Saturday, July 14, 2012

முதலியார் குப்பம் - படகு இல்லம்


முதலியார் குப்பம்
சென்னை டு பாண்டிச்சேரி ஈ சி ஆர் ரோட்டில் இந்த முதலியார் குப்பம் இருக்கிறது. இங்கு தமிழக அரசு புதிதாய் நவீன வசதிகளை ஏற்படுத்தி இருக்கிற படகு இல்லம் சென்றோம். படகு மட்டுமே இருக்கிறது. நீர் மட்டமும் குறைந்து இருக்கிறது.ஒரு ஈ காக்கா காணோம். காத்து வாங்கி கொண்டு இருக்கிறது. சனி ஞாயிறு மட்டுமே இங்கு கூட்டம் அள்ளும் என்று சொல்லியபடியே டிக்கெட் கொடுத்தார் ஊழியர்.இருபது நிமிடம் அந்த பேக் வாட்டரில் செல்ல 390 ரூபாய். மோட்டார் படகு எங்களை சுமந்து கொண்டு நீரில் மிதந்து சென்றது. அந்த பக்கம் பீச் இந்த பக்கம் மணல் திட்டு இதுக்கு நடுவுல பேக் வாட்டர்.இதுல தான் போட்டிங்.

செல்லும் போது ஒரு சில பேர் மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.ஒருவர் அப்போதுதான் கட்டுமரத்தில் தொழிலுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்படி ஒன்றும் பெரிதாய் ஈர்க்கவில்லை இந்த போட்டிங் பயணம்.நீர் சறுக்கு விளையாட்டு, பைக், பலூன் விளையாட்டு, மிதி படகுகள் என நிறைய இருக்காம் ஆனால் நாங்க போன அன்னிக்கு எதுவுமே இல்லை.தண்ணீரிலேயே போய்ட்டு தண்ணியிலேயே வந்ததால் தண்ணியிலே மிதந்த எங்களுக்கு பிடிக்கவில்லை.பீச் ஓரம் சென்று இறக்கி விட்டு கொஞ்சம் நேரம் காத்தாட விட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.அதுவும் கூட்டம் இருக்கும் போது மட்டும்தான் அங்கு சென்று இறக்கி விடுவார்களாம்.கண்ணுக்கு குளிர்ச்சியாக எதுவுமே இல்லாததால் ரொம்ப வறண்டு கிடக்கிறது இந்த படகு இல்லம்.இங்க போறவங்க சனி ஞாயிறு மற்றும் லீவ் நாட்களில் மட்டும் போங்க.அப்போதான் கொஞ்சம் நல்லா இருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, July 12, 2012

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் - ஆதரவற்றோர் இல்லம்


பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம்
கோவையில் கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் வழியில் பதுவம்பள்ளி இருக்கிறது.இந்த ஊரில் இருந்து வலது பக்கம் செல்லும் ரோட்டில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நல்லகவுண்டன் பாளையம் என்கிற ஊரில் இந்த இல்லம் அமைந்து இருக்கிறது.
ஈரநெஞ்சம் அமைப்பினர் நடத்திய இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமிற்கு சென்றிருந்ததால் இந்த இல்லம் பற்றி அறிய நேர்ந்தது. ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களை காக்கும் ஒரு இல்லம். உள்ளே நுழைந்ததும்.....நிறைய மரங்கள் சுற்றுப் புறமெங்கும்.....நல்ல காற்றோட்ட வசதியுடன் பெரும் அமைதி தவழ்கிறது.ஒரே சீருடையில் உள்ள அனைத்து குழந்தைகளும் நம்மை கண்டதும் கை எடுத்து கும்பிட்டுச் சொல்கிற ஒரு வார்த்தை ‘’வணக்கம் ஜீவ ஆத்மா” இவர்களின் இந்த செய்கையை காணும் போது நம்மை அறியாமல் நமக்குள் ஓர் உணர்வு ஏற்படுகிறது.நாமும் பதில் வணக்கமாய் கும்பிட்டோம்.
இந்த இல்லம் குருஜி எனப்படுகிற தொண்டுள்ளம் கொண்ட ஒரு நபரால் நடத்தப்படுகிறது.மற்றும் இந்த இல்லத்திற்கு நிதி ஆதாரம் கருணையுடன் செயல்படுகிற தன்னார்வமிக்க தொண்டர்களால் செயல்படுத்தப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணாக்கர்களும், அறுபதுக்கும் மேற்பட்ட முதியவர்களும், ஆதரவற்று இருக்கிற இவர்களை கவனித்து கொள்ள இருபதுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் இங்கேயே தங்கி இருக்கின்றனர்.இந்த இல்லத்திலேயே ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் இருக்கிறது. மேற்கொண்டு படிப்பவர்கள் அருகில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர்.ஒருநாள் இவர்களுடன் இருந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ எனக்கு மன திருப்தி ஏற்பட்டது. அவர்களுடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டதில் பெரும் மகிழ்ச்சியே.
                             (நாளைய கலெக்டர், ஆசிரியர்,என்ஜினீயர்)


