திருச்செங்கோட்டில்
இருந்து ராசிபுரம் செல்லும் வழியில் ஆண்டலூர்கேட் என்கிற ஊருக்கு முன்பாக இரண்டு
கிலோ மீட்டர் தொலைவில் ஒரு ஊரின் பெயரினைப்பார்த்தேன்.பார்த்தவுடன் கொஞ்சம் ஆச்சர்யத்துடன்
சிரிப்பும் வந்தது.ரொம்ப வித்தியாசமாக இருந்த ஊரின் பெயர் கரையான்
தின்னிப்புதூர்.இந்த ஊர்ப்பெயருக்கான காரணம் என்னவாக இருக்கும் என்கிற யோசனையோடவே
தொடர்ந்து பயணித்தேன்.
***************************
கோவையில் சாயந்திரம் கிராஸ்கட் ரோட்டில் கண்ணன் டிபார்ட்மெண்ட் அருகே ஒரு போளி வண்டி வரும்.தேங்காய் போளி, பருப்பு போளி என இரண்டு சுவைகளில் செய்து சுட சுட இருக்கும்.மிக சுவையாக இருக்கும்.விலையும் குறைவு தான்.இரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் மாவை எடுத்து உள்ளே பருப்போ தேங்காயோ நிரப்பி தேய்த்து கல்லில் போட்டு சுட சுட எடுத்து தருவதில் பையன் ரொம்ப பாஸ்ட்.ரொம்ப நேரம் பேசியதில் அந்த பையன் ஒரு பிரபல கல்லூரியில் படித்துக்கொண்டு பார்ட் டைமாக இந்த வேலை செய்துகொண்டு இருப்பதை தெரிந்து கொண்டேன்.வாழ்த்துக்கள் தம்பி...
***************************
அப்புறம்
நம்ம கிட்ட ஒரு நல்ல (?) பழக்கம் இருக்கு.எப்ப பழைய சாதம் சாப்பிட்டாலும்
அதில் ஒரு பெக் வோட்கா கலந்து சாப்பிடுவது.செம டேஸ்டா இருக்கு.புதிய புதிய
கண்டுபிடிப்புகளுக்கு இனி பேடண்ட் வாங்கணும்.
************************
கண்ணீர் அஞ்சலி
இயக்குனர்
மணிவண்ணனின் ஆத்மா சாந்தியடைட்டும்.
அப்படியே அன்னக் கொடிக்கும் கண்ணீர் அஞ்சலி.
*************************
காசு... பணம்...
துட்டு.... மணி...மணி...யம்மாடி எவ்ளோ பணம்..இது மட்டும் இருந்தா இன்னும்
எப்படியெல்லாம் செலவு பண்ணலாம்.கொடுப்பினை இல்லையே.....ஹிஹிஹி...இதெல்லாம் டம்மி
நோட்டுகள்.சினிமாவில் பயன்படுத்தப்படும் டூப்ளிகேட் வகையறாக்கள்...சென்னையில் ஒரு
ஷூட்டிங் ஸ்பாட்டில் சுட்டது.
*******************************
கொஞ்ச நாள் முன்னாடி
ஓசூர்ல இருக்கிற என் நண்பனோட வீட்டிற்கு போய் இருந்தேன்.வீடு முழுக்க அவன்
குடித்துவிட்டு போட்டிருந்த காலி பாட்டில்கள் ஒரே குப்பையாய்....சரி என்ன பண்ணலாம்
அப்படின்னு யோசித்ததில் வீடு முழுக்க நிறைந்திருந்த காலி பாட்டில்களை விற்று ஒரு ஃபுல்
தேத்தி அந்த நாளை ரொம்ப ஜாலியா கொண்டாடினோம்.வீடும் சுத்தமாயிற்று...மனசும்
குப்பையாச்சு....ஹிஹிஹி
**************************
கிசுகிசு : மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு.இதை பார்த்துவிட்டு உங்கள் கை அரித்தாலே நடுங்கினாலோ கம்பெனி பொறுப்பில்லை.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
காரம் மணம் சுவை நிறைந்த மசாலா கரம் சூப்பர்.
ReplyDeleteகாரம் மணம் சுவை நிறைந்த மசாலா கரம் சூப்பர்.
ReplyDeleteவணக்கம் சார்..நன்றி...
Deleteகரையான் தின்னிப்புதூர்>>
ReplyDeleteஇதுப்போல வித்தியாசமான பெயர்கள் கொண்ட ஊர் தமிழகத்தில் இருக்கு சகோ..,
உழைப்பை நம்பி வாழும் போளி விற்று படிப்பை தொடரும் அந்த முகம் தெரியாத தம்பிக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க..
அந்த பழைய சாதம், வோட்காவுக்கு பேடண்ட் வாங்கிடுங்க.. அப்பதான் அடுத்த தலை முறைக்கு பயன்படும்..,
அந்த பாட்டில்லாம் நண்பர் வீட்டுல இருந்து எடுத்ததா நம்ம்பிபிபிட்ட்ட்ட்டோம்ம்...
நன்றி க்கா...ஆனா உண்மையா ஓசுர்ல தான் எடுத்தேன்.
