Tuesday, January 10, 2012

வேண்டுகோள் - முதலமைச்சரின் பொது நிவாரண நிதி

தானே புயலின் கொடூர தாண்டவத்தால் சின்னா பின்ன மாகி போன கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்காகவும் பாதிக்க பட்ட மக்களுக்காக நிவாரண நிதிகளை வழங்கவும் தமிழக அரசு நன்கொடை வசூலிக்க முடிவு செய்து இருக்கிறது.

ஏதோ நம்மால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட நமது சகோதரர்கள்/சகோதரிகளுக்கு வழங்கும் படி பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் கேட்டுகொள்கிறேன்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என்ற பெயரில் காசோலைகள் அல்லது DD  மூலம் அளிக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி

அரசு இணைசெயலாளர் மற்றும் பொருளாளர்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதி
நிதித்துறை
தமிழ்நாடு அரசு
தலைமை செயலகம்
சென்னை - 600009

இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
ஏதோ என்னால் முடிந்த தொகையினை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளேன்.என்னை மாதிரியே தாங்களும் தமிழக அரசுக்கு நிவாரண நிதி அளித்து நமது கடலூர் மக்களின் இழந்து போன வாழ்வாதாரத்தை மீட்டு எடுப்போம்.

உங்களின் பார்வைக்கு  மாதிரி படிவம்.(ஹி..ஹி..ஹி..)




 இவண்

கோவைநேரம்



10 comments:

  1. விழிப்புணர்வு பதிவு. நான் அடுத்தமாதம் சௌத் போவேன் அப்போது என்னால் முடிந்த நன்கொடை கொடுக்கலாம்னு இருக்கேன்.

    ReplyDelete
  2. மாப்ள அனுப்பிடுவோம்...பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அவசரமான நேரத்தில் அவசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  4. என்னை முதல் முதலாய் நேசம் கொண்டு உறவு முறை வைத்து அழைத்த விக்கி அவர்களுக்கு கோடானு கோடி நன்றி ..மாமோய்

    ReplyDelete
  5. அப்படியா லக்ஸ்மி மேடம் ..நன்றி...

    ReplyDelete
  6. அருமையான பதிவு....கோவை நேரம்..இப்போ சேவை நேரம்!!!!! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. சார் நீங்க மிகப் பெரிய விஷயம் செய்திருக்கீங்க.
    நல்ல முன்னோடி...
    வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....