Wednesday, July 11, 2012

வேடந்தாங்கல் - பறவைகளின் சரணாலயம்

வேடந்தாங்கல் -  பறவைகளின் சரணாலயம்

மண்வெட்டி  வாயன்
குருட்டு கொக்கு
புள்ளி மூக்கு வாயன்
தட்டவாயன்
கரண்டி வாயன்
மில்லர் அரிவாள் மூக்கன்
பாம்புத்தாரா ..................(நம்ம அம்மணி நயன்தாரா சிஸ்டர் போல..)
பெரிய தாரா
சாம்பல் நிற கூழைக் கடா
நத்தைக்குத்தி நாரை
வெள்ளை அரிவாள் மூக்கன்....

இதெல்லாம் என்னன்னு கேட்கறீங்களா...இங்க வேடந்தாங்கல் வந்து இளைப்பாறிவிட்டு போகிற வெளிநாட்டு பறவைகளின் பெயர்கள்.
(நம்மாளுங்க  எப்படியெல்லாம் பெயர் வைக்கிறாங்க பாருங்க..)

அப்புறம் நாங்க போன நேரம் சீசன் இல்லாத நேரம் அதனால் அதிகம் பறவைகளை காண முடியவில்லை.இன்னும் தங்கள் நாட்டுக்கு விசா பாஸ்போர்ட் கிடைக்காத பறவைகள் மட்டும் இன்னும் இங்க வெய்ட் பண்ணிட்டு இருக்கு.
சீசன் நேரத்தில் ஏரியில் இருக்கிற மரங்கள் எதுவுமே தெரியாதாம்.அந்த அளவுக்கு பறவைகள் குவிந்து கிடக்குமாம்.இப்போ இருக்கிற கொஞ்ச நஞ்ச பறவையும் ஒவ்வொரு  வித விதமா இருக்கிறது.ஒரு வியு டவர் ஒன்றும் இருக்கிறது.அதில் இருந்து பார்த்தால் அனைத்து பறவைகளும் தெரிகின்றன.அப்புறம் ஏரியின் நடைபாதையில் ஒவ்வொரு பறவையின் விளக்க குறிப்பு இருக்கிறது.





முழுக்க முழுக்க பறவைகள் இருப்பதால் என்னவோ சுவர் இருக்கிற இடத்துல எல்லாம் பறவைகளின் படமாய் இருக்கிறது.குடிக்க வைத்து இருக்கும் பைப் கூட ஏதோ ஒரு பறவையோ அல்லது விலங்கு முகத்துடன் இருக்கிறது.அங்க இருக்கிற டாய்லெட் சுவரில் கூட பறவைகளின் படம் வரைந்து வைத்து இருக்கின்றனர்.அப்புறம் இந்த ஏரியின் தண்ணீர் பச்சை பசேல் என்று இருக்கிறது,  இங்க இருக்கிற தேளி மீன்கள் ஒவ்வொன்றும் பறவைகள் போல் பயங்கர சைசில் இருக்கிறது. 



அப்புறம் இங்க பறவைகள் சரணாலயம் என்பதால் என்னவோ நம்ம பறவைகளும் கொஞ்சம் இருக்கு.ஆனா அதிகமா இல்ல.ஒருவேளை அவங்களுக்கும் சீசன் இல்லையோ என்னவோ...
இந்த சரணாலயம் மதுராந்தகம் ஊரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

13 comments:

  1. ரொம்ப நாளா வேடந்தாங்கல் போய் பார்க்கனும்ன்னு ஆசை. ஆனா, இன்னும் நேரம் கூடி வரலை. உங்க பதிவுல வேடந்தாங்கல் போய் வந்த மாதிரி ஒரு உணர்வு. வர்ணனை மற்றும் படத்துக்கும் நன்றிங்க சகோ.

    ReplyDelete
  2. மாப்ள.......! ஒரு பறவை கூட உங்க கேமராவுக்கு சிக்கலையா....?

    ReplyDelete
  3. வணக்கம் மாப்ளே

    கவிதை எழுதி புட்டீயலேன்னு பார்த்த அது எல்லாம் பேரா

    ReplyDelete
  4. நீ கலக்கு மச்சி, ஒரு ஊரயும் விடாத, வாஸ்கோடகாமாவுக்கு அப்புறம் கோவை ஜீவாதான்னு முடிவு பண்ணியாச்சு

    ReplyDelete
  5. //ராஜி..// அப்போ இன்னும் போனதில்லையா...நீங்க...இப்போ சீசன் இல்லை..இருக்கிற கொஞ்சம் நஞ்ச பறவைகளை வேணா பார்க்கலாம்..இனி அடுத்த மே ஜுன் ..தான்

    ReplyDelete
  6. ///வீடு சுரேஸ்// மாம்ஸ்..ஒண்ணும் சிக்கல மாம்ஸ்..எல்லாம் தூர தூரமா உட்கார்ந்து இருந்துச்சு..

    ReplyDelete
  7. //மனசாட்சி // மாம்ஸ்...இது பறவைக் கவிதை...

    ReplyDelete
  8. //இரவு வானம்///மச்சி...அந்த அளவுக்கு அபாடக்கர் இல்ல..

    ReplyDelete
  9. புள்ளி மூக்கு வாயன் - நக்கீரன்
    சாம்பல் நிற கூழைக்கடா - நாஞ்சில் மனோ
    வெள்ளை அரிவாள் மூக்கன் - நான்

    மில்லர் அரிவாள் மூக்கன் யாருன்னு தெரியலியே?

    ReplyDelete
  10. சிறிய வயதில் வேடந்தாங்கல் சென்றதுண்டு! அருமையான படங்களுடன் உங்கள் பதிவு சூப்பர்!

    ReplyDelete
  11. hii.. Nice Post
    கட்டாயம் பாருங்கள் இந்த Movie. மிகவும் அழகான படம்!.
    உங்கள் ப்ளாக் மிகவும் அருமை. நான் உங்கள் ரசிகன்.
    http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-story-tale-movie-review.html

    ReplyDelete
  12. பாம்புத்தாரா....பறவைக்குமட்டும் நம்ம அம்மணி பேரு...அழகானபறவையா அது.
    பாம்புத்தாரா ..................(நம்ம அம்மணி நயன்தாரா சிஸ்டர் போல..)

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....