Wednesday, September 12, 2012

தேனி இண்டர்நேஷனல் ஹோட்டல், தேனி

 தேனியில் இருக்கும் போது நம்ம வெளங்காதவன் ஒருநாள் போன் பண்ணி இந்த மாதிரி அங்க ஒரு ஹோட்டல் இருக்கு.அங்க பெப்பர் மட்டன் செமையா இருக்கும் அப்படின்னு சொன்னதால் நமக்கு நாக்குல எச்சில் ஊற ஆரம்பித்தது.எட்றா வண்டிய...விட்றா ஹோட்டலுக்கு என நம்ம பய புள்ளைக்கு ஆர்டர் போட்டு விட்டு ஜம்முனு போய் இறங்கினோம்.ஹோட்டல் கார் பார்க்கிங் உடன் நல்ல விஸ்தாரமாக தான் இருக்கு.

 

உள்ளே போக ரெண்டு வழி இருந்துச்சு.ஒண்ணு ரெஸ்டாரண்ட் க்கு ..இன்னொன்னு பாருக்கு....சத்தியமா ரெஸ்டாரண்ட்க்குள்ள தான் போனோம்.உள்ளே போய் பார்த்தா அங்க ஒரு வழி பாருக்கு போகுது..சரி..சனி சட்டையில் உட்கார்ந்து இருக்கு என்ன பண்றது...உள்ளே போனால் ஏதோ சொர்க்க லோகத்துல இருக்கிற மாதிரி ஒரே புகை மண்டலமா இருக்கு.ஒரே இருட்டு வேற..எப்படியோ தட்டு தடுமாறி...(எப்பவும் அப்புறம் தான் தள்ளாடுவோம் இது ஒரு முன்னோட்டம் போல ) ஒரு கேபினில் தஞ்சம் அடைந்தோம்.

வந்த சர்வர்கிட்ட பேரெல்லாம் கேட்டு பெப்பர் மட்டன் , ஃபிஷ் ஃபிங்கர் பிரை, இதெல்லாம் ஆர்டர் பண்ணவும்..அவரு ஒரு மாதிரியா பார்க்க, கூட வந்த நண்பர்கள் வேற முறைச்சு பார்க்க, என் தவம் கலைய ஆரம்பித்தது.சரி..சரி..அப்படின்னு ஒரு பகார்டி யும் ஸ்பிரைட்டும் ஆர்டர் பண்ணவும் தான் நம்ம பாசக்கார பயலுகளுக்கு கொஞ்சம் திருப்தி ஆச்சு.

அப்புறம் எல்லாம் வர..கொஞ்சம் கொஞ்சமாய் தாகத்தை தீர்த்துகிட்டோம்.சரி...சரி...முதல்ல நாம வந்த வேலைய ஆரம்பிப்போம்..
பெப்பர் பிரை...
இது செம டிஷ்..கொஞ்சம் கூட எலும்பே இல்லாமல் கொத்து கறி போல் துண்டுகளாக மிக அருமையாக  இருக்கிறது.பெப்பர் மணத்துடன், அதே காரத்துடன் நல்ல சுவையுடன் இருக்கிறது.சாப்பிட்டு முடித்தவுடன் மீண்டும் இன்னொரு பிளேட் ஆர்டர் செய்து சாப்பிட்டோம். 

 அப்புறம் பிஷ் பிங்கர் பிரை..இதுவும் நல்ல சுவையுடன் இருந்தது.வெண்டைக்காய் சைசில் நன்றாக மொறு மொறு க்ரிஸ்பியாக, சுவையுடன் இருந்தது.என்ன விலை கொஞ்சம் அதிகம் தான்.அதே சமயம் எண்ணிக்கை ரொம்ப குறைவா இருக்கு.அழகா மேக்கப் பண்ணி கொண்டு வந்து இருந்தாங்க.

இது ரெண்டு மட்டும்தான் நான் வெஜ் ல.அப்புறம் மத்தது எல்லாம் வெஜ் தான்.அதுவும் சரக்குக்கு சைட் டிஷ் ஆ கொடுத்தது தான்.ஏகப்பட்ட வகைகள்.கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் தராங்க. எனக்கு ஒரு சந்தேகம்..ஏன் தேனி மாவட்டத்துல பப்பாளியும், கொய்யா வையும் தராங்க ? அதை விட நம்ம பங்கு சம்பத்  ஊர்ல ஒரு கடையில முருங்கை காய் கொடுத்தாங்க.அதுவும் நல்லா தான் இருக்கு..

ஒருவழியா எல்லாம் முடிஞ்சு பில் செட்டில் பண்ணலாம்னு பில் வாங்கி பார்த்தா அடிச்ச சரக்கெல்லாம் சட்டுனு இறங்கி போச்சு..அவ்ளோ ரேட்.யானை விலை ..குதிரை விலை தான்.அப்புறம் என்ன பண்றது.பணம் கொடுத்துட்டு இனி அரசு கடையத் தான் தேடி போக வேண்டியது போல அப்டின்னு நினைத்து கொண்டே விடு ஜூட்.....

