முதலியார் குப்பம்
சென்னை டு பாண்டிச்சேரி ஈ சி ஆர் ரோட்டில் இந்த முதலியார் குப்பம் இருக்கிறது. இங்கு தமிழக அரசு புதிதாய் நவீன வசதிகளை ஏற்படுத்தி இருக்கிற படகு இல்லம் சென்றோம். படகு மட்டுமே இருக்கிறது. நீர் மட்டமும் குறைந்து இருக்கிறது.ஒரு ஈ காக்கா காணோம். காத்து வாங்கி கொண்டு இருக்கிறது. சனி ஞாயிறு மட்டுமே இங்கு கூட்டம் அள்ளும் என்று சொல்லியபடியே டிக்கெட் கொடுத்தார் ஊழியர்.இருபது நிமிடம் அந்த பேக் வாட்டரில் செல்ல 390 ரூபாய். மோட்டார் படகு எங்களை சுமந்து கொண்டு நீரில் மிதந்து சென்றது. அந்த பக்கம் பீச் இந்த பக்கம் மணல் திட்டு இதுக்கு நடுவுல பேக் வாட்டர்.இதுல தான் போட்டிங்.
செல்லும் போது ஒரு சில பேர் மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.ஒருவர் அப்போதுதான் கட்டுமரத்தில் தொழிலுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்படி ஒன்றும் பெரிதாய் ஈர்க்கவில்லை இந்த போட்டிங் பயணம்.நீர் சறுக்கு விளையாட்டு, பைக், பலூன் விளையாட்டு, மிதி படகுகள் என நிறைய இருக்காம் ஆனால் நாங்க போன அன்னிக்கு எதுவுமே இல்லை.தண்ணீரிலேயே போய்ட்டு தண்ணியிலேயே வந்ததால் தண்ணியிலே மிதந்த எங்களுக்கு பிடிக்கவில்லை.பீச் ஓரம் சென்று இறக்கி விட்டு கொஞ்சம் நேரம் காத்தாட விட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.அதுவும் கூட்டம் இருக்கும் போது மட்டும்தான் அங்கு சென்று இறக்கி விடுவார்களாம்.கண்ணுக்கு குளிர்ச்சியாக எதுவுமே இல்லாததால் ரொம்ப வறண்டு கிடக்கிறது இந்த படகு இல்லம்.இங்க போறவங்க சனி ஞாயிறு மற்றும் லீவ் நாட்களில் மட்டும் போங்க.அப்போதான் கொஞ்சம் நல்லா இருக்கும்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
தகவலுக்கும் படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்னி
ReplyDeleteசெரிங்...!
ReplyDeleteதகவலுக்கு நன்றி படங்களை பார்த்தால் போகணும் என்றுதான் தோணுது .........
ReplyDeleteசென்னையில் இருந்தாலும் இன்னும் போனதில்லை போகணும்
ReplyDeleteநெறைய பிகருங்க இருக்குற எடமா போ மச்சி!!!
ReplyDeleteஇல்லனா, சரக்கைப் போட்டுட்டு கவுந்துடு.....
#எல்லாம் காரணமாத்தேன்!!
ரைட்டு :)
ReplyDeleteபோயிடலாம்,.
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteஅடுத்த முறை போயிடலாம்
ReplyDelete