Friday, March 16, 2012

போலிகளின் சாம்ராஜ்யம் – டிவிகள்


வர வர டிவி களுக்கு விவஸ்தை இல்லாமல் போய் விட்டது.போலிகளை ஊக்குவிக்க இவர்களும் துணை போவது தான் வருத்தமாக இருக்கிறது..(கூட நம்ம டிவி மெகா சீரியல் அம்மணிகள் வேற.ஒருவேளை அங்கேயும் நடிக்க தான் கூப்பிடறாங்களோ) காலங்காத்தால டிவி பக்கம் போனால் போதும்,ஒரு டிவியில் பெயர் மாத்தினால் போதும் உங்களுக்குஅதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் அப்படின்னு ஒரு அம்மா.... (எனக்கொரு சந்தேகம்...ஊர் ஊரா லேகியம் விக்கிற மாதிரி ஒவ்வொரு ஊரிலேயும் எப்படி லாட்ஜ் போட்டு வியாபாரம் பண்றாங்கன்னு)



 கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு ஆளு ..பார்க்க டீசண்டா இருக்காரு (ஏமாத்துவதற்கு கூட முக லட்சணம் வேணும் போல ) இவரு பேர படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும் போல..இதுல எப்படி ஞாபகம் வச்சி எழுதறது..?...அவரு வேற....




அதுக்கு அப்புறம் இன்னொரு டிவியில் சாமியார் மாதிரி இருக்கிற மாந்திரீக வாதியின் பேட்டி.. (ஆளானபட்ட நித்தியானந்தாவே போலின்னு தெரிஞ்சு போச்சு.... இவரெல்லாம் எம்மாத்திரம்)  .....



அப்புறம்...இன்னொருத்தர் .பார்க்க இளையராஜா அண்ணன் மாதிரியே இருக்காரு .வெள்ளையும் சொள்ளையுமா....



அப்புறம் என்ன.. ஏமாறுவதற்கு மக்கள் ரெடி....  ஏமாத்த இவங்களும் ரெடி.....  


நேசங்களுடன்
ஜீவானந்தம் 


இன்னும் கொஞ்சம்...

Sunday, March 11, 2012

சன் டிவி - கையில் ஒரு கோடி - எது டாப்பு....எது டிராப்பு ( SUN TV - K O K ) வைக்கப் போறாங்க ஆப்பு


எது டாப்பு....எது டிராப்பு.....

நேத்து சன் டிவியில்ஒளிபரப்பான கையில் ஒரு கோடி ப்ரோக்ராமில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட ஒரு வார்த்தை  இது...

அப்புறம்  இன்னொன்னும் கூட...

கேள்வி கேட்டு பணம் கொடுப்பது பழசு
பணம் கொடுத்துட்டு கேள்வி கேட்பது புதுசு..

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கபா ...

பிரம்மாண்ட மேடை...

கட்டு கட்டா பணம். ( அதுக்கு இரண்டு அழகான அம்மணிகள் செக்யுரிட்டி..அப்பப்ப அடுக்கி வைக்க..) நாலு பெட்டி...இரண்டு தலைப்புக்கள்..மொத்தம் ஏழு கேள்விகள். கேட்கப்படும் கேள்விக்கு முன்னரே பதில் வந்து விடுகிறது.அப்புறமா தான் கேள்வி.சரியான பதில் உள்ள பெட்டியில் பணம் அடிக்கி வைக்கவேண்டும் வேற பதிலில் சாய்ஸ் இருந்தால் அங்கும் வைக்கலாம்..ஒரு பெட்டி மட்டும் காலியாக விட வேண்டும்..மொத்தம் அறுபது செகண்ட்களில் முடிக்க வேண்டும்.இது கொஞ்சம் புதுமை...


