Monday, September 3, 2012

கோவை மெஸ் - ஸ்ரீ குல்பி ஐஸ் - - R.S.புரம், கோவை

ஸ்ரீ  குல்பி ஐஸ் - சில்லுனு ஒரு கடை
இந்த கடை ரொம்ப வருசமாவே இந்த இடத்துல இருக்கு.எப்ப பார்த்தாலும் குல்பிகள் சாரி அம்மணிகள் கூட்டம் அதிகமாவே இருக்கும்.அதுவும் சாயந்திரம் போனால் அவ்ளோதான் நம்ம மனசை மாத்தி வைக்க வேண்டியதுதான்.சரி..நமக்கு சம்பந்தம் இல்லாத ஏரியா அப்படிங்கிறதாலே இத்தனை நாளாய் அந்த பக்கம் போகாமலே இருந்தேன்..இப்போ தான் நாம பதிவர் ஆச்சே...போய் பார்த்துட்டு பதிவ தேத்துவோம் அப்படிங்கற நல்ல எண்ணத்துல தான் போனேன்.(ஹி ஹி ஹி )
அதுவும்  இல்லாமல் இந்த கடை இருக்கிறது R.S.புரம் ஏரியா. இந்த இடத்தை பத்தி சொல்லவே வேணாம்.எப்பவும் அம்மணிகள் மயம்தான்.DB ரோட்டுல அவ்ளோ கடைகள் இருக்கு. அதனாலே இங்க அம்மணிகள் செம கலக்கலா இருக்கிற ஏரியா.வித விதமா, ரகம் ரகமா, வயசு வித்தியாசம் இல்லாம சும்மா குளுகுளுன்னு ஊட்டிக்கே ஏசி போட்ட மாதிரி இருப்பாங்க......(போதும்...தம்பி...போதும்....செல்ப் கண்ட்ரோல்) 

 
கடைக்கு  போய் என்னென்ன இருக்கு அப்படிங்கிறத கேட்டுட்டு ஆர்டர் பண்ணினோம்.இங்க  ஏகப்பட்ட வகையில் குல்பி குச்சி ( stick ) இருக்கு.அதிகமா அம்மணிகள் ஏன் இதை விரும்பறாங்கன்னு தெரியல.அப்புறம் பலூடா.இத எப்படி கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல..என்னென்னமோ கலக்குறாங்க.கலர் சேமியா, பால்கோவா, எசன்ஸ், அப்புறம் ஒரு சீட்ஸ், (கேரளாவில் இது அதிகமாக குளிர் பானங்களில் பயன்படுத்துவர், தண்ணியில் போட்ட வுடன் கொஞ்சம் வழ வழப்பு தன்மை வந்திடும்.உடலுக்கு குளிர்சசி வேற.)இதல்லாம் போட்டு தராங்க.செம டேஸ்டா இருக்கு.டிரை நட்ஸ் பலூடா..இதுவும் நல்ல டேஸ்ட்.இதுலயும் நிறைய வகை.அதுவும் மலாய் பலூடா.செம டேஸ்ட்.

சின்ன  சின்ன மண்பாண்ட குப்பியில் குல்பி வேற வைத்து இருக்காங்க. சில்லுனு அதுவும் ரொம்ப சுவையா இருக்கு.
 
 
 
 
 
                                                          ( பலூடா ரெடி பண்றாரு )
அப்புறம் கோலா ஐஸ்...அரைச்ச ஐஸ் துகள்களை ஒரு டம்ளர்ல போட்டு அமுத்தி  அதை எடுத்து அதுல நிறைய பிளேவர் ல சிரப் ,கிரீன் மேங்கோ, ஸ்ட்ராபெர்ரி, கிரேப்ஸ்,ஆரஞ்சு, என எல்லா பிளேவரும் ஊத்தி ஒரு டம்ளர் ல போட்டு தராங்க..அப்படியே எடுத்த உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடும் போது நாமளும் ஒரு குழந்தை ஆகிவிடுகிறோம்...
ரொம்ப  திகட்டுது அதிக சுவையினால், ஆனாலும் நன்றாக இருக்கிறது.(கலர் கலரா ஊத்தறாங்க...இது அனுமதிக்க பட்ட நிறமா என்று தெரியவில்லை)


கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்.முக்கியமா குழந்தைகளுக்கு.அவங்களை கூட்டிட்டு போற பெரியவங்களும் கண்டிப்பா சாப்பிடுவாங்க.அப்புறம் அந்த பக்கம் அதிகமா வர்ற நம்ம அம்மணிகள் ..ஹி ஹி ஹி...
இந்த கடைக்கு பக்கமா தான் KFC இருக்கு.அங்க ஒரு வெட்டு வெட்டிட்டு அப்புறம்  இங்க ஒரு கட்டு கட்ட செம இடம்.

