Friday, December 16, 2011

மம்பட்டியான் - சிபியின் ஞாபகம்

இன்னிக்கு மம்பட்டியான் படம் பார்த்தேன்.ஏற்கனவே பார்த்த படம் தான் என்றாலும் இந்த படம் ஒளிப்பதிவில் மிகவும் நன்றாக இருக்கிறது.சின்ன பொண்ணு சேலை பாடலில் மீரா ஜாஸ்மின் அவ்ளோ அழகு.கேமரா மேன் க்கு ஒரு சல்யூட்.அப்புறம் பிரசாந்த் முறுக்கி கொண்டு நடித்து இருக்கிறார்.படத்தில் வசனம் அதிகம் இல்லாததால் நன்றாக இருக்கிறது.வடிவேல் உடன் அலப்பறை செய்யும் ஒரு சிறுவனின் காமெடி அருமை.சில்க் பதிலாக முமைத் கான் .பார்க்க சகிக்காத முகம்...ஒட்ட வில்லை படத்துக்கு.

படம் பார்க்கும் போது சிபியின் ஞாபகம் வந்தது.அவர் இயக்குனரிடம் என்ன என்ன கேள்விகள் கேட்பார் என்று ..
1 ) திருவிழாவில் ஆடும் முமைத் கானுக்கு காலில் தங்க கொலுசு எப்படி
2 ) மீரா ஜாஸ்மின் வீட்டில்  பிரசாந் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அடுப்பில் பாத்திரத்துடன்  இன்னமும் எரிந்து கொண்டு இருக்கும் .அது யாருக்காக சமைக்கிறார்..?
3 ) பிரசாந்த் சாட்டை அடி  50 வாங்கும் போது அவரின் உடம்பில் காயம்பட்ட வரிகள் 5  அல்லது  6 மட்டுமே இருந்தது ஏன்  ?
4 ) மீரா ஜாஸ்மின் தண்ணீர் பானையை இடுப்பில் வைக்காமல் கையில் பிடித்து கொண்டு இடுப்பில் வைத்தது போல இருக்கிறார் .ஆனால் அவர் கூட வரும் பெண்கள் சரியாய் வைத்து இருக்கின்றனர்..
இது மாதிரி நிறைய சொல்லி கொண்டு போகலாம் ...








இந்த படம் பரூக் பீல்ட்ஸ் தியேட்டரில் இன்னிக்கு ரிலீஸ்.இந்த தியேட்டரில் படம் பார்த்தே ஆக வேண்டும் என்பதினால் சென்றேன்.இங்கு மொத்தம் 6 ஸ்க்ரீன் இருக்கிறது.சத்யம் தியேட்டர் இதனை நடத்துவதால் ரொம்ப ரிச் ஆக இருக்கிறது.எல்லாம் டிஜிட்டல் மயம்.கோவைக்கு இது புதுசு.நான் பார்த்த ஸ்க்ரீனில் மொத்தம் 190 சீட்கள் என நினைக்கிறேன்.ஒளிப்பதிவு துல்லியம்.

ப்ரூக் பீல்ட்ஸ் பத்தி அடுத்த பதிவு போடறேன்.

13 comments:

  1. பாஸ்,
    ப்ரூக் பீல்ட்ஸ், தியேட்டர் கோவையில் எங்க இருக்கு ..?? ஏதாவது பழைய தியேட்டர்ரை இடிச்சு கட்டி இருக்காங்களா..??
    மம்பட்டியான் படம் தேறுமா...??

    ReplyDelete
  2. இல்லை பாஸ் .இது ஒரு ஷாப்பிங் மால்.பரூக் பான்ட் ரோட்டில் இருக்கிறது.புதிய கட்டிடம் .

    ReplyDelete
  3. இத்தனை கேள்விகளா? இயக்குனரை கேள்வி கேட்டு குடைச்சல் குடுக்க சிபி ஒருத்தர் போதுமே. இன்னொருவரும் வேணுமா? பிளாக் உலகம் தங்காது

    ReplyDelete
  4. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. அட..நல்லா இருக்கு!

    ReplyDelete
  6. வாங்க ராஜி.,..நன்றி

    ReplyDelete
  7. நான் படத்தைதான் விமர்சனம் பண்ணுவேன். நீங்க ஒரு படி முன்னுக்கு போய் தியேட்டரையும்லாம் விமர்சனம் பண்ண போறீங்களா

    ReplyDelete
  8. அருமையா சொல்லி இருக்கீங்க நண்பரே
    படம் பார்த்தேன்

    ReplyDelete
  9. உண்மைதான் இப்பெல்லாம் படம் பார்க்கும் போது சிபி சார் கேள்விகள் தான் ஞாபகம் வருது.. உங்க கேள்விகளும் நல்லா இருக்கு..
    நான் பரூக் பீல்ட்ஸ் rmkv போயிருக்கேன்.. தியேட்டர் போனதில்ல


    வாங்க வாழ்த்துங்க
    செல்லக் குட்டி பிறந்தநாள்

    ReplyDelete
  10. வாங்க சிபி...சும்மா உங்க ரேஞ்சுக்கு இல்லைனாலும் ஏதோ...

    ReplyDelete
  11. சிபி கேட்டால் எப்படி இருக்கும் என்றுதான் எழுதி இருக்கிறேன் .ரொம்ப நன்றி வந்ததுக்கு ---
    எனக்கு பிடித்தவை

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....