கொச்சின் பக்கம் இருக்கிற ஆலுவா அப்படிங்கிற ஊருக்கு போய் இருந்த போது அங்க ஒரு இடத்துல நின்னுகிட்டு இருந்தேன் .அப்போ ஒரு மஞ்ச நிற வண்டி வந்தது .அதை ரோடு ஓரமா நிறுத்தி ரெண்டு சேட்டன் மாரு இறங்கினாங்க .கொஞ்ச நேரத்துல இருக்கிற எல்லா கதவையும் திறந்து நடமாடும் ஹோட்டல் ஆக்கிட்டாங்க
உள்ளே நூடுல்ஸ், பிரியாணி, பீப் கறி, அப்பம், அப்படின்னு ஏகப்பட்ட வகைகள்.வரும் போதே கொண்டு வந்த எல்லாம் சுட சுட ரெடி பண்றாங்க.வெளியே புட்டு , சாயா (டீ) ரெடியா இருக்கு.வண்டிக்கு மேல இருந்து டேபிள், சேர், எடுத்து போட்டு ஒரு சாமியானா கட்டி ஹோட்டல் ஆக்கிட்டாங்க.11 மணி வரைக்கும் கடை இருக்குமாம்.4 மணிக்கே வந்து கடையை விரிச்சிடறாங்களாம்.நான் புட்டும் சுண்டலும், கப்பா வும் வாங்கி சாப்பிட்டேன் .மறக்காம நம்ம பேவரிட் புல்ஸ் ஐ வாங்கி சாப்பிட்டேன்.எல்லாம் சுவையோ சுவை ....
புல்ஸ் ஐ அப்படீனா நம்ம ஊரு ஆப்பாயில் ங்க..மாட்டோட கண்ணு மாதிரி இருக்கிறதால் இது புல்ஸ் ஐ..எப்படியெல்லாம் பேரு வைக்கிறாங்க பாருங்க.
ரோட்டோர கடை என்பதினால் நல்ல கூட்டம் அள்ளுது..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
தொடர்ந்து எழுதுங்க..வாழ்த்துக்கள்
ReplyDeleteஅப்பிடியே "word verification 'ஐயும் எடுத்துவிட்டால் கமென்ட் பண்ண இலகுவாக இருக்கும்.
ReplyDeleteதிரட்டிகளில் இணையுங்கள் பதிவுகளை...வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்...
வாழ்த்துக்கள் !
ReplyDeleteவணக்கம்...உங்கள் இரண்டு பக்கப் பதிவுகள் பார்த்தேன்.சின்ன சின்னதாக அத்தனையும் சுவாரஸ்யம் புதுமை.நீளமான வாசிப்பும் சிலசமய, அலுப்பையே தரும்.தொடருங்கள் !
ReplyDeleteஇந்த ஹோட்டல் மிகவும் புதுமை.நல்ல முயற்சியுள்ளவர்கள்.சில சாப்பாடுகள் சொல்லியிருகிறீர்கள்.என்னவென்று புரியவில்லை.என்ன...எப்படிச் சமைப்பது என்று கேட்டும் போடலாமே !
வந்த அனைவருக்கும் நன்றி
ReplyDelete