Wednesday, March 23, 2011

ராஜ் டிவி - ஏமாத்து வேலை

ராஜ் டிவி யில் மறுபடியும் அந்த ப்ரோக்ராம் பார்த்தேன் ....எப்படியெல்லாம் பதில் சொல்லி நம்மளை போன் பண்ண வைக்கிறாங்க..இதுவும் ஒரு வகையில் மனோ வசியம் மாதிரித்தான் ....தப்பு தப்பா பதில் சொல்லுறத பார்த்து நாம போன் பண்ணலாம் அப்படின்னு தூண்டறது .....மக்களே தயவு செய்து போன் பண்ணி ஏமாந்து விடாதீர்கள் ...


இன்னிக்கு காட்டின படத்துல விஜயகாந்த் , மம்முட்டி இருக்காங்க ..ஆனா பதில் சொன்ன எல்லாரும் , கார்த்திக் பிரபு , ராஜ்கிரண் , மோகன் , மாதவன் மோகன்லால் , பிருதிவி கார்த்திக் , அப்படின்னு ப்ரோக்ராம் ஆரம்பிச்ச நேரத்துல இருந்து இப்படியே தப்பு தப்பா சொல்றாங்க..அப்புறம் நமக்கு என்ன தோணும் நாம ஏன் முயற்சி பண்ண கூடாது அப்படின்னு.கை வேற பரபர ன்னு அரிச்சுக்கும்.பரிசு தொகை வேற அதிகம்.விழுந்தா லக்கு தான் அப்படின்னு நினைச்சு போன் பண்ண ஆரம்பிப்போம்.அப்புறம் தான் இருக்கு உங்களுக்கு சங்கதி.சும்மா வெயிட்டிங்ல உங்கள போட்டு உங்க பைசாவ அபகரிச்சு விடுவாங்க. ....அப்புறம் என்ன அவங்க காட்டில மழைதான்....நமக்கு .....நம்ம  போன் பில் எகிறிடும்.....
இப்போ  ராஜ் டிவி மட்டுமில்லீங்க .வடக்கத்திய சேனல் கூட இப்படி ஏமாத்தறாங்கோ.


இவங்களுக்கு  அண்ணன் ..விஜய் டிவி ஒரு கேடி 

அதுக்கும் மேல இன்னொருத்தர் சன் டிவி --கையில் ஒரு கோடி


நேசங்களுடன்  
ஜீவானந்தம்

2 comments:

  1. அய்யோ... அய்யோ ... அது லைவ் ப்ரோக்ராம் வேற இல்ல.. கண்ட கண்ட நேரத்திலும் ஒளிபரப்புறாங்க... இது தொலைபேசி சேவை தரும் நிறுவனமும்(நிறுவனங்களும்) ராஜ் டிவி அல்லது/ மற்றும் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் இணைந்து ஷேர் பேசிக்கொண்டு நடத்தும ஏமாற்று சம்பாத்தியம்.. சந்தேகம் இருந்தால் மேலும் விபரங்களுக்கோ அல்லது அவ்வாறு நடத்த ஆலோசனைக்கோ தொடர்பு கொள்ளுங்கள்..--ரோமிங் ராமன் .

    ReplyDelete
  2. எனது தளத்துக்கு வந்து பின்னூட்டமிட்டதுக்கு நன்றி. உங்கள் ஆக்கங்களை நான் மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....