கரம் - பல்சுவை
-----------------------------------------------------------------------
கடந்த முறை ஊட்டி போயிருந்த போது ஒரு வகையான பழம் வாங்கி சாப்பிட்டேன்.வீட்டுக்கும் வாங்கி வந்தேன்.உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியம் என்றும் ஒரு சில சீசன்களில் தான் கிடைக்கும் என்று சொன்னார்கள்.நிறைய பேர் இந்த பழத்தினை விரும்பமாட்டார்கள் என்றும் ஒரு கூடுதல் தகவல்.ஒருவகை புளிப்பு மற்றும் இனிப்பு சுவைகளுடன் விதையுடன் கூடிய ஒரு ஜெல் மாதிரி இருக்கிறது.அந்த பழத்தின் பெயர் மறந்து விட்டபடியால் ரொம்ப நாளுக்கு அப்புறம் ஊட்டியில் இருக்கும் நம்ம நண்பருக்கு அந்த படத்தினை மெயில் அனுப்பி பின் விவரம் கேட்டு இந்த பதிவினில் எழுதுகிறேன்.பேசன் புரூட் (passion fruit ) என்கிற இந்த பழத்தினைப் பற்றி விக்கிபீடியாவில் அறிந்து கொள்ளலாம்.நம்ம ஊருல அதாவது எங்க கிராமத்துல வேலியோரம் ஒரு செடி படர்ந்து இருக்கும்.நல்ல மொசு மொசுன்னு பழத்தினை சுத்தி இருக்கும்.பூனை புடுக்கு பழம் என்று கிராமத்தில் சொல்வார்கள்..ஆங்கிலத்தில் என்னவென்று தெரியவில்லை. அந்த பழத்தின் சுவையினை ஒத்திருக்கிறது.விதைகளும் அப்படியே...
-----------------------------------------------------------------------
அப்படியே இன்னொரு சாப்பாட்டு அயிட்டம்.நாமக்கல்லில் இருந்த போது ஒரு பாட்டி கூடையில புட்டு வித்துட்டு இருந்தாங்க.கேரட் புட்டு, கேழ்வரகு புட்டு, அரிசி புட்டு இப்படி...ரோட்டுல கூவிக்கிட்டு போயிட்டிருந்த பாட்டியை கூப்பிட்டு இந்த புட்டுகளை வாங்கினோம்.குடிசைத் தொழிலாக செய்கிறார்களாம்.விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.6 ரூபாய் மட்டுமே..இதில் கேரட் புட்டு மட்டும் இனிப்பு சேர்த்து செய்யப்பட்டு இருக்கிறது.அனைத்தும் சுவையாக இருக்கிறது.
------------------------------------------------------------------------
மீண்டும் இன்னொரு சுவையான அயிட்டம்.கேரட் அல்வா.இது கரூர்ல ரொம்ப ஃபேமஸ்.எல்லா ஸ்வீட் கடைகளிலும் கிடைக்கும்.நான் எப்பவும் கரூர்ல இருக்கிற டெல்லி ஸ்வீட்ஸ் கடையில் தான் வாங்குவேன்.அவ்ளோ சுவையா இருக்கும்.இந்த கடையை விட இன்னும் நிறைய கடைகளில் இதைவிட டேஸ்டாக இருக்கிற கேரட் அல்வாக்களும் உண்டு.கரூர்ல கரம் என்கிற உணவுப்பொருளுக்கு அடுத்து இது தான் டேஸ்ட்.
---------------------------------------------------------------------------
நான் பல ஊருகளுக்கு பயணம் செய்யிறதால் ஏகப்பட்ட விபத்துக்களை பார்த்து மனம் வருந்தி இருக்கேன்.அதைப்பத்தி ஏற்கனவே பதிவா போட்டிருக்கேன்.இப்போ சமீபத்துல சேலம் செல்லும் போது கூட ஒரு லாரி கவிழ்ந்து கிடந்தது.டிரைவர்களின் அலட்சிய போக்கினால் அதிகம் விபத்துகள் ஏற்படுகின்றன.கடுமையான சட்டத்தின் மூலமும் தனி மனித அக்கறையும் இருந்தால் கண்டிப்பாக தவிர்க்க முடியும்.
