Saturday, October 27, 2012

வெளிநாட்டு அனுபவம் - கரிமூன், இந்தோனேஷியா

சிங்கப்பூரில் இருந்து இரண்டு மணி நேர கடல் பயணமாக சென்ற இடம் டேன் ஜங் பலாய் கரிமூன், இந்தோனேஷியா.இது ஒரு தீவு.கடலில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் அருகில் இருக்கிற இந்த தீவு க்கு சென்றேன்.பெரி எனப்படுகிற போட்டில் பயணம் ஆரம்பிக்கிறது.நேரம் ஆக ஆக சின்னதாகிக் கொண்டே வருகிறது சிங்கப்பூரின் மிக உயர்ந்த கட்டிடங்கள்.இரண்டு மணி நேரம் கடலில் பயணிப்பது மிக சுகமாக இருக்கிறது.
 
 
 புதிய ஊர் நம்மை வரவேற்கிறது  அங்கே சென்றவுடன்  ஆன் அரைவல் விசா வாங்கி  கஸ்டம்ஸ் முடித்து கொண்டு மொழி தெரியாத ஊருக்குள் புகுந்தோம்.மிக அமைதியாக இருக்கிறது.இந்த ஊர்.நம்மை பார்த்தவுடன் வந்து குவியும் கைடுகளை ஒதுக்கிவிட்டு ஏற்கனவே எங்களுக்காக காத்திருந்த கைடான ஜான் என்பவருடன் பயணித்தோம்.
ஒரு சின்ன கிராமம் போல தான் இருக்கிறது.ஆனால் அனைத்து வசதிகளும் இருக்கிறது.ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டும் நபர்கள், டிராபிக் சிக்னலில் நின்று செல்லும் வண்டிகள் என புதிதாய் இருக்கிறது.அம்மணிகள் அனைவரும் அழ அழகாய் வாழைத்தண்டு கால்களுடன் அரை ட்ரவுசரில் இருக்கின்றனர்.(முடியல).கண்களால் பருகியபடியே கடந்து சென்றோம்.


 இங்கு அதிகம் சுற்றுலா வாசிகளை காண முடிகிறது.இது ஒரு மினி தாய்லாந்து போல இருக்கிறது.மசாஜ் சென்டர்கள், கேளிக்கை விடுதிகள் என அதிகம் இருக்கிறது.நிறைய நமீதாக்கள் ஆங்காங்கே அழகழகாய் தென்படுகின்றனர்.நாம போன நேரம் சரியில்லை என்னவோ ஒரே மழை.மழை பெய்த காரணத்தினால் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை. நம்ம ஆசைகள் அனைத்தும் நிராசைகள் ஆகி விட்டது.ஆனாலும் என்னுடைய ஒரே ஒரு ஆசை மட்டும் நிறைவேறியது.அது டாட்டு.
சும்மா ரெண்டு மணி நேரம்...மாறி மாறி ஊசிய மாத்தி மாத்தி... குத்தி குத்தி  ஒரு வழியா (வலி ) விட்டான்.அதுக்கு அப்புறம் தான் தெரியுது வலி...சும்மா பின்னுது.இன்னிக்கு வரைக்கும் வலி இருக்குது.இது எப்போ ஆறி நார்மல் ஆகி வெளிய ஆர்ம்ஸ் காட்டுறது..?
இந்தோனேசியா போய் செஞ்ச ஒரு உருப்படியான விஷயம் இதுதான்.அப்புறம் நிறைய கடல் உணவுகள் சாப்பிட்டது.(அது அடுத்த பதிவு ) நம்ம.கூட வந்த நண்பர் போய் மசாஜ் பண்ணிட்டு வந்தார்.செமையா இருக்கு மச்சி என்று.மசாஜ் செய்பவர்களின் போட்டோ ஆல்பம் இருக்கிறதாம்.அதை பார்த்து நமக்கு பிடித்தவர்களை செலக்ட் செய்து விட்டால் அவர்கள் வந்து மசாஜ் செய்வார்களாம்.நண்பன் சொல்ல சொல்ல ....அட டா வடை போச்சே....ஹி..ஹி ஹி ...( என் வயிற்றெரிச்சல் அவன சும்மா விடாது ) டாட்டு போட்டதால் அதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. இந்த தீவுக்கு பக்கத்துல இன்னொரு தீவு இருக்கு.அங்க பாம்பு, குரங்கு, முதலை கறி கிடைக்குமாம்.எங்களுக்கு ஒரு நாள் தான் இங்க ப்ரோகிராம் என்பதால் அங்க போக முடியல.இன்னொரு முறை போகணும்.
அப்புறம் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் இதுதான்.இங்கு தங்க விலை எவ்வளவு தெரியுமா...3.60,000..ருபியா...நம்ம ஊர் மதிப்பில்  2000.



