Wednesday, December 21, 2011

பரூக் பீல்ட்ஸ் - கோவை

பரூக் பீல்ட்ஸ் - கோவை 
கோவை மாநகரம் கண்டிராத மிகப்பெரிய வணிக வளாகம் இது.கிட்டத்தட்ட 4 .5 லட்சம்  சதுர அடி பரப்பளவில் அமைந்து இருக்கிறது.நான்கு மாடிகள் கொண்டு முதல் மூன்று தளங்களிலும்  பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கடைகள், ஹோட்டல் , ATM என பரந்து விரிந்து கிடக்கிறது.


நான்காவது மாடியில் சத்யம் சினிமாஸ் நடத்தும் 6 ஸ்க்ரீன்கள் இருக்கின்றன.முதல் முறையாக இந்த மாதிரி தியேட்டரை கோவை வாசிகள் அனுபவித்து இருக்க மாட்டார்கள். (வெளியூரில் /வெளி நாடுகளில் இருக்கிற கோவை வாசிகளுக்கு இது பொருந்தாது ).டிஜிட்டல் ஸ்க்ரீன், நல்ல இன்டீரியர் டிசைன், யுனிபார்ம் போட்ட யுவன் யுவதிகள், நல்ல சர்வீஸ்..இது போன்ற அம்சங்களை  பார்த்து இருக்கமாட்டார்கள்.




நான்கு  மாடிகளிலும் எஸ்கலேட்டர்  இருக்கிறது.லிப்ட் வர  ரொம்ப நேரம் ஆகிவிட்டால் இதில் இறங்கி தரை தளம் வந்து விடலாம்,நமக்கும் இதுல  வர நல்லா தான் இருக்கிறது. குழந்தைகளின் பொழுது போக்கே இதில் விளையாடுவதுதான்.(முதல் முதலாய் கணபதி சில்க்ஸ் , அப்புறம் போத்தீஸ்  இந்த இரண்டு நிறுவனங்களிலும் எஸ்கலேட்டர் இருக்கிறது ) நெல்லையின் புகழ் பெற்ற RMKV  சில்க்ஸ் இங்கு தான் இருக்கிறது.
கோவையில் இத்தனை மலர்களா ச்சே.ச்சே...அம்மணிகளா.... ( ஹி..ஹி ..ஹி பொண்ணுங்க தான் ) என வியக்க வைக்கும் அளவிற்கு அவ்ளோ பேரு ....இங்க தான் சுத்தி கிட்டு இருக்காங்க ...கோவையில் எந்த ஒரு பொழுது போக்கு இடம் இல்லாத காரணத்தினால் இங்கு எப்போதும் கூட்டம் அள்ளும் என்பது உறுதி..
வடகோவையில் இருந்து அவினாசி மேம்பாலம் செல்லும் பரூக் பான்ட் ரோட்டில் இருக்கிறது.காந்தி புரம் பஸ்ஸ்டாண்ட் டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

9 comments:

  1. நல்ல பதிவு, இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லி இருக்கலாம்

    ReplyDelete
  2. நன்றி..இனியவன்...என்னது ..இன்னும் விரிவா....யப்பா ..இதுக்கே கண்ணை கட்டுதே ..முயற்சி பண்றேன் .

    ReplyDelete
  3. அழகான தகவல் நண்பரே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  4. தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள்...!!!

    ReplyDelete
  5. .கோவையில் எந்த ஒரு பொழுது போக்கு இடம் இல்லாத காரணத்தினால் இங்கு எப்போதும் கூட்டம் அள்ளும் என்பது உறுதி..

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. பதிவும் நல்ல இருக்கு... படங்களும் நல்ல இருக்கு...

    பாராட்டுக்கள்..

    http://jayarajanpr.blogspot.com/2011/12/34.html

    ReplyDelete
  7. கடலை போட .. காதல் புரிய....
    brook fields vaazka

    ReplyDelete
  8. ப்ரூக் பீல்ட்ஸ் வர்ற பொண்ணுங்கள்லாம் எங்க இருந்து வர்றாங்க?

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....