நீங்கள் அறிய வேண்டிய உண்மைகள் :
தினமும் விபத்து மற்றும் நோய் வாய்ப்பட்டோரோருக்கு மருத்துவமனைகளில் போதிய ரத்தம் தேவை படுகிறது
3 -6 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.ரத்தம் கொடுப்பது எளிது. 10 -15 நிமிடங்கள் மட்டுமே செலவாகும்.பெரிதாக வலி இருக்காது. நீங்கள் கொடுக்கும் ரத்தத்தை உடல் 8 வாரங்களில் ஈடு கட்டி விடும்.
சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் இருக்கும். அதில் இருந்து வெறும் 300 முதல் 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே ரத்த தானத்தின் போது எடுக்கப்படும்.
தொடர்ந்து ரத்த தானம் செய்பவர்களுக்கு நெடுநாள் வாழ வாய்ப்புண்டு.
ரத்த தானம் செய்பவர்களுக்கு மூளை மற்றும் இருதய அடைப்புகள் குறைவாகவே வருகின்றன என்பது மருத்துவ ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒன்றாகும்.
தொடர்ந்து ரத்த தானம் அளியுங்கள் ..பல உயிர்களை காக்க உதவுங்கள்....
ரத்தம் கொடுப்பதற்கு உறவு தேவையில்லை. குருப் மட்டுமே போதும்
ரத்தம் உங்களிடம் இருந்து பெரும் போது அனீமியா, ரத்த அழுத்தம், உடல் எடை, ஹெபாடிடிஸ் பி, ஹெபாடிடிஸ் சி, எய்ட்ஸ், பால்வினை வியாதிகள், மலேரியா போன்ற சோதனைகளை கண்ட பின்பே பெறுகிறார்கள்.
ரத்தத்தின் வகைகள்
ஏ, பி, ஓ, ஏபி.
அதிலும் ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன.
June 14 உலகம் முழுவதும் ரத்த தான தினமாக கடைபிடிக்கபடுகிறது
சில துளிகள் :
கோவை யில் உள்ள அனைத்து ரத்த வங்கி களிலும் ரத்தம் செலுத்தி இருக்கிறேன்.
சேவை மனப்பான்மையுடன் 14 தடவை இது வரைக்கும் கொடுத்து இருக்கிறேன்.எனது வகை ஓ நெகடிவ் ஆதலால் மிகவும் அரிதானவை.நோயாளிகளை நேரில் கண்ட பின்பே இது வரைக்கும் கொடுத்து இருக்கிறேன். (யாரும் வாங்கி வச்சு வித்துடக் கூடாது அல்லவா..:)
கோவையில் உள்ள Blood Donar Association இல் உறுப்பினராக உள்ளேன்.
எந்த வகை இரத்தம் என்றாலும், மருத்துவரின் அனுமதியோடு வரும் நபர்கள் தொடர்பு கொள்ளலாம்.
எனது போன் நம்பர் : 99653 31401 .
தகவலுக்கு நன்றி.
ReplyDelete14 முறை Donate பண்ணி இருக்கீங்களா. சூப்பர்'ங்க.
நன்றி. அருண்...
ReplyDeleteசார் அருமையான தகவல்..ரத்த தானத்தில் தங்களது மனதை கண்டு வியக்கிறேன்.தொடரட்டும் உங்கள் சேவை மனப்பான்மையும் எழுத்து வண்னமும்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஉயிர் காக்கும் சேவையை செய்து வறீங்க. வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteவாங்க தல....நன்றி
ReplyDeleteவாங்க ராஜி ...நன்றி...
ReplyDeleteவணக்கம், குமரன் ..நன்றி
ReplyDeleteமிகுந்த மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் சேவையை. பதிவர் சீனா ஐயா கூட O நெகடிவ் தான். அவரும் பல முறை ரத்த தானம் செய்தவர்
ReplyDeleteவாங்க மோகன் ..நன்றி
ReplyDelete""சேவை மனப்பான்மையுடன் 14 தடவை இது வரைக்கும் கொடுத்து இருக்கிறேன்.""
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா .சிறப்பா எழுதி இருக்கீங்க .
""எனது வகை ஓ நெகடிவ் ஆதலால் மிகவும் அரிதானவை.நோயாளிகளை நேரில் கண்ட பின்பே இது வரைக்கும் கொடுத்து இருக்கிறேன். (யாரும் வாங்கி வச்சு வித்துடக் கூடாது அல்லவா..:)""
நல்ல அணுகுமுறை