Thursday, July 5, 2012

பாண்டிச்சேரி - ஒரு ஆட்டோகிராப்


பாண்டிச்சேரி - ஒரு ஆட்டோகிராப்
பாண்டிச்சேரி ஒரு சிறிய நகரமாக இருந்தாலும் மிக நேர்த்தியான கட்டமைப்பில் இருக்கிறது.எந்த ரோட்டில் சென்றாலும் பீச் செல்லும் பாதையை அடையலாம்.அப்புறம் பாண்டிக்கே உரித்தான மதுக்கடைகள் எங்கெங்கும்....என்ன தான் நிறைய மதுபான கடைகள் இருந்தாலும் முக்கியமான ரோடுகளில் அங்கங்கே நம்ம அரசியல் தலைவர்களின் சிலைகள் அலங்கரிக்கின்றன.




புதிதாய்  கட்டப்பட்டு இருக்கிற அரசு மருத்துவமனை ஜொலி ஜொலிக்கிறது.எந்த வித பரபரப்பும் இன்றி காணப்படுகிற புதுச்சேரி அரசின் சட்டமன்றம்.(இதே நம்ம ஊரா இருந்தா அவ்வளவு தான்... ரெண்டு கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் நிக்க வச்சி கேள்வியா கேட்பானுங்க..)
அப்புறம் இங்க சண்டே மார்க்கெட் ரொம்ப பேமஸ்.பழைய பொருட்கள் முதல் புதிய பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கும்.ஏழு வருடம் முன்பு இந்த சண்டே மார்க்கெட்டில் ஒரு கேசட் பிளேயர் வாங்கியது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.அதில் ஒலித்த‘’’ ஒரு வார்த்தை கேட்டு ஒரு வருஷம் காத்திருந்தேன்‘’ என்ற பாடலை மறக்க முடியாது.ஒருவேளை நயன்தாரா கூட காரணமாக இருக்கலாம். அதுக்கப்புறம் அந்த கேசட் பிளேயர் ஒரிசா வரைக்கும் சென்று ரிப்பேர் ஆனது தனிக்கதை.M.G ரோடு மார்க்கெட் அருகில் உள்ள இந்தியன் டிலைட் ஓனரிடம் பல்சர் பைக் வாடகைக்கு வாங்கி ஒட்டியது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.சந்திரமுகி படம் ரிலீஸ் ஆனபோது முதல் காட்சி பார்க்க பாண்டிச்சேரி ரசிகர்களுடன் போட்டி போட்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.அப்புறம் ரொம்ப ஓவராய் குடித்து விட்டு முதல் முதலாய் மட்டையானது, ஒவ்வொரு முறையும் கோவை வரும்போது பாக்கெட் ஒயின் வாங்கி வருவது என  என நிறைய ஞாபகங்கள்.
எப்படியோ இந்த முறை சென்ற போது அனைத்தும் ஞாபகத்தில் வந்ததில் ரொம்ப மகிழ்ச்சியே..
முந்தைய  பதிவு  

நேசங்களுடன்
ஜீவானந்தம்  

6 comments:

  1. சுவாரஸ்யம். நானும் சென்று பல வருஷம் ஆகிடுச்சு போகணும்

    ReplyDelete
  2. தவறாக நினைத்தாலும் பரவாயில்லை குடி குடியைக் கெடுக்கும் பாத்து பக்குவமா நடந்துக்கோங்க

    ReplyDelete
  3. சேரனுக்கு ஒரு ஆட்டோகிராபுன்னா மச்சிக்கு ஒரு பாண்டிச்சேரி

    ReplyDelete
  4. நண்பரே புதுவையில் வசிப்பவன் நான் அனால் குடியால் வீதிக்கு வந்த குடும்பம்களை தினம் பார்ப்பவன் உங்களின் அணைத்து பதிவுகளையும் ஒன்று விடாமல் படிப்பவன் குடியின் தீமைகளை பற்றி ஓரு பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் குறிப்பு ; கண்டிப்பாக எனக்கு குடி பழக்கம் இல்லை

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....