Deleteநான் சேர்த்து வைக்கிற பழக்கம் இல்லை...
அண்ணே உங்க கிட்ட தான் மிச்சபடுத்த கத்துக்கணும்
ReplyDeleteகுப்பையும் பணமாகும் என்பதை தானே சொல்றீங்க சக்கர....ஹிஹிஹி
Deleteபோலி SUPPER
ReplyDeleteபோளி.......போலி இல்லாத டேஸ்ட்..
Delete
ReplyDeleteவோட்கா வ சாத்ததுல போட்டு சாப்பிடனுமா ...சுடு சோறு ளையும் குழம்பா ஊற்றி சாப்பிட சொல்லி டிப்ஸ் கொடுங்களேன் ....நல்ல டிப்ஸ் கொடுகீங்க குடிமகனுகளுக்கு....நானா இருந்தா சொருல கொஞ்சம் வோட்காவும் கொஞ்சம் பாய்சனும் சேர்ந்ததே கொடுத்திருப்பேன் ,,,,
...
எதுக்கு உங்களுக்கு அந்த நல்ல வேலை எல்லாம்..சீக்கிரம் நாங்களே போயிடுவோம்...ஹிஹிஹி
Delete
ReplyDeleteபாட்டில்களை விற்று ஒரு ஃபுல் தேத்தி அந்த நாளை ரொம்ப ஜாலியா கொண்டாடினோ/// .... வாணாம் நா ஒண்டுமே சொல்லல ...சொல்ல வந்தத கூட சொல்லல
பரவாயில்ல...சொல்லுங்க
Deleteநல்ல வோட்கா இங்கே கிடைக்கிறது ஆனால் நல்ல ப்ழைய சாதம்தான் இங்கே கிடைக்கவில்லை. நானும் சாதத்தில் தண்ணிர்விட்டு ஊறவைத்தும் நம்ம ஊர் பழையசாதாம் டேஸ்ட் இல்லை.ஹூம்ம்ம்ம் நீர் கொடுத்து வைத்தவர்தான்
ReplyDeleteவாங்க...ஒரு நாளைக்கு சாப்பிடலாம்
Deleteஅன்னக்கொடிக்கு அஞ்சலியா !
ReplyDeleteமுதல் மரியாதை தந்த படைப்பாளிக்கு இந்த நிலைமையா !!
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்த பாரதிராசா,
தன் பிள்ளையை மட்டும் பட்டினி போட்டு கொல்றாரு.
ஹிஹிஹி....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅடுத்த முறை கோவை வரும் போது போளிகளை சாப்பிட வேண்டியது தான் - உங்களுடன்...!
Deleteசார் அந்த கமென்ட் என்ன ? உள்குத்து எதுவும் இல்லையே
Deleteகண்டிப்பா வாங்க சாப்பிடலாம்....போளி தானே
சரக்கு புராணம் கொஞ்ச நாளா இல்லையேன்னு பார்த்தேன்.
ReplyDeleteவா மச்சி....சரக்கு இருக்கு இன்னும்
Deleteஏம்பா நல்ல விஷயங்களை சொல்லும்போது கூட உங்க கதையை இடையில சொருகிடறீங்களே....
ReplyDeleteஒரு நல்ல படத்துல மசாலா இருக்கறதில்லையா அது போல தான்
Deleteஹி ஹி... காலி பாட்டிலைக் கூட சரக்காக மாற்றிய உங்கள் திறமை போற்றுதலுக்குரியது....
ReplyDeleteஎல்லாம் உங்க தயவுதான் அண்ணாச்சி....
Deleteபோளி விற்று படிக்கும் படிப்பாளிக்கு வாழ்த்துக்கள்! கரையான் தின்னிப்புதுர்! வித்தியாசமான பெயர்தான்! எங்கள் ஊர் பக்கம் எருமை வெட்டி பாளையம் னு ஒர் ஊர் இருக்கு! மஹிஷாசூர வதம் அங்கதான் நடந்ததா சொல்றாங்க! ஒரு பத்ரகாளி கோயிலும் இருக்கு! நன்றி!
ReplyDeleteநன்றி...சுரேஷ்....தகவல் கூடுதல் நன்றி...
Deleteபோளி விற்கும் இளைஞன் - பார்ட் டைமாக எதோ ஒரு தொழில் செய்ய வேண்டும் என நினைக்கும் அவரது எண்ணம் வாழ்க....
ReplyDeleteநன்றி...எனக்கு வாழ்த்து இல்லையா
DeleteSuper thala..nenga kovai vingani
ReplyDeleteஏதோ நம்மளால முடிஞ்சது ராஜ்
Deleteஎன் நண்பர் இணையதளத்தில் என்னை பார்க்க நன்றாக உள்ளது.
ReplyDeleteமக்களுக்கு அழகான பொழுதுபோக்கு
வணக்கம் நண்பரே...என்னை விட இன்னும் பொழுது போக்கு தளங்கள் நிறைய இருக்கு...ஒரு சுத்து சுத்தி வாங்க...அப்புறம் என் பக்கம் வரமாட்டீங்க
Deleteகோவை நே " ரம் "
ReplyDeleteஆஹா..என்னா ஒரு ரம்..நன்றி..
Delete