Monday, January 2, 2012

சதாசிவ பிரம்மேந்திரள் - நெரூர்

பதிவுலக பெருமக்களுக்கு, நண்பர்களுக்கு அனைவருக்கும் எனது  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டை முன்னிட்டு நம்ம ஊர் பக்கத்துல இருக்கிற சதாசிவ பிரம்மேந்திரள் கோவிலுக்கு சென்றேன்.நல்ல அமைதியும் மன நிம்மதியும் கிடைக்கும் இடம் என்பதில் சந்தேகமே இல்லை.சதாசிவ பிரம்மேந்திரள் அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடம் என்பதால் மிகவும் பிரசித்தி பெற்ற இடம்.காவிரி நதி கரை ஓரம் இக்கோவில் அமைந்து உள்ளது.வில்வ மரங்கள் சூழ்ந்து ஒரே அமைதியை கொண்டு இத்தலம் இருக்கிறது.காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி இங்கு குடி கொண்டு இருக்கிறார்கள்.




இப்போது மிகவும் நல்ல முறையில் பராமரிக்க பட்டு வருகிறது.சமிபத்தில் தான் இக்கோவில் புனர் அமைக்கபட்டு கும்பாபிசேகம் நடை பெற்றது.   இங்கே சற்குரு சதாசிவ பிரம்மேந்திரள் அவருக்கு அப்புறம் சதாசிவானந்தா அவர்கள் ஜீவ சமாதி ஆன இடம் இருக்கிறது.27 வருடங்கள் ஆகி இருக்கிறதாம். 

இன்னும் சில புகைப்படங்கள் அடுத்த பதிவில்

செல்லும் வழி : கரூர் டு திருமுக்கூடலூர் செல்லும் வழியில் நெரூர் அடுத்து இக்கோவில் அமைந்து உள்ளது.4 எண் பேருந்து செல்லும்.9 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் என நினைக்கிறேன்.

2 comments:

  1. படங்கள் பதிவு அருமை

    ReplyDelete
  2. அருமையான மனம் நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....