Thursday, September 6, 2012

அருள் மிகு கைலாச நாதர் கோவில், கைலாச பட்டி, பெரிய குளம்

     இந்த கோவில் பெரிய குளம் டு தேனி செல்லும் வழியில் கைலாச பட்டி என்கிற ஊரில் மலைக் கோவில் ஆக அமைந்து உள்ளது.மெயின் ரோட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் அடிவாரம் இருக்கிறது.அடிவாரத்திலிருந்து மேலே செல்ல பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.மலைகள் சூழ்ந்த இந்த தேனி மாவட்டத்தில் ஒரு சிறிய மலையில் இந்த கைலாச நாதர் லிங்க வடிவில் எழுந்தருளி உள்ளார்.

      சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான வரலாற்று சிறப்புமிக்கது. அகத்திய முனிவர் இத்திருத்தலத்தை பற்றி கைலாசநாதர் கோயில் கண்டேன். அங்கு ஓர் சுனை கண்டேன் என்று பாடியுள்ளார். இம்மலைக்கு தியான மலை என்ற பெயரும் உண்டு. சட்டநாத மாமுனிவர் இம்மலைக்கு வந்து தியானம் செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது. 
    இந்த கோவில் இப்போதுதான் செப்பனிடப்பட்டு புது மலைப்பாதை, புதிய கோவில் மிக அழகாய், அம்சமாய் இருக்கிறது.
    கோவில்  அடிவாரத்தில் வெள்ளை விநாயகர், சந்திர லிங்கம் அமைந்து உள்ளது.இந்த பிள்ளையார் குடவரைக் கோவிலாக அமைந்துள்ளது. பிள்ளையார் பட்டிக்கு அடுத்த படியாக இங்குதான் குடவரை விநாயகராக இந்த வெள்ளை விநாயகர் இருக்கிறார்.

        இந்த  கோவிலின் உள்ளே நுழைகையில் நம்மை வரவேற்பது கொடி மரம். அதன் அருகிலேயே நவக்கிரக சன்னதி ஒன்றும் இருக்கிறது. மேலும் ஒரு பாறைக் கிணறு ஒன்றும் இருக்கிறது.இதில் நீர் வற்றாமல் இருப்பது அதிசயமே...
       ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் 1-ம் தேதி காலையில் சூரிய ஒளியானது நேராக அருள்மிகு கைலாசநாதர் லிங்கம் மீது படுவது இக் கோவிலின் சிறப்பு அம்சமாகும். 
 சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தேர் இழுத்ததற்கான சான்றாக இரும்பு வடம் இன்னும் இருக்கிறது.கல்வெட்டுகளும் இருக்கின்றன.
  

 
 
 
 
 

கோவிலை சுற்றியும் இயற்கை  அழகு கண்ணை பறிக்கிறது.பசுமை போர்வை போர்த்திய நிலபரப்புகள்.தொடர்ச்சியாக  மலை மீது செல்லும் அழகிய மேக கூட்டம் என இயற்கை வாரி வழங்கி இருக்கிறது.

இந்த கோவிலில் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு நோய்கள் விலகி நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வல்லது.இந்த மலை. அத்துடன் நவகிரக குன்றுகளையும் சுற்றி வந்த பலன் கிடைப்பதால், கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

செல்லும்  வழி : பெரிய குளம் டு தேனி வழியில் கைலாச பட்டி என்கிற ஊரில் இருந்து கோவில் செல்லலாம்.

கிசுகிசு : இந்த கோவில் முழுக்க நம்ம முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களால் செப்பனிட பட்டது என்கிற வரலாற்று உண்மையை சொல்லி கொள்கிறேன்.

நேசங்களுடன்

ஜீவானந்தம்

14 comments:

  1. பல முறை சென்று இருந்தாலும் படமும், விளக்கமும், தகவலும் அருமை... நண்பர்களுக்கு உதவும்... நன்றி...

    ReplyDelete
  2. அருமையான படங்களுடன் நல்ல ஒரு பதிவு.

    "அம்மணி" என்ற வார்த்தை இல்லாத ஒரு முதல் பதிவு என்று நினைக்கிறேன் !!!.

    நட்புடன்

    விமல்

    ReplyDelete
  3. படங்களும் அதற்கேற்ற வர்ணனையான வார்த்தைகளும் அருமை நிச்சயம் செல்கிறோம்

    ReplyDelete
  4. தகவல்கள் அருமை!

    ReplyDelete
  5. கோவிலைப்பற்றியும்....ஓ போடு புகழ் மனிதரின் பக்தியையும் அறிந்து கொண்டேன் நன்றி!

    ReplyDelete
  6. மச்சி அங்க குளு குளுன்னு ஒன்னும் இல்ல போல... ( கண்ணுக்கு)

    ReplyDelete
  7. //விமல்// ஆமாங்க ..ஒரு அம்மணி கூட இல்லைங்க..எனக்கும் வருத்தம்..தான்..

    ReplyDelete
  8. நன்றி சாமுண்டேஸ்வரி..

    ReplyDelete
  9. விக்கி..// ஓ போட்டு விடீங்க...

    ReplyDelete
  10. கோவை மு சரளா///
    நன்றி கவிஞரே..உங்க வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. //சங்கவி // மச்சி மலை தான் குளிர்ச்சியா இருக்கு...

    ReplyDelete
  12. புதிய தொரு கோவிலைப்பற்றி அறிந்து கொண்டேன்! நல்ல விளக்கமான பதிவு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

    ReplyDelete
  13. புதிய கோவில். நல்ல படங்கள். தொடருங்க நண்பரே.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....