Tuesday, January 24, 2012

சென்னிமலை சரித்திரம் சிபியுடன் ஒரு சந்திப்பு

கடந்த பொங்கலன்று ஊருக்கு செல்லும் போது நாம் ஏன் பதிவுலக சக்கரவர்த்தி (ஹி..ஹி..ஹி பில்டப் போதுமா சிபி )சிபியை சந்திக்க கூடாது என்று எண்ணி அவர்க்கு போன் போட்டேன்.சிங்கமும் சிங்கிள் ஆகத்தான் இருக்கிறது என்று சொல்லியது (ஹி ஹி அவரு வீட்டுல அன்னிக்கு தொரத்தி விட்டுட்டாங்க..) காங்கேயம் வந்து போன் போட்டேன்.19  கிலோமீட்டர்ல சென்னிமலை இருக்கு அங்க வாங்க அப்படின்னு சொன்னாரு.கிளம்பினோம்.இருபுறமும் புளியமரம் நிறைய இருக்கிறது.



ரோடும் சூப்பரா இருக்கு.போற வழியில சென்னி மலை அருகில் மலையை வெட்டி ரோடு போட்டு இருக்காங்க. மலை உச்சியில் ஒரு முருகன் கோவில் இருக்கிறது (கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.)

சென்னி மலை வந்து பிராட்டியம்மன் கோவில் கேட்டு சிங்கத்துக்கு ஆக வெய்டிங்.(இந்த கோவில் இப்போ கும்பாபிசேகம் செய்ய தயார் ஆயிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்) அப்ப சிபி நம்ம மேதை கணக்குல ஊதா பச்சை கலர் டி ஷர்ட் போட்டு இன் பண்ணிட்டு அந்த கூலிங் கிளாஸ் (பிரிக்க முடியாதது சிபியும் கூலிங் கிளாஸ் யும் ) போட்டு  சும்மா ஹீரோ கணக்கா வந்து நிக்கிறாரு.அசந்துட்டேன்.அப்புறம் எங்களை அவரோட வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு.அண்ணன் ரொம்ப உபசரிச்சாரு.அப்போ அவர்கிட்ட இருந்த போன் பார்த்தேன்.1000 வது பதிவுல சொன்னமாதிரியே நோக்கியா மாடல் தான் வச்சிருந்தாரு.(ஒத்துகிட்டேன் ...உங்களுக்கு ஞாபக சக்தி ஜாஸ்தின்னு ..).
அவரு வச்சிருந்த போன் இதுதான்.


அப்புறம் சாப்பிட முறுக்கு,  மிக்சர், தண்ணி ( நம்ம தண்ணி இல்ல..ஆனாலும் குடுத்தது எல்லாம் அதுக்கு மாட்சிங்  ) எல்லாம் தந்து ரொம்ப அன்பா கவனிச்சாரு.அவரின் வரலாறுகள், பதிவுகள் போடும் முறை என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.என் பொண்ணும் அவரும்  ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க .அப்புறம் நிறைய போட்டோ எடுத்துகிட்டோம்



வீட்டுல மாட்டி இருந்த ஒரு குழந்தை போட்டோ என் கவனத்தை ஈர்த்தது.யாருன்னு கேட்டா....ஹி ஹி ஹி   நான்தான் அப்படின்னு சொன்னாரு.பதிவுலகமே பார்க்காத அவரது கவர்ச்சி போட்டோ இதுதான்.(ஹி ஹி ஹி )அவரோட இளமை கால போட்டோ இதுதான்.


சென்னிமலை சிகரம், பதிவுலக சித்தர் இதுமாதிரி நிறைய அடைமொழிகளை சொல்லி இனிய சந்தோசத்துடன் அவரிடம் இருந்து பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு விடை பெற்றோம்.
முகம்தெரியாத பதிவர்களாக பழகி நண்பர்களாக எங்களை ஒன்று சேர்த்த இந்த பதிவுலகத்திற்கு நன்றி.


கிசு கிசு : ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்னிக்கு சிபியை சென்னிமலையில் பார்க்கலாம்.

நேசங்களுடன்  
ஜீவானந்தம்

7 comments:

  1. இனிப்பெல்லாம் கொடுத்தார். இனிமையான சந்திப்பு.உங்க கூட்டத்திலே ஏதேனும் vacancy இருந்தால் நானும் மனுக் கொடுக்கலாம் என்று இருக்கேன்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கண்டிப்பா....உங்களுக்கு இல்லாமலா....?காளிதாஸ்

    ReplyDelete
  3. அடுத்த மாதம் பிப்ரவரி 19 ம் தேதிக்கு தென்காசி, குற்றலத்துக்கு ஒரு பயணம் மேற்கொள்ளுங்க தலைவா. அப்படியே என்னோட கல்யாணத்துக்கும் வந்து ஆசிர்வதியுங்கள்

    ReplyDelete
  4. உண்மையில உங்க அன்பு மழையிலதான் அன்று நான் நனைந்தேன். மறக்கமுடியாத சந்திப்பு.

    ReplyDelete
  5. அப்படியா...அன்பு மழை பொழிந்ததா ..?ரொம்ப நன்றி

    ReplyDelete
  6. அஹா.. அருமையான பதிவர் சந்திப்பு.படங்கள் சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
  7. பதிவர் சந்திப்பே மறக்கமுடியாத சந்திப்பாகத்தானே அமையும் நானும் ஈரோடு போயிட்டே இருக்கேனே சி, பி சார் ரெடியா? என்னை சந்திக்க?

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....