Wednesday, June 19, 2013

கோவை மெஸ் - நூராணி பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி, கோவை

நூராணி பிரியாணி ஹோட்டல்.
பீப் சாப்பிடணும் அப்படின்னா உக்கடம், கோட்டை மேடு அப்புறம் முஸ்லிம் அன்பர்கள் வசிக்கிற இடத்துக்குத்தான் போகனும் அப்படிங்கிற எண்ணம் இருந்துச்சு.ஆனா நம்ம ஏரியாவான சாய்பாபா காலனியில் மெயின் ரோட்டிலேயே இரண்டு கடைகள் இருக்கின்றன.அதில் ஒன்று தான் இந்த நூராணி.இன்னொரு கடையிலும் சுவை நன்றாக இருக்கும்.அதைப்பற்றின விவரங்கள் அடுத்த பதிவில் பார்க்கலாம்.இப்போ நூராணி.
இந்த பேரைப் பார்த்தாலே நம்ம முஸ்லிம் அன்பர்களோட ஹோட்டல் என்பது தெரியவரும்.இந்த கடைக்கு எப்போ போனாலும் சூடான சுவையான புரோட்டா கிடைக்கும்.அப்புறம் நான் வெஜ் அயிட்டத்துல பீஃப் சில்லி, பீஃப் சுக்கா, மற்றும் பிரியாணி, காடை வறுவல், சிக்கன், மட்டன் என்ன மற்றவைகளும் இருக்கிறது.

சின்ன கடைதான்.இப்போது கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டு இருக்கிறது.கடைக்கு உள்ளே நுழையும் முன்பே நம்மை வாசம் உள்ளே இழுத்துக்கொண்டு செல்வது உறுதி.சுடச்சுட புரோட்டா சதுரவடிவில் போட்டுக்கொண்டு இருப்பர்.மிக சுவையாக இருக்கும்.அந்த புரோட்டாவிற்கு சிக்கன் குருமா ஊற்றி சாப்பிட்டால் செமயாக இருக்கிறது.இல்லை எனில் பீப் வறுவலோடு சாப்பிட இன்னும் டேஸ்டாக இருக்கிறது.


பிரியாணி அப்படி ஒன்றும் சுவை இல்லை.மட்டன் மட்டும் நன்றாக வெந்து இருக்கிறது.பாய்கடை பிரியாணி போல இல்லை.பீப் சுக்கா நன்றாக இருக்கிறது.நம்மளை மாதிரி ஆட்களுக்கு இந்த கடை பெஸ்ட்.பார்சல் வாங்கிட்டு போய் சாப்பிடற ஆட்களும் இருக்கிறார்கள்.
கடைக்கு உள்ளே நுழையும் போது சூடான கல்லில் இருந்து எடுத்துப்போட்ட புரோட்டாக்கள் உடனடியாக வாடிக்கையாளர்களின் இலைக்கு சென்று சீக்கிரம் காலியாகிக்கொண்டே இருக்கின்றன.புத்தம் புது புரோட்டாக்கள் ரெடியாகிக்கொண்டே இருக்கின்றன.

விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.சுட சுட புரோட்டா சாப்பிட போகனும் என்றால் கண்டிப்பாக போகலாம்.சாய்பாபா காலனியில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

15 comments:

  1. ஓக்கே ரைட்டு.., நான் கோவை வரும்போது வாங்கி தாங்க ஜீவா! எனக்கு பரோட்டான்னா ரொம்ப பிடிக்கும். ஆனா, ஃபீஃப் இதுவரை சாப்பிட்டதில்லை

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா...இன்னொரு கடை நேரு ஸ்டேடியத்துல இருக்கு பர்மா பாய் கடை என்று அங்கும் நல்லா இருக்கும்.அப்புறம் நஞ்சப்பா ரோடு உப்பிலி பாளையம் தாஸ்கேண்டின் .அங்கயும் சூப்பரா இருக்கும்.வாங்க எல்லா கடை புரோட்டாவும் வாங்கித்தரேன்

      Delete
  2. இத படிக்கும் போதே வாய் ஊருகிறது

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டா இன்னும் ஊறும்.

      Delete
  3. நன்றாகத்தான் இருக்கிறது.

    எனக்கு சைவ உணவுதான். :)

    ReplyDelete
  4. எனக்கு ஒரு சில்லி பீப் பார்சல்.....

    ReplyDelete
    Replies
    1. வந்து சாப்பிட்டுவிட்டு போங்க....

      Delete
  5. பீப் சுக்கா சூடாக சாப்பிட்டால் தான் சூப்பரே...

    ReplyDelete
  6. ஐ!! பரோட்டா சூப்பரா இருக்கே..

    ReplyDelete


  7. விஜய் பாரடைஸ் பக்கதுலயா மச்சி..

    ReplyDelete
    Replies
    1. இல்ல மச்சி....
      கண்ணன் டிபார்ட்மெண்ட் பக்கத்துல...

      Delete
  8. beef sukka gd taste.. but full of color powder....

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....