சமீபத்துல இரண்டு மலையாளப்படங்கள் பார்த்தேன். இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்கள்.ஒண்ணு 22 ஃபீமேல் கோட்டயம், இன்னொன்ணு டயமண்ட் நெக்லஸ் .
முதலில் டயமண்ட் நெக்லஸ் பத்தி பார்ப்போம்
டைரக்டர் - லால் ஜோஸ்எழுத்து - இக்பால்
இசை - வித்யாசாகர்
நடிப்பு - ஃபாசில், சம்விருதா,அனுஸ்ரீ,
துபாயில் டாக்டராக பணிபுரியும் ஃபஹாத் ஃபாசில் கிரடிட் கார்டுகளின் துணையோடு, வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கேரக்டர்.(ஜல்சா பார்ட்டி) கூட பணிபுரியும் நர்சினை காதலிக்கிறார். தன் தாயின் லட்சியத்திற்காக துபாய் வந்து நர்ஸ் வேலை பார்க்கும் தமிழ்ப் பெண் கெளதமி நாயர் ஒரு கேரக்டர்.ஃபாசிலின் உயர் டாக்டராக வேலை செய்யும் ரோகினியின் உறவுக்கார பெண் சம்விருதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் இருக்கிற ஒரு கேரக்டர்.
கிரடிட் கார்ட் லிமிட் தாண்டியதால் பணம் கட்ட வேண்டி நெருக்கடி கொடுக்கின்றன கார்ட் கம்பெனிகள்.மேலும் தாய்நாடு செல்ல முடியாத படி ஸ்டே வாங்கிவிடுகின்றனர்.கேரளாவில் அம்மாவின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கேரளா செல்ல நிர்ப்பந்தம் ஏற்பட லேபர் ஆபிசரின் உதவியால் வீட்டிற்கு செல்கிறார்.அம்மாவின் கட்டாயத்தால் கேரள பெண்ணை (துபாயில் உதவி செய்த லேபர் ஆபிசரின் உறவுக்கார பெண் ) மணக்கிறார்.அந்த பெண் அனுஸ்ரீ ஒரு வெகுளி கிராமத்து பெண்.வசதி இல்லாத இவர் ஒரு கேரக்டர்.
டாக்டர் மீண்டும் துபாய் வர அவருக்கு சிக்கல் ஏற்படுகிறது.பணம் இல்லாததால் இருக்கிற இடம், கார் எல்லாம் போய் நடுத்தெருவில் நிற்கிறார்.ஊர்க்காரரான சீனிவாசன் அவருக்கு உதவி செய்து அவருடைய லேபர் கேம்பில் தங்குகிறார்.இந்நிலையில் ஆஸ்பத்திரியில் இவருக்கு கல்யாணம் ஆன விவரம் தெரிந்து நர்ஸ் விலகுகிறார்.பின் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிற பெண்ணின் உதவியால் அவரின் அபார்ட்மெண்டில் தங்குகிறார்.அவர்களுக்குள் கசமுசா ஏற்படுவதற்குள் ரோகிணி தடுத்து டாக்டரின் மனைவியை துபாய் வரவழைக்கிறார்.
தன் கடன்களை அடைக்க கேன்சர் பெண்ணிடமிருந்து வைர நெக்லஸ் திருட டாக்டர் மயக்க மருந்து கொடுப்பதால் பின் விளைவு ஏற்பட்டு அப்போது பணியில் இருந்த நர்ஸ் கவனக்குறைவினால் தான் ஏற்பட்டது என அவரை டிஸ்மிஸ் செய்ய, ஒவர் டோஸ் மருந்தினால் பாதிக்கப்பட்ட கேன்சர் பெண் வேறு ஊருக்கு செல்ல நெக்லஸை டாக்டரிடம் அன்பளிப்பாய் கொடுக்க, மனம் திருந்தி டாக்டர் அதை தன் லட்சியம் நிறைவேறாமல் பாதியில் ஊர் திரும்புகிற நர்ஸ் க்கு கொடுத்துவிட்டு ஒரிஜினல் என்று போலியை மாட்டிக்கொண்டிருக்கிற மனைவியிடம் இருந்து எப்படி மீட்கிறார் பின் இருவரும் ஒன்று சேர்ந்தனரா என்பதுதான் கதை..
தன் கடன்களை அடைக்க கேன்சர் பெண்ணிடமிருந்து வைர நெக்லஸ் திருட டாக்டர் மயக்க மருந்து கொடுப்பதால் பின் விளைவு ஏற்பட்டு அப்போது பணியில் இருந்த நர்ஸ் கவனக்குறைவினால் தான் ஏற்பட்டது என அவரை டிஸ்மிஸ் செய்ய, ஒவர் டோஸ் மருந்தினால் பாதிக்கப்பட்ட கேன்சர் பெண் வேறு ஊருக்கு செல்ல நெக்லஸை டாக்டரிடம் அன்பளிப்பாய் கொடுக்க, மனம் திருந்தி டாக்டர் அதை தன் லட்சியம் நிறைவேறாமல் பாதியில் ஊர் திரும்புகிற நர்ஸ் க்கு கொடுத்துவிட்டு ஒரிஜினல் என்று போலியை மாட்டிக்கொண்டிருக்கிற மனைவியிடம் இருந்து எப்படி மீட்கிறார் பின் இருவரும் ஒன்று சேர்ந்தனரா என்பதுதான் கதை..