வழி: சிங்கப்பூர் ஹார்பர் பிரண்ட் இல் இருந்து கரிமுன் செல்ல பெர்ரி டிக்கெட் வாங்கி கஸ்டம்ஸ் முடித்து பெர்ரி (போட்) யில் பயணிக்க வேண்டும்.அங்கு சென்றவுடன் ஆன் அரைவல் விசா வாங்கி அந்த நாட்டுக்குள் பிரவேசிக்க வேண்டும்.ஒவ்வொரு முறையும் பாஸ்போர்ட் விசா காட்ட வேண்டி இருக்கிறது. புது வித அனுபவம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம் 

11 comments:

  1. அண்ணே டாட்டூ படத்தில் அப்படியே திரும்பி உங்கள் முழு உருவத்தை காட்டிருக்கலாம் அண்ணே

    ReplyDelete
  2. படமும் பகிர்வும் அருமை...

    டாட்டூ ... டூ டூ...

    ReplyDelete
  3. படங்கள் நேரடியாகப் பார்ப்பது போன்ற
    உணர்வைத் தருகின்றன
    பயனுள்ள அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல படங்கள் - இனிமையான அனுபவங்கள்...

    தொடரட்டும் பயணம் பற்றிய பகிர்வுகள்.

    ReplyDelete
  5. நல்ல அனுபவங்கள் ம்.. தொடருங்கள்.நம்ம ஊரு பச்சையை ஸ்டைலா டேட்டூ-னு சொல்றாங்களோ அங்கே

    ReplyDelete
  6. இங்கு தங்க விலை எவ்வளவு தெரியுமா...3.60,000..ருபியா...நம்ம ஊர் மதிப்பில் 2000.
    >>>>>>

    ஹலோ நம்ம ஊருலயே இப்போல்லாம் டீசண்டான லாட்ஜ் ரூமோட சார்ஜ் ஏசியில்லாம மினிமம் 800 ரூபாய் ஜீவா. இதுக்குலாம் கம்பேர் பண்ணும்போது பரவாயில்லைன்னுதான் தோணுது.

    ReplyDelete
  7. நீங்க மசாஜ் பண்ணலன்னு சொன்னதை நான் நம்பி விட்டேன்.

    எவ்வளவு பெரிய வரலாற்று சோகம் !

    ReplyDelete
  8. //நம்ம.கூட வந்த நண்பர் போய் மசாஜ் பண்ணிட்டு வந்தார்.செமையா இருக்கு மச்சி என்று.//

    அப்படியா சொன்னாரு ??? அவ்வளவு தூரம் போயி மசாஜ் பண்ணாம வந்துடீங்களே ஜீவா, இது நியாயமா..

    //நீங்க மசாஜ் பண்ணலன்னு சொன்னதை நான் நம்பி விட்டேன்///

    பாஸ்கர் சார், யு ஆர் ரியலி கிரேட்.. ;-)

    ReplyDelete
  9. இனிமே டிராகன் ஜீவா ன்னு பேர மாத்திட வேண்டியதுதான் :)

    ReplyDelete
  10. வெல் டன் ஜீவா....உங்களது பயணம் மிகவும் இனிமையாக இருந்தது இதன் மூலம் தெரிகிறது. தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....