இங்கே கேள்விகள் கொஞ்சம் பரவாயில்லை....விஜய் டிவியில் கேட்கப்படும் கேள்விகள் போல மொக்கையாய் இல்லை (ஈ அடிச்சான் காப்பி, கண்கட்டு , கழுத்துகட்டு எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால், இதுமாதிரி )

...ஆயினும் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் பதில் சொல்ல வேண்டும்.
தலைநகரம், சினிமா, இந்தியா, கலவை, அரசியல் கோவில்கள்  இதுமாதிரி தலைப்புக்கள்..
...ஈஸி போல தான் தெரிகிறது (இதுல என்ன வெடிகுண்டு இருக்கோ)....பார்ப்போம்....

என்ன அடிக்கடி இந்த நிகழ்ச்சி நடத்துபவர் அங்கும் இங்கும் ஓடி கொன்னு எடுக்கிறார்...அப்புறம் கலந்து கொள்பவர்கள் யாரும் ரொம்ப படித்தவர்கள் போல தெரியவில்லை...எங்கேயோ பிடித்து கொண்டு வந்தது போல இருக்கிறது..பணத்தை மோந்து பார்த்து வாசம் பிடிக்கின்ற ஆளுங்களா இருக்காங்க..( ம்ம் ...என்ன பண்றது...இப்படி ஒட்டு மொத்தமா பணத்த வச்சு நம்மளை அதுக்கு அடிக்ட் ஆக்கிறாங்க.....?)

போட்டியில் தோத்து போனவங்க அடிக்கிற டிராமா இருக்கே.கட்டி புடிச்சு எல்லாம் அழறாங்கப்பா ..யப்பா..சாமி முடியல...


அதுக்கு  அப்புறம் எப்பவும் போல எஸ் எம் எஸ் கேள்விகள் கேட்கிறாங்க எதுக்கு......அவங்க சம்பாதிக்க....

பாப்போம் ..போக போக தெரிந்துவிடும் இந்த ப்ரோக்ராம்...
டாப்பா....இல்ல டிராப்பா... 

இதுக்கு முன்னோடி விஜய் டிவி ஒரு கேடி

அதுக்கும் முன்னோடி ராஜ் டிவி - ஏமாத்து வேலை

நேசங்களுடன் 
ஜீவானந்தம்











இன்னும் கொஞ்சம்...

Friday, March 9, 2012

ஆடியோ கேசட்...ஒலிநாடா - மலரும் நினைவுகள்,


ஆடியோ கேசட்...ஒலிநாடா...ரொம்ப நாளைக்கு அப்புறம் இதை பார்க்கும் போது மனசுக்குள் மத்தாப்பு பூக்கிறது.சிறு வயசில் பாடாத கேசட் எங்காவது கிடைத்தால் அதை எடுத்து அதில் உள்ள ஸ்குரு கழட்டி அலுங்காம குலுங்காம அதில் உள்ள பிலிம் கலையாம அந்த சக்கரத்த எடுத்து ரோட்டுல உருட்டுனா எவ்ளோ தூரம் போகும்னு ஒரு ஆராய்ச்சி செய்வோம் பாருங்க அதை இன்னிக்கும் மறக்க முடியாது.

