Monday, December 10, 2012

வெளிநாட்டு அனுபவம் - சிங்கப்பூர் - 1

சிங்கப்பூர்...ஒரு பூலோக சொர்க்கம்.இந்த சிங்கப்பூரை பத்தி நம்ம தலைவர் ஒரு படத்துல பாடி இருப்பார்.
 அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே...

புதுமையிலே மயங்குகிறேன்.....
அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே...
பார்க்க பார்க்க ஆனந்தம்
பறவை போல உல்லாசம்

மஞ்சள் மேனி பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உம்மை பாராட்ட
நடை பார்த்து மயில் ஆடும்
மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர்....
அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே...
அங்க போயும் அம்மணிகளை பத்தி முப்பது வருசத்துக்கும் முன்பே பாடி இருக்காரு..
ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், சீரான போக்குவரத்து, சுத்தம் சுகாதாரம்  என அம்சமாய் இருக்கிறது சிங்கப்பூர்.அதுபோலவே வெளிநாட்டு அம்மணிகளும்.... அதிகமாய் அரை டிரவுசர் போட்டுக்கொண்டு....பார்க்க பார்க்க அதிசயத்து போகிறேன்.



MRT எனப்படும் ரயில் சேவை...மிக அருமை.எல்லாரிடமும் ஒரு ஒழுங்கு இருக்கிறது.யாரும் முண்டியடுத்து ஏறுவதில்லை.அவரவர் தத்தம் மொபைல் போன், ஐ பாட், என மூழ்கி இருக்கின்றனர்.அனைவரிடமும் ஸ்மார்ட் கார்டு இருக்கிறது.உள்ளே நுழைவது முதல் வெளியேறுவது வரை அனைத்தும் ஸ்மார்ட் கார்டின் மூலம் தான்.
நம்ம ஊர்ல இதெல்லாம் எப்போ வருமோ....
இரவு நேரம் ஊரே விழித்து இருக்கிறது,ஷாப்பிங் மால்களில் , பப்களில் விடிய விடிய இருக்கின்றனர்.
நாங்களும் முஸ்தபா சென்டர் அருகில் இருக்கும் ஒரு பப் போனோம்...ஒரே சவுண்ட்..துள்ளலான இசை...சரி..செமையா இருக்கும் அப்படின்னு உள்ளே போய் பார்த்தா ஆடிக்கிட்டு இருக்கிறது எல்லாம் நடுத்தர வயது அம்மணிகள்...அட போங்கப்பா....
வெறுத்துப் போய் ஒரு லார்ஜ் மட்டும் சாப்பிட்டு விட்டு வெளியேறினோம்.மூன்று மணி வரை சிங்கப்பூர் இரவினை ரசித்தோம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்.



6 comments:

  1. நீங்க இன்னும் குடிக்கிறதை விடலையா?

    ReplyDelete
  2. மச்சம் கண்டு ரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. தலைவர் பாடினாலும் அங்கிருந்து பெண்ணை கூட்டிவரும்போது புடவையில் தானே கூட்டிட்டு வரார். Why so late? பதிவைச் சொல்றேன்...

    ReplyDelete
  4. மலேஷியா அனுபவம் எப்படி இருந்தது?

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....