Wednesday, October 17, 2012

கோவை மெஸ் : தாபா எக்பிரஸ், மஹிந்தரா வோர்ல்டு சிட்டி, செங்கல்பட்டு

தாபா எக்பிரஸ்...மஹிந்தரா வோர்ல்டு சிட்டி, செங்கல்பட்டு

நம்ம வேலை இங்க நடக்கிறதால் ஒரு வெள்ளிக்கிழமை அன்னிக்கு இந்த ஹோட்டலுக்கு போனேன்.இந்த ஏரியா ஒரு சாஃப்ட்வேர் என்பதால் ஆங்காங்கே அம்மணிகள் கூட்டம்.
முதல் மாடியில் இருக்கிறது இந்த தாபா..முன்பே டேபிள் ஆர்டர் செய்து விட்டு நண்பர்கள் புடை சூழ கிளம்பினோம்.
ஹோட்டலின் முகப்பு மூங்கில் பிளைண்ட்ஸ் போட்டு வெய்யில் உள்ளே வராதபடி தடுத்து  இருக்கின்றனர்.உள்ளே இருப்பது ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் அவ்வப்போது வெளியில் வந்து நம்மை கடந்து சென்ற அம்மணிகளால் ரொம்பவே பசியாறிப் போனோம்.டேபிள் ரெடியாக கொஞ்ச நேரம் ஆனதால் வெளியே அவர்களின் அழைப்பிற்காக காத்து இருந்த போது  கடந்து சென்ற அம்மணிகள் பதம் பார்த்தது என்னமோ நம் மனதை தான்.... 



நம்ம அழைப்பு வந்தவுடன் உள்ளே நுழைந்தால் ஒரே கூட்டம்.. சந்தைக்கடையில் நுழைந்த மாதிரி....ரெண்டு அம்மணிகள் இருந்தாலே அந்த இடம் கலகலத்து போய்டும்...உள்ளே ஊர்ப்பட்ட அம்மணிகள்... ஆங்காங்கே கொஞ்சம் சொல்லிக்கொள்கிற மாதிரி நம்மாளுங்க அம்மணிகளுக்கு துணையாய்..... ஒவ்வொரு டேபிளிலும் பத்து பதினைந்து பேராய்...என்னமோ கல்யாண பந்தியில் சாப்பிடுவது போல....வரிசையாய் போடப்பட்டு இருக்கின்றன டேபிள்கள்.வரிசை கட்டி சாப்பிடுகின்றனர்.அத்தனையும் நிரம்பி வழிகிறது அம்மணிகளால்.....டேபிள் காலியானதும் அடுத்த குரூப் ஆக்கிரமத்து கொள்கிறது.இப்படியே ரொம்ப பிசியாக இருக்கிறது இந்த ஹோட்டல்.இந்த சிட்டியில் இருக்கிற நல்ல டீசண்டான ஹோட்டல் இதுதான்.இதற்கு கீழே அர்ச்சனா ஃபுட் ஹோம் இருக்கிறது.

கொடுத்த மெனுவை பார்த்தால் அசத்தலாக இருக்கிறது.என்னென்னமோ மெனு இருக்கிறது.நண்பர்கள் ரெகுலர் வாடிக்கையாளர் என்பதால் அவர்களோட விருப்ப உணவுகள் ஆர்டர் செய்ய பட்டன.
ஆஃப்கானி சிக்கன், பேபி கார்ன், தவா சிக்கன், ஹைதராபாத் பிரியாணி, ஜல்ஜீரா, நான், முட்டை மசாலா, ஃபிரைடு ரைஸ், சில்லி சிக்கன் என ஏகப்பட்ட ...
சுட சுட வந்தது...சும்ம உரித்தகோழி கணக்காய்....ஆஃப்கானி சிக்கன்...செம டேஸ்ட்.. கொஞ்சம் கூட எண்ணையில்லாமல் தந்தூரி கணக்காய்.அதே மாதிரி சிக்கனின் கலரில்...மசாலா எதுவும் இல்லாமல் மிக அருமையாக காரம் உப்பு என செமையாக இருக்கிறது. இந்த ஹோட்டலின் ஸ்பெசல் இதுதானாம்.ரொம்ப நன்றாக இருக்கிறது.(ஒரு சில அம்மணிகளும் உரித்த கோழி கணக்கில் சும்மா செவ செவ ன்னு...பிரம்மன் படைத்த அற்புதமாய்...)
 
அதேமாதிரி சில்லி சிக்கனும். பேபி கார்ன் சில்லியும் மிக அருமை.சிக்கனை விட பேபிகார்ன் சுவை இன்னும் அதிகம்.ரொம்ப நன்றாக இருக்கிறது.
 
