Tuesday, July 3, 2012

கோவை மெஸ் - ஜெர்மன் ஹோட்டல் , காரணம்பேட்டை , சூலூர்

ஜெர்மன் ஹோட்டல்
சூலூர் காரணம் பேட்டை தாண்டி சென்று கொண்டு இருக்கையில் பசியின் காரணமாக இருபக்கமும் கண்கள் தேடிக்கொண்டு இருக்கையில்  இந்த ஜெர்மன் ஹோட்டல் கண்ணுக்கு தென்பட்டது.
இது  ஒரு டிரைவ் இன் ஹோட்டல் போல.உள்ளே நுழைந்ததும் இயற்கை சூழலுடன் ஹோட்டல் ரொம்ப விஸ்தாரமாக இருக்கிறது.நல்ல காற்றோட்டத்துடன்  மிகவும் அமைதியாய் இருக்கிறது.நிறைய தனித்தனி குடில் அமைப்பில் டேபிள்கள் போடப்பட்டு இருக்கின்றன. கார் நிறுத்தும் வசதியும் குடிலுக்கு அருகிலேயே இருக்கிறது.
நாங்கள் ஒரு குடிலுக்குள் நுழைந்தோம்.ஒவ்வொரு குடிலிலும் வாஷ் பேசின் வைத்து இருக்கிறார்கள்.நாங்கள் காடை பிரை, நாட்டு கோழி வறுவல், பட்டர் நான், பிரியாணி ஒன்றும் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம்.கொஞ்ச நேரத்தில் அனைத்தும் வந்து சேர்ந்தன.
நாட்டுக் கோழி வறுவல் கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானுக்கு மிக பொருத்தமாக இருந்தது.அது போலவே மட்டன் பிரியாணியும் நன்றாக  இருந்தது.காடை செம டேஸ்ட் ஆக மொறு மொறுவென ரொம்ப சுவையுடன் இருந்தது.மொத்தத்தில் அனைத்தும் அருமை.ரொம்ப நேரம் பேசணும்... பார்க்கணும்... கூடவே சாப்பிட்டு கொண்டே இருக்கணும் அப்படின்னு இருக்கிற காதலர்களுக்கும், மத்தவங்களுக்கும் செமையான இடம்.நேரம்  போவதே தெரியாமல் கடலை போடும் ஜோடிகளுக்கு சரியான இடம்.

இது திருச்சி செல்லும் பைபாஸ் ரோட்டில் இருக்கிறதால் இங்க கார்களின் எண்ணிக்கை எப்போதும் இருக்கிறது.கார்கள், பஸ்கள் நிறுத்த நல்ல இடம் வசதி இருக்கிறது.முக்கியமாய் குடில் அமைப்புகள்...ஆட்களின் எண்ணிக்கைக்கு தகுந்தது போல குடில்களில் டேபிள்கள் இருக்கின்றன.

கிசுகிசு:.பக்கத்து குடில ஒரு க்ரூப் அம்மணிகள்......ம்ம்ம்ம்.....என்ன பண்றது ....நமக்குத்தான் இந்த மாதிரி கொடுப்பினை எல்லாம் அமைய மாட்டேங்குதே...


நேசங்களுடன்
ஜீவானந்தம்

12 comments:

  1. ரொம்ப நேரம் பேசணும்... பார்க்கணும்... கூடவே சாப்பிட்டு கொண்டே இருக்கணும் அப்படின்னு இருக்கிற காதலர்களுக்கும், மத்தவங்களுக்கும் செமையான இடம்.நேரம் போவதே தெரியாமல் கடலை போடும் ஜோடிகளுக்கு சரியான இடம்.

    நண்பா இப்போ போய் இந்த மாதிரி இடத்த சொல்லறிங்களே ! படங்கள் நாக்கில் ஊறவைத்துவிட்டன !
    கிசு கிசு !
    இனிமேல் நண்பன் சபைக்கு வரலன்னா ஜெர்மன் ஹோட்டல்ல குடில்ல தேடுனா போதும் .

    ReplyDelete
  2. அந்த பட்டர் நானையும் நாட்டுக்கோழி வறுவலையும் இங்கிட்டு தள்ளி விடுங்க பாஸ்., ஒரு வெட்டு வெட்டுவோம்!

    ReplyDelete
  3. மாப்ளே இந்த மாதிரி லோக்கேசனை தான் ரொம்பா நாளா தேடுறேன்..

    ஐட்டமும் நல்லாத்தான் இருக்கும் போல... ம்

    ReplyDelete
  4. Intersting narration. Last part on girls: You could have said fully:)

    ReplyDelete
  5. //மனசாட்சி™ said...

    மாப்ளே இந்த மாதிரி லோக்கேசனை தான் ரொம்பா நாளா தேடுறேன்..

    ஐட்டமும் நல்லாத்தான் இருக்கும் போல... ம்///

    அதாகப்பட்டது என்னவெனில், விடுய்யா! போயிப்பாத்துடுவோம் என்பதாகும்!

    ReplyDelete
  6. மேற்படி சோமபான விருந்துக்கு ஏற்ற இடமா மை லார்ட்?

    ReplyDelete
  7. //வெளங்காதவன்™ said...
    //மனசாட்சி™ said...

    மாப்ளே இந்த மாதிரி லோக்கேசனை தான் ரொம்பா நாளா தேடுறேன்..

    ஐட்டமும் நல்லாத்தான் இருக்கும் போல... ம்///

    அதாகப்பட்டது என்னவெனில், விடுய்யா! போயிப்பாத்துடுவோம் என்பதாகும்! //

    போறோம் பாக்குறோம்

    ReplyDelete
  8. நான் சைவம் அதனால எஸ்கேப்!

    ReplyDelete
  9. கிசு கிசு.. மனசு பிசு பிசு..

    ReplyDelete
  10. ஓ அங்கே அம்மணிகளும் வாராயிங்களா அப்போ ஒரு எட்டு போயிட்டு வரனுமே...?

    ReplyDelete
  11. சாப்பிட தூண்டுகிறது படங்களும் பதிவும்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....