Wednesday, April 18, 2012

பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க் - Bannerghatta Biological Park – Bangalore


பெங்களூர்..
பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்...
ஞாயிறு அன்னிக்கு காலையில் இந்த பார்க் போனோம்.மிருக காட்சி சாலை மற்றும் சபாரி செல்லுதல் என இரண்டும் இங்கு இருக்கிறது.பறவைகள், பாம்புகள், முதலைகள், யானைகள் சிறுத்தை, கரடி என அனைத்தும் இந்த பார்க்கில் இருக்கிறது.சபாரி அப்படினா ஒரு வேனில் காட்டுக்குள் இயற்கையாக உலாவும் விலங்குகளை காண அழைத்து செல்கின்றனர். நாங்கள் ஜூ மட்டுமே சென்றோம்.ஜூ வுக்குள் நுழைந்தவுடன், ஒரு வித மணம் நம் நாசியை அடைகிறது.
பறவைகளின் குரல்கள் கீச்சிடுகின்றன.விலங்குளின் கூக்குரல்கள் நம்மை வரவேற்கின்றன..
ஒரு பெரிய தொட்டி..அதில் உள்ளே தண்ணீரே இல்லாமல் நீர்யானை.நிற்கின்ற நீர் யானையின் மேலே பைப்பில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. (ஒருவேளை நமக்கு இது நீர் யானை தான் அப்படின்னு சொல்லாமல் சொல்வாங்களோ) நீர் யானை என்பதற்கு அர்த்தமே இல்லாமல் ஆக்கி விட்டனர்.

   
அப்புறம் வரிசையா அனைத்து விலங்கு களையும் பார்த்து கொண்டே சென்றோம்.இதே போல தான் முதலைகளின்  நிலையும். ஏதோ ஒரு வறட்சி இங்க இருப்பது கண்கூடாக தெரிகிறது..



ரொம்ப முக்கியம் ஈமு கோழி..இங்க நம்ம ஊருல என்னடான்னா தெருத்தெருவா கூவி கூவி இந்த ஈமு கோழி பண்ணை போடுங்க, நல்ல லாபம் வரும்.. முதலாளி ஆகுங்க... அப்படின்னு டிவி யிலேயும் பேப்பரிலும் விளம்பரமா போட்டு கொலையா கொன்னு எடுக்கிறாங்க.ஏகப்பட்ட பேரை இப்போ முதலாளியா ஆக்கி (!!?) இருக்காங்க இந்த ஈமு பண்ணை அதிபர்கள்.இங்க ஒரே பாவமா இருக்கு இந்த ரெண்டே ரெண்டு ஈமு கோழிகளை பார்க்கையில்..

யப்பாடி..இங்க இருக்கிற விலங்குகளை காண எவ்ளோ கூட்டம். சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த காட்டு விலங்குகளை காண்பதில் என்ன ஒரு சந்தோசம், குதூகலம்.. ஞாயிறு ஆதலால் ரொம்ப கூட்டம்.சாரி சாரியா வந்து கிட்டே இருக்காங்க.தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், வட இந்தியா என அனைத்து மக்களும்... அப்புறம் எப்பவும் போல பெண்கள் ராஜ்ஜியம் தான்..என்னத்த சொல்ல...பொறாமையா இருக்கு... நம்ம ஜாக்கி ஏன் அடிக்கடி இந்த ஊரை  பெண்களூர் என்று சொல்கிறார் என்பதை இங்கு வந்து பார்த்தால்தான் தெரிகிறது..நம்ம அம்மணிகளை பத்தி சொல்லவே வேணாம்..என்ன ஒரு அழகு...அம்சம்...அடடா....பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...அப்புறம் ஆங்காங்கே நம்ம காதல் பறவைகளும் ...ஹி ஹி ஹி


அப்புறம் உள்ளே நுழையும் போது ஒரு ஆடியோ கூப்பன் பத்து ரூபாய்க்கு தருகிறார்கள். ஒவ்வொரு விலங்கின் கூண்டிலும்  ஒரு நம்பர் இருக்கிறது. நம் மொபைலில் இருந்து அந்த கூப்பன் பத்தின விவரங்கள் ஆக்டிவேட் செய்து அந்த எண்ணை அழுத்தினால் அந்த மிருகம் பத்தின விவரங்கள் சொல்லப்படுகின்றது.
என்னா.....ஒரு டெக்னாலஜி.
ஜூ  செல்ல :
டிக்கட்  - பெரியவர்கள் – 60
சிறியவர்கள் – 30
சபாரி செல்ல – 210

கிசுகிசு : பெங்களூர் பத்தி இன்னும் இருக்கு..நிறைய...

நேசங்களுடன்
ஜீவானந்தம்


3 comments:

  1. சரி.. போய் பார்க்கலாமே..................ம்

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஜீவாவுக்கு உதை விழப்போகுது.. நீங்க கமெண்ட் பண்ணூன துல உங்க பேரை கிளிக் பண்ணூனா உங்க பிளாக் வரனும்.. இப்போ வர்லை.. அவ்வ்வ்

    ReplyDelete
  3. really super , i am going to plan through you

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....