 
 
 
             (ஜல்ஜீரா சோடா )
ஹைதராபாத் பிரியாணி நன்றாக இருக்கிறது.மிக நீளமான பாசுமதி அரிசியில். இதுவும் நன்றாக இருக்கிறது.எல்லாம் முடித்து விட்டு கடைசியாக ஆர்டர் பண்ணினது ஜல்ஜீரா...புதினா மற்றும் சோடா கலந்த ஒரு பானம். இதன் உரைப்பு இன்னும் நம் நாக்கில் இருக்கிறது.அனைத்து நான்- வெஜ் உணவுகளின் செரிமான பானமாய் இது இருக்கிறது.
ஸ்டார்ட்டர் உணவுகளை சாப்பிடும் போது புதினா சட்னியும், மசால் வெங்காயமும் வைக்கின்றனர்.அதிலும் இந்த வெங்காயம் இருக்கே ...அனைத்தும் ஒரே சைசில்...உப்பு சுவையுடன்...புதிதாய் இருக்கிறது...
கிட்டதட்ட ஒருமணி நேரம் ஆகிவிட்டது அனைத்தும் காலி பண்ண அருகருகே அம்மணிகள் அமர்ந்து இருந்ததால் என்னவோ அதிகம் இறங்க வில்லை.ஆஃப்கானி சிக்கன் போலவே நல்ல வெள்ளை வெளேர் என நிறைய அம்மணிகள்...சாஃப்ட்வேர் வேற....அழகுக்கு சொல்லவா வேணும்..
அப்புறம் விலையை பத்தி கேட்கவே வேணாம்..சாஃப்ட்வேர் ஆளுங்களுக்கு ஏத்த மாதிரி தான்..செம விலை.
மஹிந்தரா வோர்ல்ட் சிடியில் இருக்கிற அத்தனை சாஃப்ட் வேர் கம்பெனி ஆளுங்களுக்காக மட்டுமே இது இருக்கு.வெள்ளிக்கிழமை மட்டும் பயங்கர கூட்டமாய் இருக்கும்.கும்பலாய் கடலை போட இருக்கிற ஒரே இடம் இது தான்.எப்பவாவது அந்த பக்கம் போனீங்கன்னா அம்மணிகளை சாரி ஆஃப்கானி சிக்கனை ரசிக்க  சாரி  ருசிக்க மறந்திடாதீங்க..போகும்போது பர்ஸ் நல்லா கனமா இருக்கட்டும்...
முன்பே டேபிள் புக் பண்ண 044 - 27460028; 9282199916, 

கிசு கிசு : எங்கடா ஒரு அம்மணி போட்டோ கூட இல்லையேனு கேட்டிடாதீங்க..இதை எடுக்கவே எவ்ளோ கஷ்டப்பட்டேன்.கண்ணுக்கும் வயிற்றுக்கும் செம ருசி தான் இங்க...

அம்மணிகள் 
அப்பப்ப 
கிராஸ் பண்ணியதால்
கிளாஸ் போல 
சுக்கு நூறாகியது 
என் இதயம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்


9 comments:

  1. அப்பு...

    இனிமே நீனு அம்மணிகள் போட்டோவோட போஸ்ட்டு போடுற....

    இல்லைன்னா, புறக்கணிச்சுடுவோம்..

    ஆங்...

    ReplyDelete
  2. சொர்க்கபுரியில் சுவையான உணவும் கிடைக்கிறதா??

    ReplyDelete
  3. இப்படி சாப்பாடா போட்டு இம்சை செய்வானேன்.. :)

    ReplyDelete
  4. ஐ... புரட்டாசி போயாச்சி...!

    tm 1

    ReplyDelete
  5. //வெளங்காதவன்™ said...
    அப்பு...

    இனிமே நீனு அம்மணிகள் போட்டோவோட போஸ்ட்டு போடுற....

    இல்லைன்னா, புறக்கணிச்சுடுவோம்..

    ஆங்...//

    வெளங்காதவா தீர்ப்பை மாத்தி சொல்லு

    ReplyDelete
  6. மாப்ள, புரட்டாசி முடியட்டும் என்று பொறுமை காத்..து - பட்டய கிளப்பிட்டீரே

    ReplyDelete
  7. மாப்ளே
    இப்பவே
    போகணும்
    போல
    இருக்கு

    இவண்

    நவீன
    கால
    மேக
    புலவர்

    ஆங்.

    ReplyDelete
  8. அன்பின் ஜீவானந்தம்

    பல அஞ்சல்கள் வலைச்சரம் தொடர்பாக அனுப்பியும் பதில் மடல் வரவில்லையே - என் மடல்கள் கிடைக்க வில்லையா ? பரவாய் இல்லை - மடல் வரைக - cheenakay@gmail.com - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. மொத்தம் 15 முறை அம்மணி என்ற சொல் பயன்படுத்தி இருகிறீர்கள்.....நல்லது, நான் இந்த பதிவில் அதிகம் ரசித்தது அதைதான் !!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....