சென்னையில் இருந்த போது நான் எடுத்த போட்டோக்கள்.
பாரிஸ் கார்னர் இல் ஏகப்பட்ட நெரிசல் .கிருஸ்துமஸ் ஆதலால் நிறைய கூட்டம்....யப்பா .. என்னா கூட்டம்....வண்டி பார்க் பண்ண இடமே கிடைக்கல.நாம நகரவே வேணாம் ..அப்படியே கூட்டம் தள்ளிகிட்டு போகுது.பரபரப்பா விற்பனை நடக்குது.பேன்சி பொருட்கள் நிறைய கிடைக்கிறது.எல்லாம் மகளிர் கூட்டம் தான்..வித வித மாய்...கண்ணுக்கு குளிர்ச்சியாய் ....
அப்புறம் எல்லாம் சேட்டு கடைகள் தான் அதிகமாய் இருக்கிறது.அவங்க பேசுற தமிழ கேட்டால் போதும் நமக்கு மறந்திடும் போல இருக்கு ஒரு பய பில் தரல.அரசாங்கம் இவங்களை கவனிச்சா போதும்..நல்ல வருவாய் கிடைக்கும் .(ஒருவேளை இவங்க அரசாங்கத்தை கவனிக்கிறாங்களோ என்னமோ தெரியல ..).நிறைய பிளாட்பாரம் கடைகள் தான் ...அப்புறம் எம்ஜியார் அவர்களின் பல்வேறு புகைப்பட தொகுப்புகளை வைத்து இருந்தனர் ..
தேங்காய் பூ வைத்து இருக்காங்க...இது வயிற்றில் உள்ள ஒரு சில வியாதிகளை நீக்கும் என சொல்லி விற்பனை செய்து கொண்டு இருந்தனர்.அதையும் வாங்கி சாப்பிட்டு பார்த்தேன்.நல்லாத்தான் இருக்கு
இன்னும் இருக்கு ..அடுத்த பதிவில்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
போடோஸ் நல்லா இருக்கு.. அதும் m g r , தேங்காய் பூ படம் நல்லா இருக்கு
ReplyDeleteஇந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..
போட்டோக்கள் நிறைய செய்திகள் சொல்கின்றன.
ReplyDeleteநண்பர்களுக்கு
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நொடியாய்ப் பிறந்து
மணித் துளியாய் மறைந்து
புது ஆண்டாய் மலர்ந்த
பொழுதே....
வறண்ட வாழ்வும்
தளர்ந்த கையும்
உன் வரவால்
நிமிர்ந்து எழுதே!
புது வருடம் பிறந்தால்
வாழ்வு மாறும்-என
ஏங்கித் தவிக்கும்
நெஞ்சம்..
உன் வரவே
நெஞ்சின் தஞ்சம்!
இறந்த காலக்
கவலை அதனை
மறந்து வாழ
பிறந்து வா வா
என் புதிய வாழ்வே
விரைந்து வா வா!
அழுதுவிட்டேன்
ஆண்டு முழுதும்
முயன்று பார்த்தேன்
விழுந்து விட்டேன்
அழுத நாளும் சேர்த்து
மகிழ்ந்து வாழ
எழுந்து நின்று
இமயம் வெல்ல
இனிய ஆண்டே
இன்றே வா வா
நன்றே வா வா!
அன்புடன் இனியவன்
சென்னை சூப்பராத்தான் இருக்கு. தேங்காய் பூவுல கொலஸ்ட்ரால் அதிகம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்
ReplyDeleteஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்
ReplyDeleteஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்
அதையும் வாங்கி சாப்பிட்டு பார்த்தேன்.நல்லாத்தான் இருக்கு
ReplyDeleteஅட அட என்ன ஒரு குழந்தைதனம் ,ஹா ஹா அருமை நண்பரே
புகைப்படங்களும் அருமை நண்பரே
கடைசிப் படத்தால் கவுத்திட்டிங்களே.. நம்ம ஊரில் இதை பூரான் தேங்காய் என்பார்கள்...
ReplyDeleteநன்றி சகோ அந்தப்படத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
வணக்கம் ..பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி
ReplyDelete