Friday, January 6, 2012

பாட்டு புத்தகம் - மலரும் நினைவுகள்ஒரு காலத்துல பள்ளி கூடத்துல படிக்கும் போது பாட்டு பாடணும்னா அதுக்கு இருந்த ஒரே வரப்ரசாதம் பாட்டு புக் தான்.பள்ளி கூடத்துல படிக்கும் போது நம்ம அம்மணிகளை இம்ப்ரஸ் பண்ண பாட்டு புக் வாங்கி படிச்சு அவங்களை கவுக்கிறது ஒரு வழியாய் இருந்தது. ரொம்ப குறைந்த விலையில் 25 பைசாவிற்கு கிடைக்கும். இதை வாங்கி பள்ளி ஆண்டு விழாக்களில் பாட்டு போட்டியில் பங்கு பெற கையில் பாட்டு புக் வைத்து பாடியது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

நான்கே பக்கம் அதில் விமர்சனம் வேற. ராகம் தெரியுதோ இல்லையோ எப்படியாவது பாடிக்கொண்டு ...ஹிஹி.ஹி......படித்துகொண்டு இருப்போம். பள்ளி இடைவேளைகளில் சத்தம் போட்டு பாடி பக்கத்து கிளாஸ் பிள்ளைகளை கவனிக்க வைப்போம்.தியேட்டர் வாசலில் , கோவில் திருவிழாக்களில், அப்புறம் முக்கியமான ஊர்களில் பிளாட்பாரம் களில் போட்டு விற்று கொண்டு இருந்தார்கள்.இப்போ கால போக்கில் அவை அழிந்து விட்டன.

இன்றும் எங்காவது ஒரு மூலையில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.அப்படி விற்பவர்களிடம் போய் வாங்கி படிக்க ஆசையாய் இருந்தாலும் கூச்சமாக இருக்கிறது, இந்த காலத்திலும் இதை வாங்கி படிக்கிறானே என்று மற்றவர்கள் பார்ப்பார்களே என்றுதான்.

கீழே இருக்கிற அனைத்தும் என் தந்தை காலத்து படங்கள்.அவர் ஆசையாய் வாங்கி வைத்து இருந்தவை.அவரின் அலமாரியை குடைந்த போது கிடைத்த பொக்கிசங்கள் இவை.
என்னை பொறுத்த வரையில் 85 டு 95 காலகட்டத்தில் வெளியான பாட்டு புத்தகங்கள் படித்து இருக்கிறேன்.அதிகமா கரகாட்டகாரன், எங்க சின்ன ராசா, காக்கி சட்டை, போன்ற படங்களை வாசித்து இருக்கிறேன்

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

9 comments:

 1. அப்பா சில வேளைகளில் இந்த சினிமா பாட்டு புத்தகங்களை பற்றி சொல்லிருக்கார்..கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கும்..தங்களது பதிவுகளை போல..நன்றி..

  ReplyDelete
 2. வாங்க குமரன்.இந்த மாதிரியான நிகழ்வுகள் எப்போதுமே மலரும் நினைவுகள் தான்.

  ReplyDelete
 3. சின்னவயதில் கிராமத்தில் இதுபோல பாட்டுபுத்தகங்கள் வாங்கி பாடல்கள் மனப்பாடம் பண்ணி இருந்திருக்கேன். மாட்டு வண்டியில் சினிமா நோட்டீஸ்கூட கொடுப்பாங்க அதுகூட வாங்கிய நினைவெல்லாம் வந்த்தது.

  ReplyDelete
 4. நான் பள்ளியில் படித்த காலத்தில் இந்த பாட்டு புத்தகங்கள் 10 பைசாவிற்கு கிடைக்கும்.(1978-79 களில்) என் தோழிகள் நிறைய வாங்கி சேர்த்து வைப்பதை பார்த்திருக்கிறேன். உங்க பதிவு எனக்கு அந்த நினைவுகளை அசைபோட வைத்தது.நன்றி.

  புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி லக்ஸ்மி மேடம் அது ஒரு இனிய அனுபவம் தானே...பாட்டு புக் கொண்டு பாடி இருப்பது.

  ReplyDelete
 6. ஓஹோ....அப்பவே பாட்டு புக் படிச்சு இருக்கீங்க,,,,உங்க ஞாபகங்களை கிளறி விட்டேனா.....நன்றி ராம்வி

  ReplyDelete
 7. அன்று சாணித் தாள் பாட்டுப் புத்தகங்கள் தந்த சந்தோசத்தை,இன்று எந்த 'பள பள' வண்ணத்தாள் புத்தகமும் தருவதில்லை.நான் ஒரு வருடம் முன்பு நடைபாதைக் கடையில் கூச்சம் விற்று இரு புத்தகங்கள் வாங்கினேன்.லட்சுமி அவர்கள் சொன்ன நோட்டீஸ்...டுமுக்கு டுமுக்கு கொட்டடித்தபடி,'வாலை மீனுக்கும்' பாட்டில் வரும் மைக் பையன் முகபாவனையோடு தூக்கி எறியப்படும் அவைகளின் நிறங்களும்,அந்த வாசனையும்..அதெல்லாம் ஒரு காலம் கண்ணு!
  http://venkatramvasi.blogspot.com

  ReplyDelete
 8. ஆரம்ப கால அனுபவங்கள் எல்லாம் இனிமையானவை நண்பரே

  ReplyDelete
 9. அருமையாய் மலர்ந்து மணம் வீசிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....