அப்புறம் அந்த பிலிம் எடுத்து வீடு முற்றத்துல காய வச்சி இருக்கிற பழைய சோத்துல செஞ்ச வடாம், அப்புறம் வத்தல் இவைகளை காக்கா குருவி கொத்திட்டு போய்ட கூடாதுன்னு இத இரண்டு கம்புக்கு நடுவுல கட்டி அது போடுற படபடக்கிற சத்தத்துல கேட்கிற இனிமை இருக்கே அதை இன்னும் மறக்க முடியாது.அடிக்கிற வெய்யிலில் இந்த பிலிம் காட்டுகிற பளபளப்பு இருக்கே அது இன்னும் நம்ம கண்ணுல ஓடிக்கிட்டே இருக்கு.இதெல்லாம் சிறுவயசு அனுபவங்கள்.
கொஞ்சம் பெரிய பையன் ஆனவுடனே நமக்கு பிடித்த பாட்டுகளை வரிசைப்படி பதிவு பண்ணி சவுண்ட அதிகமா வச்சி கேட்கிற சுகம் இருக்கே அது தனிதான்.....அப்போ கம்பெனி கேசட் ரொம்ப விலை அதிகம்னு லோக்கல் கேசட் வாங்கி அதுவும் அந்த இரண்டு பிலிம் சக்கரங்கள் வெளியே தெரிகிற மாதிரி இருக்கிற ட்ரான்ஸ்பரன்ட் கேசட் வாங்கி அதுல ரெகார்ட் பண்ணி பாட்டு கேட்ட சுகம் இருக்கே.....அருமை தான் போங்க....அப்புறம் அந்த பக்கம் இந்த பக்கம் இருக்கிற பக்கத்து வீடு பொண்ணுகளை திரும்பி பார்க்கிற மாதிரி நம்மகிட்ட இருக்கிற காதல் பாடல்களை கொஞ்சம் சத்தமா வச்சி நம்ம மனசை தொறந்து காட்டியது இன்னும் ஞாபகம் இருக்கிறது.
கேசட் கடைக்கு போனால் அங்க விதம விதமா பதிவு பண்ணி வச்சி இருக்கிற கேசட் வாங்கி வீட்டில் வந்து தனிமையில் கேட்கும் போது இருக்கிற சுகம் இருக்கே ...அடடா....




அதுக்கப்புறம் காலேஜ் படிக்கும் போது தங்கி இருந்த ரூமுக்கு அசெம்பிள் செட்டு வாங்கி முதல் முறையா வாங்கின கேசட் போட்டு கேட்ட பாட்டு ஒத்த ரூபாய் தாரேன்...பாட்டு சும்மா பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆன பாட்டு...அதை கேட்டு கேட்டு சலித்து போனது ஒரு நேரம் ....அப்புறம் நம்ம திண்டுக்கல் லியோனி யோட பட்டி மன்ற கேசட்..பழைய பாடல்களா புதிய பாடல்களா ..மனமா குணமா...இப்படி நிறைய, எஸ் வி சேகர் நடித்த அனைத்து நாடக கேசட்களும் கேட்டு இருக்கிறேன். அதுக்கு அப்புறம் நாகரீக வளர்ச்சியில் இவை காணாமல் போய் விட்டது. 
2009ல கூட நான் வாங்கின முதல் காருல (பியட் யுனோ ) சோனி யோட கேசட் பிளேயர் தான் இருந்துச்சு.கோவையில் சுத்தும் போது எப் எம் இருக்கிறதால் ஒண்ணும் தெரியல....ஆனா ஒரு தடவை சேலம் போகும் போது கேசட் இல்லாதால் நான் பட்ட பாடு  இருக்கே...ஐயோ....அதுக்கப்புறம் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற ஒரு கடையில கேசட் 60 ரூபாய் என்ற விலையில் 5 கேசட் வாங்கினேன்...ஆகா...இப்படி கொடுத்து கட்டு படியாகாதே என்று காரில் உள்ள செட்டையே மாற்றி விட்டேன்...அதுக்கப்புறம் காரையே மாத்திட்டேன்..இப்போ USB  வந்து விட்ட படியால் எவ்ளோ பாட்டு வேணும்னாலும் சேவ் பண்ணிக்கலாம்...டெலிட் பண்ணிக்கலாம்... 
என்ன இருந்தாலும் கேசட் இருந்த காலத்துல அதுக்காக நேரம் செலவழிச்சு புடிச்ச பாட்டுக்களை ஒரு பேப்பரில் எழுதி கிட்டு ரெகார்டிங் பண்ற இடத்துல போய் அவங்க கிட்டே பாட்டு நல்லா பண்ணி குடுங்க அப்படின்னு தனியா சொல்லி அதுக்கப்புறம் அது ரெடியான பின்னே வாங்கி வந்து கேட்டு நாம எழுதி குடுத்தது  வரிசைப்படி இருக்கா அப்படிங்கிறத செக் பண்ற ஆவல் இருக்கே....அப்புறம் அவங்க குடுத்த கேசட் கவரில் வரிசைப்படி எழுதுகிற சுகம் இருக்கே ...அதெல்லாம் ஒரு காலம்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, March 8, 2012