துபாயில் நடக்கிற கதை என்பதாலோ படம் படு ரிச்சாக இருக்கிறது.ஹீரோ தங்கி இருக்கும் புர்ஜ் கலிபா பில்டிங் , பெல்லி டான்ஸ் நடக்கும் பாலைவனம், மருத்துவமனை என ஆலுக்காஸின் கைங்கர்யத்தால் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது.மிக அற்புதமான கதை.மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களுடன் பார்க்க படம் சுவாராசியமாக செல்கிறது.இவர்களுடன் ஒரு வைர நெக்லஸ் நடித்திருக்கிறது.ஜோய் ஆலுக்காஸ் ஓனரும் கூட ஒரு காட்சியில் வந்து செல்கிறார்.
லால் ஜோஸ் என்பவரின் இயக்கத்தில் மிக அருமையான படம்.ரொம்ப எதார்த்தமான படம்.
முழுசா சொல்லிட்டனா....என்ன பண்றது இந்த நெளிவு சுளிவு தெரிய மாட்டிங்குது.ஒரே கோவில் குளம், ஹோட்டல்ன்னு சுத்தி இப்போ சினிமா விமர்சனம் எழுத வரமாட்டேன்குது.இன்னும் நல்லா ட்ரை பண்றேன்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
நல்லாத்தான் ட்ரை பண்ணியிருக்கிறீர்கள்... தொடர்க...
ReplyDeleteநன்றி...
அதுக்குள்ளயா கமெண்ட்...உங்க வேகத்துக்கு ஈடு இணை இல்லை நண்பரே...
ReplyDeleteNice bro
ReplyDeleteநன்றி bro
Deleteஹாஹா இது போதும்ம்ன்னே இதுக்கு மேல என்ன சொல்றது
ReplyDeleteகவிதை, ஹோட்டல், கோவில்ன்னு வெரைட்டி கட்டுறா ஜீவா சினிமா விமர்சனஹ்ட்துலயும் ஜொலிக்குறார்.., சொன்னதுக்கு மேலயே கூவிட்டேன்.., அந்த தலைப்பாக்கட்டி பிரியாணி பார்சல் மறாந்துடாதே ஜீவா!
ReplyDeleteகண்டிப்பா...
Deleteஅதுவும் நன்று, இதுவும் நன்று.
ReplyDeleteஉங்க நாவிலும் பார்வையிலும் என்னை மாதிரி ஆட்கள் அனுபவிக்க முடியுது - இல்லின்னா வாய்ப்பேதுங்க?
நன்றி.
நன்றி சார்..
Deleteஅடி தூள் கிளப்புங்க...
ReplyDeleteநான் மொத நாலஞ்சு பதிவுக்கு நொண்டிகிட்டுதான் இருந்தேன்.
இப்போ நொண்டறது தெரியாத மாதிரி ஓடக்கத்துருக்கேன்.
இனிமேதான் ஓடவே ஆரம்பிக்கணும்.
உங்க ஸ்டார்டிங்கே 100 மீட்டர் ரேஸ் மாதிரி இருக்கே.
கலக்குங்க.
உங்க ரேஞ்ச் வேற...என்னா ஓட்டம்...
Deleteவளைகுடா கதை களம் என்றால் நிச்சயமாக மல்லூவுட்டை மிஞ்ச முடியாது அம்புட்டு நேச்சுரலாக எடுப்பார்கள் சினிமாவை...!
ReplyDeleteநான் பார்த்து நெகிழ்ந்து போனேன்..
DeleteராஜிJune 22, 2013 at 1:52 PM
ReplyDeleteகவிதை, ஹோட்டல், கோவில்ன்னு வெரைட்டி கட்டுறா ஜீவா சினிமா விமர்சனஹ்ட்துலயும் ஜொலிக்குறார்.., சொன்னதுக்கு மேலயே கூவிட்டேன்.., அந்த தலைப்பாக்கட்டி பிரியாணி பார்சல் மறாந்துடாதே ஜீவா!//
ஓஹோ இந்த அநியாயம் வேற நடந்துட்டு இருக்கா...?
கொண்டேபுடுவேன்.
உங்களுக்கு உண்டு மனோ மாம்ஸ்...
Deleteமச்சி, இந்த ஏரியாவுக்குள்ளயும் வந்துட்டயா?? சூப்பர் ஸ்டார்ட்,
ReplyDeleteநன்றி bro
ReplyDeleteஹிஹிஹி என்ன பண்றது...
ReplyDeleteஹ்ம்ம்ம்ம்.. . . . .நல்லா எழுதியிருக்கீங்க..ஆனாலும் இன்னும் கொஞ்சம் விருவிருப்பு தேவைன்னு நினைக்கிறேன்.. (5.5/10)
ReplyDelete-Kavin Smk
அடுத்து திகில் படமா எழுதிடலாம்...விறுவிறுப்பு இருக்கும்ல...
Deleteஅய்யூ பேயி. . . :)
Deleteபயப்படாதீங்க பாஸ்...
Delete