Saturday, September 1, 2012

கோவை மெஸ் - திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி, வத்தலகுண்டு கிளை

 தலப்பா கட்டி பிரியாணி 
தேனியில் இருந்து கோவை வரும் போது வத்தலகுண்டு ல போர்டு பார்த்து உள்ளே நுழைந்தேன்.உள்ளே நுழையும் போது வெளிய வச்சிருந்த இன்றைய ஸ்பெசல் போர்டு பார்த்தா ஆட்டுல இருக்குற அத்தனை ஸ்பேர் பார்ட்ஸ்லயும் மெனு இருக்கு.அப்புறம் சிக்கன், மீன் என எல்லாத்துலயும் ஏகப்பட்ட வெரைட்டி..
ஏற்கனவே திண்டுக்கல்லில் இருக்கிற இதனோட மெயின் கிளையில் சாப்பிட்டு பார்த்து இருக்கிறேன்.அதனால அந்த நம்பிக்கையில் உள்ளே போனது தப்பா போய் விட்டது.இண்டீரியர் எல்லாம் நல்லா இருக்கு.ஆனா சுவை கொஞ்சம் கம்மியா தான் இருக்கு.
 
நிறைய ஆர்டர் பண்ணினேன்.பிரியாணி, ஆட்டுக்கால் பாயா, தலைக்கறி குடல் வறுவல், பரோட்டா என ஏகப்பட்ட.
 
 
பிரியாணி  எப்பவும் போல கொஞ்சம் நல்லா தான் இருக்கு.சீரக சம்பா அரிசியில் நல்ல மட்டன் பதத்துடன் வாசத்துடன் இருக்கிறது.தலைக்கறி கொஞ்சம் வித்தியாசமா நல்ல சுவையில் இருந்துச்சு. ஆனா கோவையில் இருக்கிற தலப்பா கட்டி கடையில் இன்னும் செம டெஸ்ட் ஆக இருக்கும். விலை அதிகமா இருக்கும்.ஆனா கொஞ்சம் கம்மியா தருவாங்க.இங்க அதே மாதிரி தான்.நல்ல புதுவித சுவையில் இருந்துச்சு.ஆனா சீக்கிரம் தீர்ந்து போச்சு.குடல்அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்வது போல இல்லை.நன்றாக தோசைக்கல்லில் பிரட்டி இருக்கிறார்கள்.குடலை விட அதிகமாக வெங்காயம் தான் இருக்கிறது.(இல்லேனா விக்கிற விலைவாசியில எப்படி கட்டுபடி ஆகும்..)
    பரோட்டா இதை பத்தி வவ்வால் நிறைய சொல்லி இருக்கார்.இருந்தாலும் இதன் மீது இருக்குற மோகம் தீர மாட்டேங்குது.நல்ல மெது மெது என்று சாப்ட் ஆக இருக்கும் என்று பார்த்தால் அதை பிய்ச்சு திங்கவே இன்னொன்னு எக்ஸ்ட்ரா சாப்பிடனும் போல...அப்புறம் பாயா...இதை சாப்பிட்டு பார்த்தவுடன் அட....போயா.....என்கிற அளவிற்கு இருக்குது.ஒரே தேங்காய் வாசம்.நன்றாக அரைத்து ஊற்றி இருக்கிறார்கள்.குருமா கூட நன்றாக இருக்கும்.ஆனால் பாயா.....ஒரு ஆட்டு கால் நன்கு வெந்தும் கொஞ்சம் கூட சுவை , காரமோ, மணமோ இல்லாத வகையில் இருக்கிறது.எண்ணை மட்டுமே மிதக்கிறது நிறைய....ஆப்பத்திற்கு கூட மேட்ச் ஆகாத வகையில் ....

நல்லா தெளிவா வந்தேன்...சுத்தமா தெளிஞ்சு போச்சு இந்த பாயா வினால். சென்னை வடபழனியில் ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் இருக்கிற ஒரு கடையில் சாப்பிட்டு பார்த்து இருக்கறேன்.ரொம்ப சுவையாக இருக்கும்.அதே போல் அண்ணா சாலையில் சாந்தி தியேட்டர் பக்கம் ரெண்டு மூணு தியேட்டர் உள்ள காம்ப்ளக்ஸ் இருக்கு.அதை ஒட்டி இருக்கிற ஒரு ஹோட்டலிலும் சாப்பிட்டு பார்த்து இருக்கிறேன்.ரொம்ப நன்றாக இருக்கும்.அதுவும் காலை எட்டு மணிக்குள் போகணும்.இல்லேனா தீர்ந்து போய்விடும்...அந்த ஹோட்டல் இப்ப இருக்கா இல்லையானு தெரியல

