Monday, July 9, 2012

கோவை மெஸ் - அடையார் ஆனந்த பவன் - ஹைவே ஹோட்டல்

அடையார் ஆனந்த பவன்
உளுந்தூர்பேட்டை தாண்டி சென்னை செல்லும் ஹைவே ரோட்டில் இந்த அடையார் ஆனந்த பவன் இருக்கிறது.பாரத் பெட்ரோல் பங்க்  உடன் இணைந்து இந்த ஹோட்டல் இருக்கிறது.தொலை தூரத்திலிருந்து வரும் பயணிகளின் நலனுக்காக ரொம்ப விஸ்தாரமாக , குளியல் வசதி, கழிவறை வசதி என அனைத்தும் இந்த பாரத் பெட்ரோல் பங்கில் இருக்கிறது.வெளி மாநில லாரிகளின் வருகையும் அதிகமாக இருக்கிற இந்த பங்கில்  இதன் ஒரு அங்கமாக இருக்கிற இந்த ஹோட்டலில் சாப்பிட நுழைந்தோம். 


உள்ளே ஸ்வீட் ஸ்டால் இருக்கிறது.பாணி பூரி ஸ்டால் இருக்கிறது.பழ ஜூஸ் ஸ்டால் இருக்கிறது. கூடவே ஹோட்டல் ...மினி  டிபன் இருக்கு என்று சர்வர் சொன்னதினால் அதை ஆர்டர் பண்ணினோம்.ஒரு தட்டில் மசால் தோசை, மினி இட்லி, கொஞ்சம் பொங்கல், வடை, கேசரி அப்புறம் தொட்டுக்கொள்ள மூன்று சட்னி என அழகாய் வைக்கப்பட்டு நம்மிடம் கொண்டு வந்து கொடுத்தார் சர்வர்.



கேசரி  ரொம்ப சுவை.நெய்யில் மிதக்கிறது இந்த கேசரி.வாயில் வைத்ததும் வழுக்கி கொண்டு உள்ளே செல்கிறது.(ரொம்ப கம்மியா தான் குடுக்கிறாங்க....)
       அதே போல் பொங்கலும் அருமை.சாப்டாக செல்கிறது.இட்லி ரொம்ப சின்ன சின்னதாய் பணியாரம் சைஸ் போல ரெண்டு விள்ளல்களில் முடிந்து விடுகிறது.ரொம்ப நன்றாக இருக்கிறது.மசால் தோசைக்கு வெங்காய சட்னி யும் கார சட்னியும் ரொம்ப பொருத்தம்.மொத்தத்தில் நன்றாக இருந்தது இந்த மினி டிபன்.
இன்னும்  நிறைய வகைகள் இருக்கு.காலையில் அதிகம் சாப்பிட முடியாத காரணத்தால் ஒரே ஒரு மினி டிபன் அப்புறம் காபி..
    ஹைவேயில் இருப்பதால் என்னவோ எப்போதும் கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.வரும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.இந்த ஹோட்டலுக்கு வெளியே குழந்தைகளுக்காக ஊஞ்சல், சறுக்கு என விளையாட்டு இடமும் இருப்பதால் கொஞ்சநேரம் ரிலாக்ஸ் ஆகின்றனர் பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளிடம் இருந்து..
     விலையை பார்த்தால் அடையார் ஆனந்த பவனுக்கு உரித்த விலைதான்.விலையை விட சுவை நன்றாக இருக்கிறது.மினி டிபன் 55 என்ற விலையில் தருகிறார்கள்..

கிசுகிசு: அப்புறம் இங்க வர்ற கார்களில் வந்து இறங்குகிற வித விதமான அம்மணிகள்  எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க.இதுக்காகவே இந்த மாதிரி ஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடணும்னு போல தோணுது... ஆனா பர்ஸ் பழுத்துடும்னு வேற பயமா இருக்கு....

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


9 comments:

  1. கொடுத்து வெச்சவர் சகோ நீங்க. எல்லா ஊருக்க்கும் போய் புல் கட்டு கட்டுறீங்க.

    ReplyDelete
  2. புல் கட்டு கட்டிட்டு "வீடு"சுரேஷ் மாதிரி வீங்கிறாதீகப்பூ பார்த்து சாப்பிடுங்கோ...

    ReplyDelete
  3. நான் அடையார் ஆனந்த பவன் பத்தி ஒரு பதிவு எழுதிட்டு உர்கார்ந்திருக்கேன் வட போச்சே ; பரவால்ல. கொஞ்ச நாள் கழ்சிச்சு ரிலீஸ் பண்றேன்

    ReplyDelete
  4. நீங்க நடத்துங்க மாப்ளே

    ReplyDelete
  5. 24 hours ரவுண்டிங்லதான் இருப்பீங்க போலிருக்கு ஹி ஹி ஹி!

    ReplyDelete
  6. படங்களை போட்டு நாக்கில எச்சில் ஊற வைச்சிட்டீங்க! அருமை!

    ReplyDelete
  7. நானும் அங்கே சாப்பிட்டேன் பாஸ் நல்லாத்தான் இருக்கு.

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....