தேனியில் இருக்கிற பெரிய ஹோட்டல் இதுதான்.ரூம், ஹோட்டல், பார் என அனைத்து வசதி களூம் இருக்கிறது.எப்பவாவது அந்த பக்கம் போனால் சாப்பிட்டு விட்டு மட்டும் வரலாம்.

கிசுகிசு :தேனி மாவட்டம் வறண்டு கிடப்பதை போல அம்மணிகளும் ரொம்ப வறட்சியா இருக்கு.கண்ணுக்கு எட்டின தூரம் அம்மணிகளை காணோம்.பாவம் ...அந்த ஊர் பயலுக..ஒருநாள் இருக்கிற நமக்கே இப்படின்னா அவங்களுக்கு சொல்லவே வேணாம்....

இன்னொரு கிசுகிசு : மது உடலுக்கு தீது


நேசங்களுடன்
ஜீவானந்தம்.




17 comments:

  1. Nalla vela neenga theni ponappo ennoda mama ponnu yaarum oorla illa:D:D

    ReplyDelete
  2. //வெளங்காதவன்™
    வாழ்க! //

    வெளங்கிடும்

    ReplyDelete
  3. ம்....இது எல்லாம் நல்லதுக்கில்ல

    ReplyDelete
  4. வெளங்காதவன்....யோவ்..உனக்கு லின்க் தந்து இருக்கேன்...வாயா நாம மீண்டும் தேனி போலாம்...

    ReplyDelete
  5. கேரளா காரன்////நல்ல வேளை...இல்ல...எஸ்கேப்..

    ReplyDelete
  6. மனசாட்சி////மாம்ஸ்...என்ன விளங்கலையா...இன்னும்..

    ReplyDelete
  7. மச்சி எப்ப போகலாம்.... இப்ப எச்சி ஊறுது...

    ReplyDelete
  8. மச்சி எங்க ஊர் பாருக்கெல்லாம் போய் சாப்ட்டிருக்கீக.....
    அங்க கொஞ்சம் வெலை சாஸ்திதான்... சைடீஷ் நல்லா குடுப்பாய்ங்க...

    பூசாண்டிகள்(நீங்கதான்) வர்ரது தெரிஞ்சி அம்மனிக எல்லாம் ஓடி ஒழிஞ்சிட்டாங்க போல...

    வெளங்காதவன் சிக்குனா பிடிச்சி வச்சிட்டு தாக்கல் சொல்லுங்க... பயபுள்ளைய நொங்க வேனியதிருக்கு... :-)

    ReplyDelete
  9. பாஸ்,
    எல்லோரும் சாப்பாடு கடை, மெஸ் பத்தி எழுதினா நீங்க இன்டர்நேஷனல் ஹோட்டல் பத்தி எழுதி இருக்கீங்க..அதுவும் எங்க ஊர் ஹோட்டல் பத்தி.ரொம்ப சந்தோஷம்...
    அப்புறம் தேனி வறண்ட மாவட்டம் இல்ல தல :) , நீங்க இன்னும் கொஞ்சம் உள்ள போய் (கம்பம், கூடலூர்) போய் பார்த்து இருந்தீங்கனா, பசுமையா, குளுர்ச்சியாக இருந்தது இருக்கும்..

    ReplyDelete
  10. வாங்க ஜெய்...உங்க ஊரா இது...அடடா மிஸ் பண்ணிட்டனே...

    ReplyDelete
  11. ராஜ்/// போய் இருக்கேன் கம்பம்,போடி மெட்டு இங்க ரொம்ப சில்லுனு இருக்கிறதை அனுபவிச்சு இருக்கேன்.

    ReplyDelete
  12. hotel படம் நன்றாக இருக்கிறது. பெப்பர் ப்ரை படமும். பார்த்தாலே கொலஸ்டிரால் எகிறிக்கும் போலிருக்குதே? எஞ்சாய் செஞ்ச வரைக்கும் சந்தோஷம்.

    தேனில அவ்வளவு காசு குடுத்துச் சாப்பிடுற அளவுக்கு தேனில என்ன வசதி? ஜனங்களுக்கு எப்படிக் கட்டுப்படியாவுது? touristகளை மட்டும் நம்பி நடத்துறாங்களா?

    வறட்சி.. பாவங்க நீங்க.

    ReplyDelete
  13. >>> இன்னொரு கிசுகிசு : மது உடலுக்கு தீது >>>

    ஆமா "மது" என்ற வார்த்தையை எழுதினாலே இப்படி போடுவது முக்கியம்! :) :) :)

    ***மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு!

    ஸ்ஸ்ஸப்பாட எஸ்கேப்பு! :D

    ReplyDelete
  14. வரலாற்று சுவடுகள் said...

    >>> இன்னொரு கிசுகிசு : மது உடலுக்கு தீது >>>

    ஆமா "மது" என்ற வார்த்தையை எழுதினாலே இப்படி போடுவது முக்கியம்! :) :) :)

    ***மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு!

    ஸ்ஸ்ஸப்பாட எஸ்கேப்பு! :
    >>>
    எல்லாரும் நல்லநல்லவங்க போலதான் இருக்காங்க

    ReplyDelete
  15. பார்க்கவே சாப்பிடவேண்டும் போல...

    கடைசி இரண்டு உணவுகள் தான் என்னால் சாப்பிட முடிந்தது.:))

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....