இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வீட்ல இருக்கும் போது நம்ம உலகசினிமா ரசிகன் அவர்கிட்ட இருந்து ஒரு போன்.ஆலாந்துறை வரைக்கும் ஒரு ரைடு போலாம் அப்படின்னு..சரின்னு ரெடியாகி நம்ம சிங்கத்துல கிளம்பினோம்.போய்ட்டு ரிடர்ன் வரும் போது பசி வயித்தைக்கிள்ள அடடே அப்படின்னு மணி பார்க்க இரண்டை தொட சில நிமிடங்களே இருந்தன.எப்படி மறந்தோம் அப்படின்னு பேசிகிட்டே உக்கடம் வந்து சேர்ந்தோம்.உக்கடம் பஸ்ஸ்டாண்ட் பின்னாடி இருக்கிற குடியிருப்புக்கு அருகில் வண்டியை நிறுத்த பிரியாணி மணம் நம்மை வரவேற்றது.வாசனையை நுகர்ந்து கொண்டே போய் நின்ன இடம் முத்து ராவுத்தர் பிரியாணி கடை.கோட்டைமேடு.
ஞாயிற்றுக்கிழமை வேற...உள்ளே ஏகப்பட்ட கூட்டம்.பார்சல் வாங்கவும் அமர்ந்து சாப்பிடவும் வரிசையாய் நிற்கிறார்கள்.கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமானோம்.காலியான டேபிளில் இடம் பிடித்துக்கொண்டோம்.நாம எப்பவும் விரும்பி சாப்பிடுவது பீப் பிரியாணி தான்.அதையே தான் ஆர்டர் பண்ணினேன்.ஆனா நம்ம உலக சினிமா ரசிகரு ஹைதராபாத் பிரியாணி சிக்கன் ஆர்டர் பண்ணினாரு...எனக்கு கொஞ்சம் சீக்கிரமாவே கொடுத்திட்டாங்க.....அவருக்கு கொஞ்சம் லேட்தான்...இலையில் போட்ட பிரியாணியை காக்க வைக்க கூடாதுன்னு கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்த்தேன்...சுடச்சுட....ஆஹா சூப்பர்.கொஞ்சம் கூட சுவை குறையல.போன மாசம் சாப்பிட்ட போது இருந்த அதே டேஸ்ட்.அதுக்குள்ள உ.சி.ரசிகனுக்கு வரவே அவரும் பூந்து விளையாட ஆரம்பிச்சார்.பாசுமதி அரிசியில் சிக்கன் துண்டுகள் இரண்டினை வைத்து மிக சுவையாய் செய்திருந்தனர்.நம்ம பிரியாணியில் பீப் இறைச்சியும் சீரகசம்பா அரிசியும் மிக சுவையாய் இருந்தது.உள்ளே போவதே தெரியாமல் காலியாகிக்கொண்டிருந்தது.
பக்கத்து டேபிளில் பார்த்தபோது ஒரு சிறுமி உள்பட அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.பீப்சில்லி, பீப் சுக்கா, சிக்கன் சில்லி, முட்டை, காடை, நண்டு , குடல் வறுவல் என எல்லா வெரைட்டியும் இருக்கிறது.ஆனால் அதிகம் பின்னி பெடல் எடுப்பது பீப் பிரியாணிதான்.அப்புறம் கூடவே சுக்கா ஆர்டர் பண்ணினேன்.பெப்பர் போட்டு நல்ல கரு கரு நிறத்தில் வந்தது.இதுவும் நல்ல டேஸ்ட்தான்.
விலை குறைவுதான்.பிரியாணி 50, ஹைதராபாத் பிரியாணி 75 சுக்கா 30..முன்னை விட இப்போது பிரியாணி விலை தற்போது கூடி இருக்கிறது.
பிரியாணியைப்பொறுத்த வரையில் சுவை நன்றாக இருக்கிறது.ஆனால் தயிர் பச்சடி எப்போ போனாலும் புளிப்பாகவே இருக்கிறது.அதை மட்டும் சரி செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.அதுபோலவே கடையில் போடப்பட்டிருக்கிற டேபிள் சேர்கள் அனைத்தும் மிக நெருக்கமாக இருக்கின்றது.உட்கார்ந்தால் அடுத்தவர் முதுகு இடிக்கிறது.ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டு செல்கின்றனர் இந்த கடையின் வாடிக்கையாளர்கள்.கீழ் தளம் மட்டுமல்ல மேல் தளத்திலும் சர்வீஸ் நடக்கிறது.
அசைவ உணவு பிரியர்கள் கண்டிப்பாக ருசிக்க வேண்டிய இடம்.
இங்க போகனும்னா டவுன்ஹாலில் இருந்து கோட்டை மேடு வரலாம். உக்கடத்திலிருந்தும் நடந்தே வரலாம்.தொலைவு குறைவுதான்.
இந்த கடைக்கு அருகிலேயே ஆபிதா பிரியாணி கடை இருக்கிறது.இங்கும் சுவை நன்றாக இருக்கும்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ji, tea innum varalai.......ungalukku biriyaaniye vanthuducha...varen kovaikku seekiramaa
ReplyDeleteவாங்க ஜி...கண்டிப்பா...
Deleteவிலை மிகவும் குறைவு...
ReplyDeleteஆமா....நன்றி...
Deleteபிரியாணி டேஸ்ட் நாவை விட்டு மறைவதற்குள்...
