ல புள்ளைங்க எல்லாம் படிக்குதோ...அப்படின்னு மக்கள் நினைத்து விட மாட்டார்கள் ....? எப்படியோ சம்பாதிக்கணும் அப்படின்னு களத்துல இறங்கிடுச்சு இந்த விஜய் டிவி.அப்புறம் என்ன பண்றது...மக்களை கவர வேற வழி....சூர்யா ஓகே. கேள்வி ரொம்ப மட்டமா இருந்தாதான் TRP ரேட் ஏறும்...ஏற்கனவே SMS  அனுப்பி ஏகப்பட்ட கோடிகளை சம்பாதித்து விட்டது .இனி வருவது எல்லாம் லாபமே....என்ன பண்றது...ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரையில் இவர்களுக்கு கொண்டாட்டம் தான்.





 இன்னும் என்னென்ன வெல்லாம் கேட்பாங்களோ...
நயனோட கடைசி காதலன் யார் ..?.
A )சிம்பு B ) ஆர்யா c ) பிரபு தேவா D ) விஜய் 
விஜய் யின் துப்பாக்கி யில் உள்ள தோட்டா எத்தனை.?
A ) 6            B ) 4                c ) 3              D )      ௨
அம்புலி எந்த வகை படம்
A ) 5D           B ) 4 D           C )   3 D     D )      7D

இதை விட மோசமா இன்னொண்ணு இருக்கு ..ராஜ் டிவி
அய்யா சாமிகளா....ஆளை விடுங்கப்பா/////////

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 23, 2011

ராஜ் டிவி - ஏமாத்து வேலை

ராஜ் டிவி யில் மறுபடியும் அந்த ப்ரோக்ராம் பார்த்தேன் ....எப்படியெல்லாம் பதில் சொல்லி நம்மளை போன் பண்ண வைக்கிறாங்க..இதுவும் ஒரு வகையில் மனோ வசியம் மாதிரித்தான் ....தப்பு தப்பா பதில் சொல்லுறத பார்த்து நாம போன் பண்ணலாம் அப்படின்னு தூண்டறது .....மக்களே தயவு செய்து போன் பண்ணி ஏமாந்து விடாதீர்கள் ...


இன்னிக்கு காட்டின படத்துல விஜயகாந்த் , மம்முட்டி இருக்காங்க ..ஆனா பதில் சொன்ன எல்லாரும் , கார்த்திக் பிரபு , ராஜ்கிரண் , மோகன் , மாதவன் மோகன்லால் , பிருதிவி கார்த்திக் , அப்படின்னு ப்ரோக்ராம் ஆரம்பிச்ச நேரத்துல இருந்து இப்படியே தப்பு தப்பா சொல்றாங்க..அப்புறம் நமக்கு என்ன தோணும் நாம ஏன் முயற்சி பண்ண கூடாது அப்படின்னு.கை வேற பரபர ன்னு அரிச்சுக்கும்.பரிசு தொகை வேற அதிகம்.விழுந்தா லக்கு தான் அப்படின்னு நினைச்சு போன் பண்ண ஆரம்பிப்போம்.அப்புறம் தான் இருக்கு உங்களுக்கு சங்கதி.சும்மா வெயிட்டிங்ல உங்கள போட்டு உங்க பைசாவ அபகரிச்சு விடுவாங்க. ....அப்புறம் என்ன அவங்க காட்டில மழைதான்....நமக்கு .....நம்ம  போன் பில் எகிறிடும்.....
இப்போ  ராஜ் டிவி மட்டுமில்லீங்க .வடக்கத்திய சேனல் கூட இப்படி ஏமாத்தறாங்கோ.


இவங்களுக்கு  அண்ணன் ..விஜய் டிவி ஒரு கேடி 

அதுக்கும் மேல இன்னொருத்தர் சன் டிவி --கையில் ஒரு கோடி


நேசங்களுடன்  
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, March 5, 2011

ராஜ் டிவி

ராஜ் டிவி ல ஒரு ப்ரோக்ராம் பார்த்தேன் .



சரியான ஏமாத்து பேர்வழிங்க .ஒரு நடிகர் முகத்த கொஞ்சம் மறைச்சு இவர் யாருன்னு சொன்னா 30000 பரிசாம்.இந்த வாரம் நம்ம சூர்யா விக்ரம். பார்த்த வுடனே சொல்லிடலாம் .ஆனா கால் பண்ணின எல்லாரும் தப்பு தப்பா சொன்னாங்க.ஒருத்தர் ஜீவா ஆர்யா அப்படினு சொல்றான், இன்னொருத்தன் மாதவன் சிவா அப்படின்னு சொல்றான் .ஒருத்தரும் சரியாய் சொல்லல. டைம் போய்ட்டு இருக்கு, கடைசியில 5000 பரிசு சொல்லி ஒருத்தர் சரியாய் சொன்னார்.எனக்கென்ன சந்தேகம் னா இவங்களே போன் பண்ணி தப்பு தப்பா சொல்லுவாங்களோ அப்படின்னு ..ஒரு நிமிடத்துக்கு 10 ரூபாய் ...எவ்ளோ பேரு கால் பண்ணி பண்ணி காசை இழந்திருப்பாங்க.நம்ம ஆளுகளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல .எந்த முட்டாள் பயலாவது 30000 பணம் தருவானா? கிட்டத்தட்ட ஒரு100 பேரு 10 நிமிடம் கால் பண்ணினா 1000 x 10 = 10000 ...அம்மாடியோவ் ...எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க...இதுல வெய்டிங் வேற ....
இன்னும் கொஞ்சம்...