இவர்களுடன் பேசியதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருப்பதை தெரிந்து கொண்டேன். ஆசிரியர், கலெக்டர், போலீஸ் என ஒவ்வொருவரும் தனித்தனியாய் வேறுபடுகின்றனர்.ஒவ்வொரு முறையும் நம்மை ஆத்மா ஆத்மா என்று அழைத்து அவர்களுடன் நம்மை ஒன்ற செய்கின்றனர்.இந்த சேவா இல்லத்தில் ஈரநெஞ்சம் அமைப்பினர் ஆற்றியுள்ள பங்கு எண்ணிலடங்காதவை. குழந்தைகளுக்கு கல்விச்செலவு, பொழுது போக்கு நிகழ்வு, மருத்துவ நிகழ்வு, இலவச உணவு என நிறைய...
இவர்களை மாதிரியே இந்த இல்லத்தைப் பற்றி கேள்விப்படுகிற நிறைய பேர் உதவி செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

அதுமாதிரி உங்களோட குடும்ப நிகழ்வுகளை ஒருநாள் இங்கு நடத்துங்கள்.பிறந்த நாள் விழாவோ, கல்யாண நாளோ...இவர்களுடன் செலவு செய்யுங்கள்.நீங்கள் உன்னதமானவர்கள்.

முகவரி
பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் 
நல்லகவுண்டன்பாளையம்
பதுவம்பள்ளி  அஞ்சல் 
கருமத்தம்பட்டி - அன்னூர் வழி
கோவை. 

Ph :9360622099; 9360622033,

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 11, 2012

வேடந்தாங்கல் - பறவைகளின் சரணாலயம்

வேடந்தாங்கல் -  பறவைகளின் சரணாலயம்

மண்வெட்டி  வாயன்
குருட்டு கொக்கு
புள்ளி மூக்கு வாயன்
தட்டவாயன்
கரண்டி வாயன்
மில்லர் அரிவாள் மூக்கன்
பாம்புத்தாரா ..................(நம்ம அம்மணி நயன்தாரா சிஸ்டர் போல..)
பெரிய தாரா
சாம்பல் நிற கூழைக் கடா
நத்தைக்குத்தி நாரை
வெள்ளை அரிவாள் மூக்கன்....

இதெல்லாம் என்னன்னு கேட்கறீங்களா...இங்க வேடந்தாங்கல் வந்து இளைப்பாறிவிட்டு போகிற வெளிநாட்டு பறவைகளின் பெயர்கள்.
(நம்மாளுங்க  எப்படியெல்லாம் பெயர் வைக்கிறாங்க பாருங்க..)

அப்புறம் நாங்க போன நேரம் சீசன் இல்லாத நேரம் அதனால் அதிகம் பறவைகளை காண முடியவில்லை.இன்னும் தங்கள் நாட்டுக்கு விசா பாஸ்போர்ட் கிடைக்காத பறவைகள் மட்டும் இன்னும் இங்க வெய்ட் பண்ணிட்டு இருக்கு.
சீசன் நேரத்தில் ஏரியில் இருக்கிற மரங்கள் எதுவுமே தெரியாதாம்.அந்த அளவுக்கு பறவைகள் குவிந்து கிடக்குமாம்.இப்போ இருக்கிற கொஞ்ச நஞ்ச பறவையும் ஒவ்வொரு  வித விதமா இருக்கிறது.ஒரு வியு டவர் ஒன்றும் இருக்கிறது.அதில் இருந்து பார்த்தால் அனைத்து பறவைகளும் தெரிகின்றன.அப்புறம் ஏரியின் நடைபாதையில் ஒவ்வொரு பறவையின் விளக்க குறிப்பு இருக்கிறது.