கிராமத்து தொழிற்சாலை.- செங்கல்சூளை

கிராமத்து தொழிற்சாலை.
கடந்த சனி ஞாயிறு அன்னிக்கு ஒரு விசேசம் காரணமாக எங்க ஊருக்கு போனேன் .அப்போ அங்க இருக்கிற செங்கல் தயாரிக்கிற  சூளையை பார்த்தவுடன் எனது சிறு வயது நினைவுகள் உருண்டோடியன.







.9 ம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் லீவ் விடும் போது இங்க இருக்கிற சூளைக்கு வேலைக்கு போவோம்.பத்து ரூபாய் சம்பளம்...டைம் வந்து காலை 7  மணி முதல் 4  மணி வரை..இடையில் ஒருமணி நேரம் சாப்பாடு இடைவேளை. ஐந்து ஐந்து செங்கற்களாக கொண்டு செல்லனும்.சும்மாடு சுத்தி தலையில வச்சு அதுல அந்த ஐந்து கல்லை தூக்கி வைப்பாங்க...இப்படி யாக கல்லு அறுக்கிற இடத்திலிருந்து சூளைக்கு கொண்டு வரணும்.ஒவ்வொரு இடத்தில சூளை பக்கத்திலேயே இருக்கும்...ஒரு சில இடத்தில தூரமா இருக்கும்..இப்படி யாக வேலை செய்வேன்.மேலும் என்கூட படிக்கிற மத்தவங்க..அப்புறம் பொண்ணுங்க எல்லாரும் வேலைக்கு வருவாங்க...( அப்போலாம் ஏதுங்க. இந்த குழந்தை தொழில் ஒழிப்பு ).நல்லா ஜாலி யா இருக்கும் ..அந்த சனிக்கிழமை அன்னிக்கு காலையில பணம் தருவாங்க..ஐந்து நாள் சம்பளம் ஆக 50  கிடைக்கும்..இதை வாங்கினவுடன் கிடைக்கும் சந்தோசம் இருக்குமே...அதை வார்த்தையில் விவரிக்க முடியாது....அடுத்த நாள் காலையில் கரூர் கிளம்பி அமுதா ஹோட்டல் போய் புரோட்டா சாப்பிட்டு ஏதாவது ஒரு படம் பார்த்துட்டு வருவோம்..வீட்டுக்கு வரும்போது அப்பா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க...ஏன்னா...சம்பாதிச்சு செலவு பண்றான் அப்புறம் அவங்ககிட்ட காசு வாங்கிட்டு போகல..அதனால்....இப்படி ஒவ்வொரு வகுப்பு லீவிலும் வேலைக்கு போய் ஜாலியா இருப்போம்....



இப்போ இந்த சூளை அதிகமா எங்க ஊர் பக்கம் வர ஆரம்பிடிச்சு.காரணம் என்னன்னா....பெருகி வரும் கான்க்ரீட் காடுகளால் செங்கல்களின் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது மேலும் மிக முக்கியமான காரணம் ....விவசாயம்.....விவசாயம் பண்ண ஆள் இல்லாததால் காட்டை ஏன் தரிசாய் போடணும் என்று சூளைக்கு பணம் வாங்கி கொண்டு விட்டு விடுகின்றனர்.இதனால் அங்கு விளைச்சல் இல்லாமல் விவசாயமே பாதிக்க படுகிறது.அப்புறம் வயல் வெளிகள் அனைத்தும்  நல்ல தரமான வண்டல் மண்ணை இழந்து விடுகிறது..பின்னர் அந்த இடத்தில மீண்டும் விவசாயம் பண்ணும் போது நல்ல சத்துக்கள் இல்லாமல் செடிகள் பயிர்கள் வளர்கின்றன .மேலும் பள்ளம் ஏற்பட்டு வடிகால் வசதி இல்லாமல் போய் விடுகிறது.இதெல்லாம் தெரிஞ்சும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் நிறைய சூளைகள் பெருகி கொண்டிருக்கின்றன.

