Wednesday, January 18, 2012

டாக்ஸி டாக்ஸி - 40506070 - Taxi Taxi-கோவையின் பெருமை-1

டாக்ஸி டாக்ஸி

கோவையில் இருக்கும் போது பல வருசங்களுக்கு முன்பு வாடகைக்கு கார்ல போகணும்னா ரொம்ப விலை அதிக மாக இருக்கும்.அப்போ இந்த ஆட்டோ டிரைவர்கள் எல்லாம் ரொம்ப விலை சொல்லுவாங்க.அடாவடியா பேசுவாங்க. கேட்டால் பெட்ரோல் விலை அதிகமா இருக்கு அதான் என்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அங்க ஸ்டாண்ட் போட்டு வர்ற  ஆளுங்க கிட்ட  வாடகை அதிகமா கேட்டு இம்சையை கொடுப்பாங்க...அதுவும் ராத்திரி நேரம் னா அவங்க சொல்றது தான் ரேட்டு.கைல இருக்கிற மூட்டை முடிச்சை பார்த்தாலே போதும் அவங்க காட்டுல மழைதான்.

பக்கத்துல இருக்கிற கேரளாவில் கூட மீட்டர் போட்டு தான் ஓட்டுறாங்க.மீதி சில்லறை ஒரு ரூபாய் இருந்தாலும் திருப்பி கொடுத்து விடுவாங்க.ஆனா நம்மாளுங்க மீட்டர் மேல கேட்டு சூடு வைப்பாங்க.அதுவும் சொல்லி வைச்ச மாதிரி எல்லா ஆட்டோ களும் ஒரே ரேட்டு சொல்லுவாங்க.

இதெல்லாம் அனுபவிச்ச யாரோ ஒருத்தர் கோவைக்கு முதல் முதலாய் கால் டாக்சி யை அறிமுகம் செஞ்சாங்க.நிறைய கால் டாக்ஸி அறிமுகம் ஆச்சு.கூப்பிட்ட உடனே சரியான ரெஸ்பான்ஸ்.அரைமணி நேரத்தில் வந்து பிக்கப் செய்வது.எந்த இடத்தில் இருக்கிறமோ அங்கேயே வந்து பிக்கப் செய்வது என பயங்கரமாய் முன்னேற்றம் ஆச்சு.விலையும் குறைவு.

 ஆட்டோனா மூணு பேர் பின்னாடியும் டிரைவர்கிட்ட ஒருத்தரும் அரை சீட்டுல குத்த வச்சு உட்கார்ந்து வரணும்.லக்கேஜ் இருந்தா கொஞ்சம் கஷ்டம்.ஆனா கால் டாக்சியில் எல்லாம் (ஓம்னி வேன்தான்) ஏழு பேர் தாரளாமாய் போலாம்.

எத்தனையோ கால் டாக்சி இப்போ இருந்தாலும், இப்போ அறிமுகம் செய்து இருக்கிற டாக்ஸி டாக்ஸி ரொம்ப பிரபலம் ஆயிட்டு வர்றது.காரணம் என்னன்னா நல்ல மரியாதை, யுனிபார்ம் போட்ட ......அதுவும் தொப்பி போட்ட டிரைவர், முதல் முறையாய்  கம்ப்யூட்டர் பில், ஜிபிஎஸ் சிஸ்டம், சீட் எல்சீடி என டிஜிட்டல் மயம், குளிரூட்டப்பட்ட  சொகுசு வண்டி அதுவும் போர்ட் பியஸ்டா, டாடா மான்சா என வெள்ளை கலரில் சிவப்பு லோகோ என கலர் புல் காக்டைலாக வந்து இருக்கிறது.நல்ல விளம்பரம் வேற இருப்பதால் இப்போது நம்பர் ஒன் ஆக இருக்கிறது.நல்ல சேவை, நிறைவான கட்டணம், என அசத்தி கொண்டு இருக்கிறது.கோவை மட்டுமல்ல ஒருநாளில் சென்று வரக்கூடிய பேகேஜ் முறையும் இருக்கிறது.
 




                           0422 - 40506070 

இதுதான் இந்த டாக்ஸி டாக்ஸி நம்பர்.ஆனந்த் பழனிசாமி என்பவர் இந்த சேவையை தொடங்கி இருக்கிறார்.

3 comments:

  1. உபயோகமான தகவல் பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  2. கோயமுத்துருல ஆட்டோகாரனுங்க அநியாயம் ரொம்ப அதிகம்தான் ஜீவா சார் சென்னையைவிட சார்ஜ் அதிகம் மினிமம் 50 ருபாய் இவனுங்களால நான் ரொம்ப அவதிபட்டுஇருக்கேன் taxi taxi வந்தது ரொம்ப நல்ல விசயம் நல்ல உபயோகமான கட்டுரை

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....