முழுக்க முழுக்க பறவைகள் இருப்பதால் என்னவோ சுவர் இருக்கிற இடத்துல எல்லாம் பறவைகளின் படமாய் இருக்கிறது.குடிக்க வைத்து இருக்கும் பைப் கூட ஏதோ ஒரு பறவையோ அல்லது விலங்கு முகத்துடன் இருக்கிறது.அங்க இருக்கிற டாய்லெட் சுவரில் கூட பறவைகளின் படம் வரைந்து வைத்து இருக்கின்றனர்.அப்புறம் இந்த ஏரியின் தண்ணீர் பச்சை பசேல் என்று இருக்கிறது,  இங்க இருக்கிற தேளி மீன்கள் ஒவ்வொன்றும் பறவைகள் போல் பயங்கர சைசில் இருக்கிறது. 



அப்புறம் இங்க பறவைகள் சரணாலயம் என்பதால் என்னவோ நம்ம பறவைகளும் கொஞ்சம் இருக்கு.ஆனா அதிகமா இல்ல.ஒருவேளை அவங்களுக்கும் சீசன் இல்லையோ என்னவோ...
இந்த சரணாலயம் மதுராந்தகம் ஊரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...

Monday, July 9, 2012

கோவை மெஸ் - அடையார் ஆனந்த பவன் - ஹைவே ஹோட்டல்

அடையார் ஆனந்த பவன்
உளுந்தூர்பேட்டை தாண்டி சென்னை செல்லும் ஹைவே ரோட்டில் இந்த அடையார் ஆனந்த பவன் இருக்கிறது.பாரத் பெட்ரோல் பங்க்  உடன் இணைந்து இந்த ஹோட்டல் இருக்கிறது.தொலை தூரத்திலிருந்து வரும் பயணிகளின் நலனுக்காக ரொம்ப விஸ்தாரமாக , குளியல் வசதி, கழிவறை வசதி என அனைத்தும் இந்த பாரத் பெட்ரோல் பங்கில் இருக்கிறது.வெளி மாநில லாரிகளின் வருகையும் அதிகமாக இருக்கிற இந்த பங்கில்  இதன் ஒரு அங்கமாக இருக்கிற இந்த ஹோட்டலில் சாப்பிட நுழைந்தோம். 


உள்ளே ஸ்வீட் ஸ்டால் இருக்கிறது.பாணி பூரி ஸ்டால் இருக்கிறது.பழ ஜூஸ் ஸ்டால் இருக்கிறது. கூடவே ஹோட்டல் ...மினி  டிபன் இருக்கு என்று சர்வர் சொன்னதினால் அதை ஆர்டர் பண்ணினோம்.ஒரு தட்டில் மசால் தோசை, மினி இட்லி, கொஞ்சம் பொங்கல், வடை, கேசரி அப்புறம் தொட்டுக்கொள்ள மூன்று சட்னி என அழகாய் வைக்கப்பட்டு நம்மிடம் கொண்டு வந்து கொடுத்தார் சர்வர்.



கேசரி  ரொம்ப சுவை.நெய்யில் மிதக்கிறது இந்த கேசரி.வாயில் வைத்ததும் வழுக்கி கொண்டு உள்ளே செல்கிறது.(ரொம்ப கம்மியா தான் குடுக்கிறாங்க....)
       அதே போல் பொங்கலும் அருமை.சாப்டாக செல்கிறது.இட்லி ரொம்ப சின்ன சின்னதாய் பணியாரம் சைஸ் போல ரெண்டு விள்ளல்களில் முடிந்து விடுகிறது.ரொம்ப நன்றாக இருக்கிறது.மசால் தோசைக்கு வெங்காய சட்னி யும் கார சட்னியும் ரொம்ப பொருத்தம்.மொத்தத்தில் நன்றாக இருந்தது இந்த மினி டிபன்.
இன்னும்  நிறைய வகைகள் இருக்கு.காலையில் அதிகம் சாப்பிட முடியாத காரணத்தால் ஒரே ஒரு மினி டிபன் அப்புறம் காபி..
    ஹைவேயில் இருப்பதால் என்னவோ எப்போதும் கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.வரும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.இந்த ஹோட்டலுக்கு வெளியே குழந்தைகளுக்காக ஊஞ்சல், சறுக்கு என விளையாட்டு இடமும் இருப்பதால் கொஞ்சநேரம் ரிலாக்ஸ் ஆகின்றனர் பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளிடம் இருந்து..
     விலையை பார்த்தால் அடையார் ஆனந்த பவனுக்கு உரித்த விலைதான்.விலையை விட சுவை நன்றாக இருக்கிறது.மினி டிபன் 55 என்ற விலையில் தருகிறார்கள்..