அடடா....என்னமோ எழுத வந்து ஏதோ விழிப்புணர்வு பதிவு மாதிரி ஆயிடிச்சே...( நாமலாம் மெசேஜ் சொன்னா விளங்கிடும்..)

சிறு வயது ஞாபகங்கள் அனைத்தும் எப்போதும் இனிமை யானவை..சுகமானவை...


அப்புறம்...இந்த மண்ணை எடுத்து கல்லு தயாரிக்கிற கட்டையில் போட்டு அதை குத்தி மட்டம் படுத்தி தண்ணீர் தெளித்து வழித்து அலுங்காமல் அந்த கட்டையை எடுக்கும்போது கல்லு அழகா வந்திருக்கும்...ஆனா நம்ம எப்படி இருப்போம்...வெய்யிலில் காஞ்சு மேலெல்லாம் களிமண் சேறு அப்பி , டவுசர்லாம் மண்ணாகி பார்க்கவே கேவலமா இருப்போம்.இதுக்காக தனியே வீட்டுல அடி வாங்கினது தனிக்கதை ...இப்பவும் நினைத்தால் இனிக்கிற நிகழ்வுகள் நம் சிறு வயது நிகழ்வுகள் 


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 7, 2012

கோவை மெஸ் - ஹோட்டல் ஹேமலா (HOTEL HEMALA) - கரூர்

கடந்த சனி இரவு எங்காவது ஹோட்டலுக்கு போலாம்,  பதிவுக்கு ஏதாவது தேத்தலாம் அப்படின்னு முடிவு பண்ணிட்டு கரூர்ல இருக்கிற 3 ஸ்டார் ஹோட்டல் ஹேமலா வுக்கு போனோம்..கரூர்க்கு இந்த மாதிரி ஹோட்டல் புதுசுதான்.முன்பு நந்தினி ஹோட்டல் இருந்தது, ரொம்ப பேமஸ் ஆன ஹோட்டல்.இப்போ அது இடிக்கப்பட்டு வணிக வளாகம் ஆக மாற்றப்பட்டு இருக்கு.சரி..ஹேமலா வுக்கு வருவோம்....உள்ளே நுழைந்தோம்...கிரீன் ரெஸ்டாரன்ட்..நல்ல இன்டீரியர் அமைப்புடன் இருக்கு..

மெனு கார்டு பார்த்தவுடனே....புறப்படலாமா ...அப்படின்னு ஒரு எண்ணம்....கோவையில கூட இவ்ளோ ரேட் இல்ல...சரி..குடும்பத்தோட வந்தாச்சு...என்ன பண்றது...சூப் ஆர்டர் பண்ணினேன்.....70  ரூபாய்....(மயக்கமே வந்துச்சு....சரக்கே 70  க்கு கிடைக்குமே...)அப்புறம்..மட்டன் கொத்து கறி, சிக்கன் 65 ..(பாருங்க தட்டுல வெறும் 8 பீஸ் தான்...130 ரூபாய்... )மட்டன் பிரியாணி, அப்புறம் புல்கா (டிவி விளம்பரத்துல நம்ம சினேகா அக்கா அடுப்பு மேல அப்படியே சுட்டு எடுப்பாங்களே அதுதான் )..பிய்க்க முடியல..சாப்டாவே இல்ல...அப்புறம்...பட்டர் நான்...இது அதுக்கு மேல.....எப்படியோ.....எல்லாம் சாப்பிட்டோம்..










