Tuesday, June 4, 2013

கள்ளு, பீச் - சாவக்காடு, குருவாயூர், கேரளா


 
  எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.
 


குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன். 

குருவாயூரில் இருந்த போது சாவக்காடு பக்கத்துல பீச் இருக்கு அப்படின்னு நம்ம நண்பர் சொல்லவும் உடனே அங்கே போக ஆயத்தமானேன்.கோவில் அருகே வந்துட்டிருந்த ஒரு ஆட்டோவை மடக்கி பீச் போகனும் அதுக்கு முன்னாடி கள்ளுக்கடை போகனும்னு சொல்லவும் சந்தோசமா ஆட்டோ டிரைவர் நம்மளை ஏத்திகிட்டாரு.மூணு கிலோ மீட்டர் தொலைவில் எங்கோ ஒரு முட்டுச்சந்துக்கு கூட்டிட்டு போனாரு.கள்ளு என்கிற போர்டினை பார்க்கவும் அப்பவே கொஞ்சம் சுதி ஏறின மாதிரி இருந்தது.
உள்ளே நுழைய ஆள் அரவமில்லாமல் இருந்தது.நான் தான் முதல் போணி போல..... பொறித்துக்கொண்டிருந்த மத்தி மீனின் வாசம் நம்மை அடக்கமாய் அங்கே போட பட்டிருந்த பெஞ்சில் அமர வைத்தது.சாக்கனா கடை ஆயா போல இருந்த ஒரு பெண்மணி வந்து எவ்ளோ வேணும்னு கேட்க ஒரு குப்பி ஆர்டர் செய்தேன்.நல்ல மணமுடன் கள்ளு வந்து சேர என் மனம் எங்கோ சிறகடிக்க ஆரம்பித்தது. அப்படியே பொறித்துக் கொண்டிருந்த மத்தி மீனையும் கொண்டு வர சொன்னேன்.
காலை நேரத்தில் இதமாய் இறங்க மிக தேவாமிர்தமாய் இனித்தது.ஒரு குப்பி காலி செய்துவிட்டு ஆர்டர் செய்த அடுத்த புட்டிக்கு ஏங்க ஆரம்பித்தேன்.கள்ளும் மத்தியும் போட்டி போட்டுக்கொண்டு உள்ளே இறங்கின..இரண்டையும் சுகமாய் சாப்பிட்டவுடன் பீச் ஞாபகம் வரவே அங்க போலாம் என டிரைவரை கூப்பிட அவரும் வந்து தன் தாகத்தினை தீர்த்துக்கொண்டு புறப்பட்டார்.
எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாவக்காடு என்கிற ஊரினை அடைந்த பின் சிறிது தூரத்தில் பீச் இருக்கிறது.

 
 
உள் நுழைகையில் காய வைக்கப்பட்டிருக்கிற கருவாட்டு வாசம் நம் நாசியினை துளைக்கிறது.ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி வெறும் படகுகளுடன் இருக்கிறது இந்த பீச்.மிக அழகாய் எவ்வித கூட்டமும் இன்றி கடலில் குளிக்கும் ஒரு சில நபர்களுடன் அமைதியாய் இருக்கிறது.ஒரே ஒரு ஐஸ் வண்டிக்காரர் மட்டும் வாடிக்கையாளர்களின் வருகையை நோக்கி அந்த வேகாத வெயிலிலும் காத்துக் கொண்டிருந்தார்.கொஞ்ச நேரம் கடலின் அழகையும் அலைகளின் ஆரவாரத்தையும் ரசித்துக்கொண்டு (அம்மணிகள் கூட இல்லை அப்புறம் எவ்ளோ நேரம் அங்க இருக்கிறது என) குருவாயூர் திரும்பினேன்.
சாவக்காடு ஒரு குட்டி வளைகுடா நாடு போல.இங்குள்ள மக்களில் முக்காவாசி பேர் அரபு நாடுகளில் வேலை செய்கின்றனர்.அதனால் தான் அதிகமாய் பெரும் பெரும் கட்டிடங்கள் இங்கே இருக்கின்றன. வெளிநாட்டுப்பொருட்கள் மிக குறைந்த விலைக்கு கிடைக்குமிடம் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.
 
குருவாயூர் செல்பவர்கள் அப்படியே பீச் பார்த்து விட்டு வரலாம்.ஆனைக்கொட்டில் என்கிற இடமும் பார்த்துவிட்டு வரலாம்.

கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்ம்ம்ம்ம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி  இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....
 
நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
 



13 comments:

  1. பாத்தாலே நாக்கில் எச்சி ஊறுதே....

    அதென்ன ஆரம்பத்துல ஒரு முகேஷ் விளம்பரம்?

    ReplyDelete
    Replies
    1. ஆமா...சாப்பிட்டா இன்னும் ஊறும்....
      ஒரு சென்சார் தான்.

      Delete
  2. கள்ளுன்னா என்ன? அது எதிலே செய்வாங்க?

    ReplyDelete
    Replies
    1. குட் கொஸ்டின்....கள்ளு பனை மரத்திலயும் தென்னமரத்துலயும் செய்வாங்க...ஹஹாஹா.....
      ஒண்ணுமே தெரியலயே உங்களுக்கு...அவ்ளோ இன்னோசெண்டா...?

      Delete
  3. படங்களும் பார்பவையும் அழகு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஏலேய்! கள்ளும் பின்னே மீனும் வல்லிய காம்பினேசனா!!!

    எங்கிலும், கொறச்சு சாத்தாங் கறிய(சேவக் கறி) தெங்கம் பாலுல உண்டாக்கி எடுத்துக்கோ!

    கல்லுக்கு வல்லியதொரு சைட் டிஸ்ஸா, கேட்டோ?

    ReplyDelete
    Replies
    1. வாய்யா....கேரள பாஷை பின்ற...எவிட கிட்டும் சாத்தாங்கறி....?

      Delete
  5. கள்ளு சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இன்னும் கொஞ்சம் சாப்பிடு ஜீவா! உடம்புக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லது

    ReplyDelete
  6. அதைதானே டெய்லியும் பண்ணிட்டு இருக்கேன்...திஸ் இஸ் மை எனர்ஜி...ஹஹஹா

    ReplyDelete
  7. Beach படங்கள் அனைத்தும் அருமை.... தொடரட்டும் பகிர்வுகள்....

    ReplyDelete
  8. வேட்டைன்னு சொல்லுங்க,,,,, ஜீவா,,,,,,,,,,

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....