எவ்வளவோ வேலைப் பளு இருந்தாலும் அவளின்
நினைவுகளில் நனைவது சுகம்.அவளின் இடைவிடாத நினைவுகளில் நலிந்து போனதால்
வந்த கவிதைகள்.பேஸ் புக்கில் கிறுக்கியவை...
உறக்கம்
தொலைத்துவிட்டு
தவிக்கிறேன்..
உயிர்ப்பித்துவிட்ட
காதலால்.
இதயத்தின் வலிகள்
இன்னும் அதிகமாகிக்
கொண்டே போகிறது..
இனியவளின்
இடைவிடாத நினைவுகளால்..
மனதில்
விழுந்த விதையாய்
மங்கையுன் பார்வை
முளைத்தது என்னுள்
காதல் எனும்
செடியாய்.....
ஒவ்வொரு நாளும்
விடிகிறது..
ஓயாத உன்
ஞாபகங்களுடன்...
இதயத்தின் இருட்டில்
வெளிச்சமூட்டும்
தீபங்களாய்
இனியவளின் ஞாபகங்கள்.
வறண்டு போய் கிடக்கிறது
வஞ்சியவளின்
வருகையின்றி
வார்த்தைகளின்
வடிவம்....
நிம்மதியற்று
இருக்கும்
நேரங்களில்
உன்
நினைவுகளே
மருந்தாய்...
இருக்கும்
நேரங்களில்
உன்
நினைவுகளே
மருந்தாய்...
மறக்க முடியவில்லை
மனதில் பதிந்த
கல்வெட்டுக்களாய்.
மங்கை உன்
நினைவுகள்..
மனதில் பதிந்த
கல்வெட்டுக்களாய்.
மங்கை உன்
நினைவுகள்..
எனக்குள் இருக்கும்
கவிஞனின் உறக்கம்
கலைத்த பெருமை
உனக்கே வாய் க்கட்டும் ............நன்றி.....அவளுக்கு........
கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
//எங்க ஏரியாவுக்கு வந்துட்டு போங்க..ஏதாவது சொல்லிட்டு போங்க..//
ReplyDeleteஒன்றா... ரெண்டா.... வார்த்தைகள்..!
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா..?
நன்றி...அவ்ளோ இருக்கா...?
Deleteகள்ளு,
ReplyDeleteகோவை ராவுத்தர் பிரியாணி,
கருவாட்டுக் குழம்பு ....
இப்படியே போனா
நலிந்து போகாம என்ன பண்ணும்...?
அவளில்லாத நினைவுகள்..?
(கவிதை எப்படி இருக்கு ?)
haha
Deleteகவித சூப்பர்....
Delete/// இதயத்தின் இருட்டில் வெளிச்சமூட்டும் தீபங்களாய்
ReplyDeleteஇனியவளின் ஞாபகங்கள்... ///
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
Visit : http://www.seenuguru.com/2013/06/love-letter-contest.html
நன்றி தனபாலன் சார்
Deleteஅழகா எழுதப் பழகிட்டீங்க.... வீட்டுக்கு ஒரு தரம் வரலாம்னு இருக்கேன்...எதுக்கா? பத்த வைக்கத்தான்....
ReplyDeleteஎன்ன பத்த வைக்க போறீங்க...விளக்கா...?
Deleteபோட்டிக்கு தயார் ஆகிவிடீர்கள் போல அடுத்த புத்தகம் ரெடி ஆயிருச்சா ? அப்புறம் தோழி தனியா போக வேண்டாம் எப்பன்னு சொன்னா சேர்ந்து போகலாம் எதுக்கா ? அதுக்குதான்
ReplyDeleteவாங்க...வாங்க...பத்தவைக்க...
Deleteகிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..
ReplyDelete>>
சேச்சே குடும்பத்துக்குள் பூகம்பம்லாம் வர வைக்க மாட்டோம்ம். ஏன்னா, நாங்கலாம் நல்லவங்கோ! நல்லவங்கோ! நல்லவங்கோ!
ஓ...அப்படியா...
Deleteகருவாடு, கள்ளு, மட்டன், பிரியாணின்னு எழுதிய கையால் எம்புட்டு அழகான கவிதை!! ஜீவாவின் மறுபக்கமோ! இல்லை விஸ்வரூபமோ!
ReplyDeleteஆல் இன் ஆல் அழகு ராசா..
Deleteஹா..ஹா....
Deleteசிறப்பான காதல் வரிகள்! வாழ்த்துக்கள்! என் பக்கம் வந்து விசாரித்தமைக்கு நன்றி!
ReplyDeleteநன்றி...சார்
Deleteஅம்மணிக்கு தெரியாதா.. பரட்டை பத்த வைக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு..
ReplyDeleteசும்மா...தமாஷ்....
Delete