என் பெற்றோர்கள் முதல் முறையா ஹோட்டலில் நான் வெஜ் சாப்பிடுவதால் அவங்களுக்கு அந்த டேஸ்ட் தெரியல...நம்மதான் வர்ற வாசனையை வச்சே மோப்பம் பிடிக்கிற ஜாதி ஆச்சே...விடுவமா...கொத்து கறி மட்டும் நல்ல டேஸ்ட் ..மத்தது எதுவும் நல்லாவே இல்ல...விலையும் தான்.....அம்மாடி. மொத்தம் நாலு பேர் தான் ......1045  வந்திச்சு...கோவையில் திண்டுக்கல் வேணு பிரியாணி அவ்ளோ டேஸ்ட் இருக்கும்.விலை 120 மட்டும்தான்..இங்க பிரியாணி அப்படிங்கிற எந்தவித அறிகுறியும் இல்ல...ஆனாலும் 130 ரூபாய். இப்படி எல்லாம் பதிவ தேத்த எவ்ளோ காசு செலவு பண்ண வேண்டி இருக்கு பாருங்க...அப்புறம் சர்விஸ் நல்லா பண்றாங்க...முக்கியமா...நாம சாப்பிடிற டேபிளுக்கே சரக்கெல்லாம் சப்ளை பண்றாங்க...( நான் எதுவும் சாப்பிடில...(ஹி..ஹி..ஹி..விலை அதிகம்ன்னு )நமக்கு தான் அரசு பார் இருக்கே...)
அப்புறம் யாரோ ஒரு புண்ணியவான் விலை லாம் கேட்டதால் தான் விலையோடு எழுதி இருக்கேன்.

 
கரூர்ல இருக்கிற டெக்ஸ்டைல் முதலாளிகள், கந்து வட்டி ஓனர்கள் இவங்கலாம் போய் சாப்பிடலாம்...நம்மள மாதிரி ஆளுங்க எப்பவாவது வருசத்துக்கு ஒரு தடவை  போய் பார்க்கலாம்..கரூர் சர்ச் அருகில் போலீஸ் லேன் தெருவில் (லேன் னாலும் தெரு னாலும் ஒண்ணு தானே ) இருக்கிறது இந்த 3  ஸ்டார் ஹோட்டல்..

 நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Sunday, March 4, 2012

கிருஷ்ணா ஸ்வீட்ஸ்--கோவையின் பெருமை-2

கொங்கு நகரமாம் கோவையின் பெருமைகள் இனி கொஞ்சம் கொஞ்சமாய் அரங்கேற்றம்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
கோவையின் சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது.ஒரு காலத்துல மைசூர்பா என்றாலே கெட்டியா, ரொம்ப கடுக்குனு கல்லு மாதிரி  இருக்கும்.இந்த மைசூர்பா பத்தி இல்லாத ஜோக்கு களே இல்லை எனலாம்.மைசூர்பா வீசி மண்டைல  காயம், சாப்பிட்டு பல்லு போனது, இப்படி நிறைய...

அதெயெல்லாம் மாத்தி வாயில வச்சாலே கரையிற மாதிரி மாத்தினது நம்ம கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தான்.கையில் தொட்டாலே போதும் உடையிற மைசூர்பா நம்ம கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தான்.முழுக்க முழுக்க பசும் நெய்யினால் செய்வதால் இப்படி பட்ட மிருதுவான மைசூர்பா வாக இருக்கிறது.



நம்ம வீடு பக்கத்துல தான் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தயாரிக்கிற இடம் இருக்கிறது.அந்த ஏரியா கிராஸ் பண்ணும் போது அடிக்கிற  நெய்யின் மணம் அப்படியே ஆளை தூக்கும்.இன்னிக்கு கடைக்கு போலாம்னு முடிவு பண்ணி உள்ளே நுழைந்தேன்.காரணம் நம்ம பேவரைட் ரசமலாய் தான். (அளவுக்கு அதிகமா மைசூர்பா சுவைச்சதால் என்னவோ இப்போ ரொம்ப  பிடிக்க மாட்டேங்குது) சும்மா சில்லுனு இருக்கும்.வாங்கி ரசித்து ருசித்து சாப்பிட்டேன்.