ReplyDeleteஎக்ஸ்பிரஸ் வேகத்தில் பதிவா !
பிரியாணி போல பதிவும் சூப்பர்.
சார் வணக்கம்...அங்க சாப்பிட்டது மட்டுமல்லாம திருனங்கை சங்கீதா வீட்டுல சாப்பிட்டமே அது எப்படி இருந்துச்சி...?
Deleteபிரியாணிக்கு எப்பவும், எங்கயும் மவுசுதான் போல
ReplyDeleteம்ம்ம்...உங்க ஊர் பக்கத்துல வாணியம்பாடி ஆம்பூர் இப்படீன்னு பிரியாணி கிடைக்கும்...
Deleteஎனக்கும் பிரியாணியும் பிடிக்கும் ...பிரியாமணியையும் !
ReplyDeleteவணக்கம் சார்..அங்க பிரியாணி மட்டும் தான்...பிரியாமணி கிடைக்காது..
Deleteஉணவு வகைகள் சுவையை விட பார்வைக்கு அழகாக இருப்பது மிகவும் முக்கியம். அதுவே ஒரு கலை ஆனால் பல தமிழ்நாட்டு உணவகங்கள் அதை உணர்வதாகத் தெரியவில்லை. நீங்கள் கூறுவது போன்று இந்த இரண்டு உணவு வகையும் உண்மையிலேயே சுவை மிக்கதாக இருக்கலாம், ஆனால் பார்க்கும் போது அவை பசியைத் தூண்டவில்லை. அதிலும் அந்த சுக்காவோ என்னமோ பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. :-)
ReplyDeleteவாங்க சார்...நான் என்ன 5 ஸ்டார் ஹோட்டலுக்கா போனேன்.பாய் கடை பிரியாணி சாப்பிட போனேன்.கார்னிஸ் லாம் பண்ணி தந்தா அவங்க பொழப்பு அவ்ளோதான்.
Deleteவிட்டா தள்ளுவண்டி கடையில கூட எல்லாம் கேட்பீங்க போல....
கடைக்கு 50 அடி தள்ளி வர்ற வாசமே நம்மள கடைக்குள்ள இழுத்திடும்.அப்ப்டி டேஸ்டா சமைப்பாங்க முஸ்லீம் அன்பர்கள்..
சரி சார், நான் ஒன்றும் நக்கல் விடவில்லை உண்மையிலேயே அந்த சுக்காவை பார்க்க நல்லாவேயில்லை. :-)
Deleteஅது சரி இன்னொரு சந்தேகம் எதற்காக நீங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் "பீப்பிரியாணி" என்று எழுதுகிறீர்கள், கேட்கவே என்னமோ மாதிரியிருக்கு. பேசாமல் மாட்டிறைச்சி பிரியாணி என்று சொல்லி விடுங்கள் பிரச்சனையேயில்லை. போனவருடம் நான் எனது சகோதரியின் குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தேன். நாங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போய் விட்டு சென்னை திரும்பும் வழியில், எனது 8 வயது மருமகன், வாரத்தில் இரண்டு முறை கனடாவில் பகல்நேர வகுப்புகள் முடிந்தவுடன், மாலையிலும் போய் ஒரு தமிழாசிரியையிடம் கஷ்டப்பட்டு படிக்கும் தனது தமிழறிவை தமிழ் நாட்டில் சோதித்துப் பார்க்க நினைத்தானோ என்னவோ, வழியிலுள்ள பெயர்ப்பலகைகளை எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டு வந்தவன் இங்கு "பீப்பிரியாணி" கிடைக்கும் என்பதைப் பார்த்து அப்படியே குழம்பிப் போய் விட்டான். அவனுக்கு அதிலுள்ள பிழையை விளக்குவதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. :-)
வியாசன் அவர்களே...
Deleteதமிழ் நாட்டில் நிறைய உணவுப்பொருளுக்கு...
ஆங்கில வார்த்தைகளை...தமிழாக்கி பாவித்து வருகிறோம்.
பீப் பிரியாணி = மாட்டிறைச்சி பிரியாணி.
போர்க் = பன்றிக்கறி.
மட்டன் = ஆட்டுக்கறி.
சிக்கன் = கோழி.
தமிழில் இந்த வார்த்தைகளை உபயோகிக்க தமிழனுக்கு கஷ்டமாக இருக்கிறது.
கிராமங்களில் மட்டும் கொஞ்சம் இந்த தமிழ் வார்த்தைகள் உயிர் வாழ்கின்றன.
வெகு விரைவில் தொலைக்காட்சி அங்கும் ‘மொழி மாற்றம்’ செய்து விடும்.
வணக்கம் வியாசன் அவர்களே...
Deleteஎன்னது..தமிழ் நாட்டுல தமிழ்ல சொல்லுவாங்களா...?இப்போ ஆங்கில மயமாகிவிட்டது அனைத்தும்...
யாருக்குங்க அக்கறை இருக்கு...என்னையும் சேர்த்து தான்..
ஒரு சில பொருட்களின் பெயர் நம்மை அறியாமலே ஆங்கிலத்தில் தான் உச்சரிக்கிறோம்....
வணக்கம் பாஸ்கரன் சார்...
Deleteதெளிவு படுத்தியமைக்கு நன்றி....
ஆஹா.... ஹோட்டல் ஹோட்டலாக சுவைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போல! :)
ReplyDeleteஎன்ன பண்றது சார்...எங்காவது போனா பசிக்குதே...
Delete