கிசுகிசு: அப்புறம் இங்க வர்ற கார்களில் வந்து இறங்குகிற வித விதமான அம்மணிகள்  எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க.இதுக்காகவே இந்த மாதிரி ஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடணும்னு போல தோணுது... ஆனா பர்ஸ் பழுத்துடும்னு வேற பயமா இருக்கு....

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


இன்னும் கொஞ்சம்...

Sunday, July 8, 2012

உத்திரமேரூர் - கல்வெட்டு

உத்திரமேரூர்
             சிறு வயதில் பள்ளிக்கூடத்தில்  வரலாறு படிக்கிற போது இந்த உத்திர மேரூர் கல்வெட்டுகளை பத்தி ஏதோ தெரிஞ்சு வச்சி இருந்தேன்.(பள்ளிக்கூடம் வரைக்கும் போய் இருக்கானே அப்படின்னு யாராவது சொல்லிராதீங்க..   ஹி ஹி ஹி ..) இப்போ செங்கல்பட்டு வந்த போது உத்திர மேரூர் போர்டு பார்த்திட்டு சரி ஒரு எட்டு போய்ட்டு வருவோம் அப்படின்னு கிளம்பினோம். எனக்கு ஒரே ஆவல் ....ஒரு பெரிய மலை இருக்கும்.அந்த மலையில் நம்மை ஆண்ட முன்னோர்களின் வரலாறு பொறிக்கப்பட்டு இருக்கும் அப்படின்னு ரொம்ப எதிர்பார்ப்போடு போனேன்.
      உத்திரமேரூர் வந்தாச்சு.....பார்த்தா ஒரே நெரிசலா இருக்கு.இரண்டு பக்கமும் கடைகள் தான் இருக்கு.பரபரப்பா மக்களின் நடமாட்டம்...ஒரே ஊரா இருக்கு...மலை எங்கும் காணோம்....நேரே போனா ஒரு பெரிய பெருமாள் கோவில் மட்டும் வருது.ஒரு குளம் கூட இருக்கு.ரொம்ப விசேஷமான கோவில் என்றும் சொன்னார்கள். சென்னையில் இருக்கிற ஒரு கோவில் கூட இதை கம்பேர் செய்து சொன்னார்கள். 
அந்த கோவில் இதுதான்


            அப்புறம் அங்க விசாரிச்சு பார்த்தா பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு பில்டிங் இருக்கே அதுதான் அப்படின்னு சொன்னாங்க...வந்து  பார்த்தா ஒரு மணி மண்டபம் மாதிரி இருக்கு.முழுவதும் கருங்கல்.அந்த கால கோவில் போல கட்ட பட்டு இருக்கு.சுத்தி முத்தி பார்த்து விட்டு கொஞ்சம் உத்துப் பார்த்தால் கருங்கல்லில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு இருக்கு.அந்த மண்டபம் முழுவதும் செதுக்கி இருக்காங்க.





        கல்வெட்டுக்களை படிக்கிற அளவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லாததால் அதை போட்டோ மட்டும் எடுத்து கிட்டு கிளம்பினேன்.இந்த மண்டபத்தை தொல்லியல் துறை கட்டுபாட்டில் வைத்து இருக்கு.என்னவோ எதிர்பார்த்து வந்தாலும் ஒரு பெரிய சந்தோசம்..வரலாற்று சுவடான இந்த உத்திர மேரூர் கல்வெட்டுகளை எப்பொழுதோ புத்தகத்தில் படித்து இருந்தாலும் அதை நேரில் பார்த்த திருப்தியுடன் சென்றேன்..அப்புறம் எப்பவும் போல இந்த மாதிரி இடங்களை நிறைய பேரு தங்களின் சொர்க்க புரியா மாத்தி வச்சி இருக்காங்க.பொழுதுபோக்கும் சோம்பேறிகளின் இடமாக இருக்கு.

செங்கல்பட்டுல இருந்து ஒரு நாற்பது கிலோ மீட்டருக்குள் இந்த ஊர் இருக்கு.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...