Monday, October 31, 2011

சூரி.....வெண்ணிலா கபடி குழு

சூரி...
தற்போது வெள்ளித்திரையில் பவனி வரும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.காமெடியில் தற்போது பிரபலம் அடைந்து வரும் சூரி அவர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு.



தமிழ் திரை உலகில் காமெடியனாக  முன்னேறி கொண்டு இருக்கும் சூரி மதுரை மாவட்டத்தில்  ராஜாக்கூர் என்னும் ஒரு சிற்றூரில் பிறந்து இன்று சென்னையில் மையம் கொண்டுள்ள காமெடி புயல்.இவர் ஆரம்பத்தில் திரையுலகில் நுழைய பட்ட கஷ்டங்கள் ஏராளம்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக உள்ளே நுழைந்து திரை உலகில் காலடி வைத்தார்.இவரின் முதல் படம் கார்த்திக் நடித்த கண்ணன் வருவான்.பத்தோடு பதினொன்றாக நடித்த படம்.பின்னர் ஜி.இந்த படத்திலும் அப்படியே.அப்புறம் காதல் படத்தில் முதன் முதல் ஆக  டயலாக் உடன் பேசி நடித்தார்.அதற்கு அப்புறம் தீபாவளி என்ற படத்தில் கொஞ்சம் நிறையவே பேசி நடித்தார்.அதன் பின்னர் நல்ல வாய்ப்புக்கு எதிர்பார்த்த போது தான் சுசீந்திரன் என்ற அற்புத விளக்கு அவரை ஏற்றி வைத்தது.வெண்ணிலா கபடி குழுவில் இடம் பெற்ற சூரி நகைச்சுவை கலந்த குண சித்திர வேடத்தில் படம் முழுவதும் வந்து கலக்கி இருப்பார்.



பரோட்டா சாப்பிடும் காட்சியில் தான் அவரது முகம் பரிட்சியம் ஆனது.அதன் பின்னர் தான் அவர் தமிழகம் முழுவதும் தெரிய ஆரம்பித்தார்.அப்புறம் நாய்க்குட்டி என்ற ஒரு படத்தில் இரண்டாவது கதா நாயகனாக  நடித்து இருந்தார்.படம் பப்படம் ஆகவே மறுபடியும் முயற்சி.அப்புறம் களவாணி படம் கை கொடுத்தது .கஞ்சா கருப்பு வுடன் இவர் அடித்த லூட்டி மிகவும் ரசிக்க தகுந்தவை..


மீண்டும் அற்புத விளக்கு சுசீந்திரன் நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கின் நண்பன் வேடத்தில் நடிக்க வைக்க மீண்டும் தெரிய ஆரம்பித்தார்.


அப்புறம் குள்ள நரிக்கூட்டம், போடி நாயக்கனூர் கணேசன், அழகர் சாமியின் குதிரை , பிள்ளையார் தெரு கடைசி வீடு என நிறைய படங்களில் நடித்து இருந்தாலும்





இளைய தளபதி விஜய் உடன் நடித்த வேலாயுதம் படம் மிக வெற்றியை கொடுக்க இப்போது நிறைய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.


பாராட்டுகளும் விமர்சனங்களும் நிறைய குவிந்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்.அதுவும் தளபதியும் இயக்குனர் ராஜாவும்  பாராட்டியதில் மனுஷர் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார்.விஜய் உடன் நடித்த சந்தோஷத்தில் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறார்.(ட்ரெயின் காமடியில் ரொம்ப கலக்கி இருப்பார்.கண்ணில் நீர் வர கூடிய காமெடி அது.)அப்புறம் தற்போது சசி குமாரின் போராளி படம் முடிவடைந்து திரைக்கு வர காத்திருக்கிறது.அந்த படம் இன்னும் தன்னை மேலே கொண்டு போகும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் .இவர் இன்னும் மென் மேலும் பல வெற்றிகளை பெற நாமும் வாழ்த்துவோம்......

கிசுகிசு  : சூரி எனது நண்பர் என்கிற முறையில் தனிப்பட்ட பதிவு ....
நேசங்களுடன்
ஜீவானந்தம் 


4 comments:

  1. உங்கள் நண்பனின் திறமைகளை பிறர் அறியவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துக்கு வாழ்த்துக்கள் சகோ .அத்துடன் உங்கள் நண்பன் இந்தத் துறையில் நிறையவே சாத்திக்க என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ...........

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி .வாழ்த்துக்கள் அம்பாள்

    ReplyDelete
  3. சூரி வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....