பில் கொடுக்கும் போது சொல்லிவிட்டுத் தான் வந்தேன்...இப்படி ஒரு மோசமான பாயாவினை சாப்பிட்டதில்லை என்றும் அப்புறம் வர வர பிரியாணி சுவையும் குறைந்து கொண்டே வருகிறது என்றும்.ஒரு காலத்தில் திண்டுக்கல்லில் பிரியாணிக்கு நல்ல சுவையை கொடுத்த தலப்பா கட்டி இப்போது கொஞ்சம் காத்து வாங்கி கொண்டு இருக்கிறது வேணு வின் வருகையால்.....

பிரியாணி பதிவு

நேசங்களுடன்
ஜீவானந்தம்



8 comments:

  1. எனக்கொரு தலப்பாக்கட்டுபிரியாணி பொட்டலம் பார்சல்

    ReplyDelete
  2. இங்கும் தரம் குறைத்து விட்டது... சூடாக சாப்பிட்டால் தான்... ஒரு பத்து நிமிடம் தட்டில் வைத்து விட்டு பாருங்கள்... எவ்வளவு பாமாயில் என்று தெரியும்...
    இன்றைக்கு வேணு பிரியாணி பெஸ்ட்... (அது என்று மாறுமோ...)

    ReplyDelete
  3. புரோட்டாவை பற்றி யாரு என்ன எழுதினாலும் அதை சுவைத்து பார்க்கும் ஆசை மட்டும் யாருக்கும் குறையாது (எனக்கும் சேர்த்துதான்)

    ReplyDelete
  4. //ராஜி// ஏற்கனவே நல்லா இல்லைன்னு சொல்லி இருக்கேன்..இதுல பார்சல் அனுப்பினா இன்னும் விளங்கிடும்...

    ReplyDelete
  5. //திண்டுக்கல் தனபாலன்// உங்க ஊர் பிரியாணி உங்களுக்கே பிடிக்கலை..

    ReplyDelete
  6. //வரலாற்று சுவடுகள்// கண்டிப்பா...

    ReplyDelete
  7. கோவை ஜீவா,

    நம்ம பரோட்டா பதிவையும் சுட்டியதற்கு நன்றி!


    //நிறைய ஆர்டர் பண்ணினேன்.பிரியாணி, ஆட்டுக்கால் பாயா, தலைக்கறி குடல் வறுவல், பரோட்டா என ஏகப்பட்ட. //

    ஹி...ஹி உங்க உடற்கட்டின் ரகசியம் இப்போ தான் புரியுது :-))

    நீங்க சொன்ன ஷாந்தி தியேட்டர் பக்கம் ஹோட்டல் எல்லாம் மூடியாச்சு, அனேகம 2006 வாக்கில் வந்து இருப்பிங்க என நினைக்கிறேன், ஷாந்திக்கும், தேவிக்கும் நடுவில் இருக்கும் அந்த ஹோட்டல், புதுப்பிக்க கட்டிடம் இடிச்சு என்னமோ செய்தாங்க ,கடை காலியாச்சு.

    கேசினோ தியேட்டர் பக்கம் ,பிளாக்கர்ஸ் ரோட்டில் ஒரு ஹோட்டல் அங்கும் ஓரளவு நல்லா இருக்கும்.


    ஆட்டுக்கால் பாயா ,இடியாப்பத்துக்கு புகாரி ஹோட்டல் தான் பேமஸ், அதே ஏரியாவில் வசந்தபவன் அடுத்து இருக்கும். மவுண்ட் ரோட் தர்க்கா எதிரில்.

    எண்ணை, நெய்யெல்லாம் ஊத்தமாட்டாங்க, ஆடு,மாட்டின் மாமிசக்கொழுப்பு என பலரும் சொல்லுறாங்க.

    அதுதான் அப்படியே திக்கா மிதக்கும்,கையெல்லாம் ஒட்டிக்கிட்டு ,வாசனை அடிக்கும்.

    ReplyDelete
  8. நல்லா வேணும்.... மாப்ளே, எனக்கு காஞ்சி போனா சப்பாத்தி....ஞாபகம் இருக்கா...நல்லா வேணும்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....