Saturday, March 17, 2012

சண்டே மார்க்கெட்(SUNDAY MARKET) - கோவையின் பெருமை - 3


    கோவையில் எத்தனையோ மார்க்கெட் கள் இருக்கு.உக்கடம் மீன் மார்க்கெட் சாய்பாபா கோவில் MGR மார்க்கெட், புது பஸ்ஸ்டாண்ட், அண்ணா காய்கறி மார்க்கெட், பூமார்க்கெட் அப்புறம் பழைய இரும்பு மார்க்கெட் இது மாதிரி நிறைய.....இத விட ஒரு மார்க்கெட் ரொம்ப பேமஸ்.....அது.....
சண்டே மார்க்கெட் ( SUNDAY MARKET ) ...(cheep and Best)

 
கோவை காந்திபுரம் நஞ்சப்பா ரோடு பார்க் கேட் சிக்னல் அருகில் இருக்கு...ஒரு நாள் மட்டுமே பல லட்சங்களில் / கோடிகளில் இங்கு வியாபாரம் சக்கை போடு போடும்.எந்த ஒரு படோபடமும், விளம்பரங்களோ இல்லாத ஏரியா...அனைத்து வகை துணிகளின் சங்கமம் இங்குதான்.அதிகம் ரெடிமேட் வகை துணிகள் இங்கு கிடைக்கும்.அதிகமா திருப்பூர் டீ சர்ட் வகைகளின் வரத்து இருக்கும்.கோவையில் உள்ள பிரபலமான கடைகளில் இருக்கின்ற விலை அதிகமான துணிகள் கூட இங்கு மிக சல்லிசாக கிடைக்கும். அனைத்து துணிகளின் விலைகள் மிக ரொம்ப குறைவாக கட்டு படி ஆகிற விலையில் கிடைக்கும்.
 
   
 கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான கடைகள் இருக்கின்றன.ஏழை பாழைகள், நடுத்தர வர்க்க மக்கள், முக்கியமா வேறு மாநில ஆட்கள் இவர்களின் துணி தேவைக்கு சொர்க்க புரியாக இந்த மார்க்கெட் இருக்கிறது.விண்டோ ஷாப்பிங் செய்யும் மேல் தட்டு மக்களின் வருகையும் அதிகமாய் இருக்கும்


 



2 ரூபாய் கர்சீப் முதல் 1000 ரூபாய் வரைக்கும் இங்கு  கிடைக்கும்.சனி மற்றும் ஞாயிறு காலையில் இருந்தே கூட்டம் மொய்க்க ஆரம்பித்து விடும்.தி நகர் ரங்கநாதன் தெரு போல கூட்டம் இல்லைனாலும் இங்கு அளவுக்கு அதிகமாகவே மக்கள் கூட்டம் மொய்க்கும்.சிறிய பரப்பளவு தான் இருக்கும்...அதற்குள் வகை வகையாய் துணி ரகங்கள்.அப்புறம் இந்த இரண்டு நாட்களில் மட்டும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல் இருந்து பார்க் கேட் வரையிலும் இரு புறமும் கடைகள் நிறைந்து இருக்கும்.

மக்களின் வருகை சாரை சாரையா இருக்கும்.இதுல நம்ம காதல் பட்சிகளும் பொழுது போக்க இடம் இல்லாமல் பார்க் சுத்தி பார்த்துட்டு அப்படியே சும்மா டைம் பாஸுக்கு வருவதும் உண்டு. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஷாப்பிங் அனுபவத்தை செலவில்லாமல் இது கொடுக்கிறது.

பேரம் பேசி வாங்கணும் இல்லை எனில் அதிக விலை கொடுக்க நேரிடும்..அவங்களே விலை ஏத்தி தான் சொல்லுவாங்க..நாம தான் அடம பிடிச்சு விலையை குறைச்சு கேட்டு வாங்கணும்.மொத்தத்தில் சண்டே மார்க்கெட் சீப் அண்ட் பெஸ்ட்....சனி ஞாயிறு களில் இங்கு செல்லலாம்.
பக்கத்திலேயே நேரு ஸ்டேடியம், வ ஊ சி பார்க், மத்திய சிறை சாலை யும் இருக்கு.
இதையும் கொஞ்சம் பாருங்க


நேசங்களுடன்
ஜீவானந்தம்

3 comments:

  1. உண்மை தான் பேரம் பேசி வாங்கணும்

    ReplyDelete
  2. ஆகா..யாருன்னே தெரியல...அனானி யா வந்துட்டாங்களே

    ReplyDelete
  3. சண்டே மார்க்கெட் பத்தி போட்டது எல்லோருக்கும் உபயோகமான தகவல் ஆனால் பழைய துணிகளை பாலீஸ் பண்ணி விக்கிறதையும் போட்டு இருந்த இன்னும் சிறப்பா இருந்துருக்கும்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....