கோயம்புத்தூர்
CFC ...காந்திபுரம் சிட்டி டவர் ஹோட்டலில் இருக்கிற பிரத்யோக சிக்கன் சென்டர்.போன வாரம் சாப்பிட போனேன்.அப்படி ஒண்ணும் டேஸ்ட் இல்லை.முன்னெல்லாம் இது ரொம்ப பேமஸ் ஆக இருந்துச்சு.சிக்கனை மொறு மொறு என்று பக்கோடா மாதிரி கையில் எண்ணெய் ஒட்டாமல் பிரைடு பண்ணி இருந்ததினால் இங்கு கூட்டம் அதிகமா இருந்தது.இப்போ என்னடானா ரொம்ப மோசமா இருக்கு. பார்சல் வாங்கிறவர்கள் மட்டுமே வருகிறார்கள்.ஆர்டர் பண்ணின சிக்கன் சுவை இப்போதைக்கு சரியில்லை. கிரில் சிக்கன் மட்டும் சுவையுடன் இருந்தது. மத்த கிரிஸ்பி சிக்கன் எதுவும் சரியில்லை.சரியான உப்போ காரமோ இல்லாமல் இருக்கிறது. விலை குறைவுதான்.ஆனால் ருசி இல்லையே.இது கூட காம்போ என்று பெப்சி வைக்கிறார்கள்.சிக்கன் விளம்பரத்தை விட பெப்சி விளம்பரம் தான் அதிகமா இருக்கு.