அப்புறம் இங்க தாம்பூலம் செட் அப்படிங்கிற ஸ்வீட் கிடைக்கும் ..அது என்னன்னா தேங்காய், வாழைப்பழம், வெத்தலை பாக்கு, பழம் வகைகள் என இருக்கும்.அப்படியே தத்ருபமாக செய்து இருப்பார்கள் அப்புறம் .பட்டுபுடவை கூட செய்து தருவாங்க...பட்டு ல இல்ல ....ஸ்வீட்ல தான்.அப்புறம் இருக்கிற காரம், ஸ்வீட் களோட விலையும்  ரொம்ப அதிகம்.எப்ப விலை ஏத்துவாங்கன்னு தெரியாது.ஆனால் விலை கூடிகிட்டே இருக்கும்.அப்புறம் மக்கள் கியூவுல நின்னு வாங்குற கடை எதுன்னா அது இது தான்.








இந்த நிறுவனம், குறை ஒன்றுமில்லை, எப்ப வருவாரோ, வல்லமை தாராயோ , கண்மணி கதைகேளு , நலம் தானா, உடலும் உள்ளமும் போன்ற தலைப்புகளில் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும்  வருகிறது. ஆன்மிக நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்தி வருகிறது.இந்த நிறுவனர்க்கு கௌரவ டாக்டர் பட்டம் கூட வழங்கி இருக்காங்க...
அடுத்த  கோவையின் பெருமை

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Thursday, March 1, 2012

விஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....

 விஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....
எதேச்சையாக இன்னிக்கு டிவி பக்கம் ஒதுங்குனதில் சூர்யா நடத்துகிற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற ப்ரோக்ராம் பார்க்க நேர்ந்தது..பார்த்தவுடன் ஏன்டா பார்த்தோம் என்றாகி விட்டது.கேள்வியா அது...ரொம்ப கேனத்தனமா.....(இதை விட பொருத்தமான வார்த்தை இல்லை ).இத பார்த்தோம் எனில் இருக்கிற கேள்வி ஞானம் , பொது அறிவு எல்லாம் போய் தொலைந்து விடும் என்று நினைக்கிறேன்.இதுக்கா இம்புட்டு விளம்பரம்...இத நடத்த சூர்யா வேற....எப்படித்தான் இவரோட அகரம் பவுண்டேசன்ல புள்ளைங்க எல்லாம் படிக்குதோ...அப்படின்னு மக்கள் நினைத்து விட மாட்டார்கள் ....? எப்படியோ சம்பாதிக்கணும் அப்படின்னு களத்துல இறங்கிடுச்சு இந்த விஜய் டிவி.அப்புறம் என்ன பண்றது...மக்களை கவர வேற வழி....சூர்யா ஓகே. கேள்வி ரொம்ப மட்டமா இருந்தாதான் TRP ரேட் ஏறும்...ஏற்கனவே SMS  அனுப்பி ஏகப்பட்ட கோடிகளை சம்பாதித்து விட்டது .இனி வருவது எல்லாம் லாபமே....என்ன பண்றது...ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரையில் இவர்களுக்கு கொண்டாட்டம் தான்.





 இன்னும் என்னென்ன வெல்லாம் கேட்பாங்களோ...
நயனோட கடைசி காதலன் யார் ..?.
A )சிம்பு B ) ஆர்யா c ) பிரபு தேவா D ) விஜய் 
விஜய் யின் துப்பாக்கி யில் உள்ள தோட்டா எத்தனை.?
A ) 6            B ) 4                c ) 3              D )      ௨
அம்புலி எந்த வகை படம்
A ) 5D           B ) 4 D           C )   3 D     D )      7D

இதை விட மோசமா இன்னொண்ணு இருக்கு ..ராஜ் டிவி
அய்யா சாமிகளா....ஆளை விடுங்கப்பா/////////

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...