கிசு  கிசு:
பாவைகளை
பார்வையால்
பருகியதால்
பசியாற வில்லை
வயிறும் ...மனதும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


17 comments:

  1. அம்மணிகள் ஆராய்ச்சி கொஞ்சம் தூக்கலாவே இருக்கே!. மொத்தம் அஞ்சு எடத்தில அம்மணிகள் வருது.
    நம்ம புள்ளி விவரம் எப்பீடி!

    ReplyDelete
  2. முரளி தரன் //
    துல்லியமான கணக்கெடுப்பு.....நேர்ல வந்தீங்கன்னா இன்னும் எடுக்கலாம்

    ReplyDelete
  3. //அரைச்ச ஐஸ் துகள்களை ஒரு டம்ளர்ல போட்டு அமுத்தி //

    எங்க காலத்துல இதுதான் ஐஸ்கிரீம்.

    ReplyDelete
  4. பலூடா - வாழைக்காய் மாதிரி இருக்கு... இங்கு குல்பி மட்டும் தான்... சில கடைகளின் நீங்கள் சொன்ன ஐட்டங்கள் கிடைக்கிறது...

    அடிக்கிற வெயிலுக்கு படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சி... நன்றி...

    ReplyDelete
  5. எங்க ஊர்ல இருந்து அங்க வந்து கடை ஆரம்பிச்சிட்டாங்களா? இங்கே மிகவும் பிரபலம் இந்த குல்ஃபியும் சுஸ்கியும் [chuski] - அரைத்த ஐஸ்-ல் கலர் கலரா கொடுப்பது. இங்கே சாப்பிடும்போது சுவை குறையறா மாதிரி இருந்தா மீண்டும் அதில் கலர் விட்டுத் தருவார்கள்...

    அம்மணிங்க புராணம் ரொம்பவே இருக்குங்! :)

    ReplyDelete
  6. ஒரு வாரம் கோவை வந்து டேரா போட போறேன் எல்லா இடமும் சுத்தி காட்டனும் சொல்லிட்டேன்

    ReplyDelete
  7. லிஸ்ட்ல சேமியா ஐஸ், ஜவ்வரிசி ஐஸ் கனோமே.... என்ன கடைணே இது ....

    ReplyDelete
  8. மாப்ளே, போதும்.. வேணாம்.... ஓகே..., ஒத்துக்கிறேன்.

    ReplyDelete
  9. மழைக்காலம் தொடங்கும்போது ஐஸ் பத்தி பதிவு போட்டு மனசை சஞ்சலப்படுத்துறீங்களே சகோ.

    ReplyDelete
  10. 2003-ல் கிட்டத்தட்ட ஆறு மாசம் ரத்தினசபாபதி புரத்தில் (R.S Puram) தங்கியிருந்தேன்! அங்கே அம்மினிகளின் ஆட்சி கொஞ்சம் அதிகம் தான்! பெரும்பாலும் நார்த் இந்தியன்ஸ் தான் அங்கே அதிகம்!

    ReplyDelete
  11. கோவை நேரத்தில் வரும் எந்த இடத்திலும் சாப்பிட்டதில்லையே எனும் ஏக்கம் எப்போதும் இருக்கும்.அப்பாடி ஒரு வழியா குல்பி கடையில் நாங்களும் சாப்பிட்டிருக்கோம்.குச்சியில் கிடைக்கும் குல்பி சூப்பர். ஆமா உங்களை வீட்டில யாரும் கண்டு(டி)க்கறதில்லையா?

    ReplyDelete
  12. சுவையான பதிவு! அருமை!

    இன்று என் தளத்தில்
    தளிர்ஹைக்கூ கவிதைகள்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

    ReplyDelete
  13. மச்சி குச்சி ஐஸ் பத்தி பெரிய விளக்கமா இருக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் என்னமோ பண்ணு பா

    ReplyDelete
  14. பார்த்தாலே சர்க்கரை ஏறும் போலிருக்குதே?
    கோவை வந்தால் நீங்க தான் கைடு. இந்த அம்மணி கிம்மணி எல்லாம்..

    ReplyDelete
  15. ஜீவாவுடைய குல்பி ஐஸ் கடை விசிட் எதுக்காகவோ, அதாவது பதிவு எழுதுறதை தான் சொல்றேன்,அது நிறைவேறிவிட்டது....
    போடோஸ் சூப்பர்...குல்பி சாப்பிட்ட எபக்ட்....

    ReplyDelete
  16. குல்பி படம் சூப்பர்...... அம்மணிகளோட படம் எங்க பாஸ்?

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....