--------------------------------------------------------------------------------
இந்த வண்டி நிக்கிற ஸ்டாண்டு பாருங்க..தண்ணி மட்டுமல்ல வண்டியையும் தூக்குவோம்.
பழைய கரம் - 1
நேசங்களுடன்
ஜீவானந்தம்
உங்க ஊர்ல ‘பூனை புடுக்கு’...
ReplyDelete[வெவகாரமான ஊருங்கோ]
எங்க ஊர்ல ‘புட்டு முருங்கை’
வாங்க....அன்னிக்கு ஆலாந்துறையில காண்பிச்சேனே அது தான் பூனை புடுக்கு பழம்...
Deleteவித்தியாசமான சுவைகளை புட்டு புட்டு வைச்சிட்டீங்க...!
ReplyDeleteஅதிக வேகம் மட்டும் ஒரு காரணமல்ல...
நன்றி...வேகம் ஒரு காரணம், டிரைவர் ஒரு காரணம், செல்போன் ஒரு காரணம், கடைசியா மதுவும் ....
Deleteகரூர்ல நான் ‘கரம்’ விரும்பிச் சாப்பிட்டிருக்கேன். பட், கேரட் அல்வா? மிஸ் பண்ணிட்டேன். அடுத்த முறை பாத்திரலாம்!
ReplyDeleteகண்டிப்பாக....பார்க்கவேணாம் வாங்கியே சாப்பிடுங்க...
Deleteஎல்லா பேக்கரியிலும் கிடைக்கும்..டெல்லி ஸ்வீட்ஸ்ல அதுக்கு பக்கத்துல ஒரு கடை இருக்கு ரெண்டிலயும் நல்லா இருக்கும்,
தகவலுக்கு நன்றி
ReplyDeleteவாங்க மாம்ஸ்..நன்றி..
Deleteஇன்று கலையில் கூட வரும் வழியில் ஒரு விபத்து வாய்காலில் கவிழ்ந்தது ஒரு மினி லாரி என்ன பன்றது
ReplyDeleteகொஞ்சம் ஹெல்ப் பண்ணியிருக்கலாமே...நன்றி சக்கர...
Deleteஅடடா! போனவாரம் தான் கரூர் வந்திருந்தேன்! முன்னரே தெரிந்திருந்தா கேரட் அல்வா ஒரு கை பார்த்திருப்பேன்! இனி அடுத்த வருசம்தான் போல! சுவையான பதிவு! நன்றி!
ReplyDeleteகண்டிப்பாக வாங்க...
Deleteகேரட் புட்டு புதிதாக கேள்விபடுகிறேன். அடுத்த வாரம் செய்து பார்த்து விட வேண்டியதுதான். எங்கள் வீட்டில் ஞாயிற்று கிழமை தோரும் காலை உணவு கேப்பை புட்டுதான்
ReplyDeleteஒ...அப்படியா...அப்போ உங்க வீட்டிற்கு வந்தா கேப்பை உண்டு...நன்றி.,
DeleteSuper pathivu, ippove saapidanum pola irukku
ReplyDeleteவாங்க உலகம் சுற்றும் வாலிபன்...நன்றி...
DeleteMaappu.. adhiga vegam mattum thaan vipathukku kaaranamaa??
ReplyDeleteவா மச்சி...அதிக வேகமும் மது. மாது இப்படி எல்லாம் காரணம்..
Deleteவாங்க ஆபிசர்..நன்றி...
ReplyDeleteகேரட் ஹல்வா தில்லியில் மிகவும் பிரபலம். குளிர்காலம் வந்தாலே கடைகளில் கேரட் ஹல்வாவும் வந்து விடும்.....
ReplyDeleteசுவையான பகிர்வு. தொடரட்டும் பதிவுகள்.
நன்றி...சார்
Delete