Tuesday, April 3, 2012

காடை முட்டை - சமையல் அனுபவம்


காடை முட்டை
சிக்கன் வாங்க கடைக்கு போன போது ஒரு வகையான முட்டையை வச்சி இருந்தாங்க..என்னன்னு கேட்டா காடை முட்டை அப்படின்னு சொன்னாங்க.





சரி ..இன்னிக்கு சாப்பிட்டு பார்த்திடணும்னு வாங்கினேன்.முட்டை விலை மூன்று ரூபாய். என்னடா இது ரொம்ப பொடிசா இருக்கே இதுக்கு இவ்ளோ விலையா அப்படின்னு நினைச்சு கிட்டே வாங்கினேன்... கோழி முட்டையை விட அளவுல மூணு மடங்கு சின்னதா இருந்தாலும் சத்து ரொம்ப அதிகமாம்.
இங்க காடை முட்டை சத்துக்கள் பத்தி quail-eggs 
 
ரொம்ப ஆசையா இருபது முட்டை வாங்கினேன். அவிக்கிறதுக்கு தண்ணியில போட்டா பாதிக்கும் மேல முட்டை மிதக்குது. ஓஹோ..........எல்லாம் போச்சே அப்படின்னு நினைச்சுகிட்டு வேக வைத்தேன்.........அதே மாதிரி நிறைய முட்டை கெட்டு இருந்தது. அடப்பாவிகளா....ஏமாத்தி புட்டீங்களே....அப்புறம் என்ன பண்றது இருக்கிற நல்ல முட்டை மட்டும் உளிச்சி உப்பு மிளகு போட்டு சாப்பிட்டேன்.
 

என்னோட சிறு வயசுல இந்த காடை , கவுதாரி முட்டைகளை மாட்டு சாணியில் உருட்டி அடுப்பில் போட்டு விடுவோம். கொஞ்ச நேரம் கழித்து தண்ணீரில் போட்டு சாணியை கழுவி முட்டை தொர்லியை உளித்து சாப்பிடுவோம்.. இப்போ என்னடானா தண்ணீரில் வேக வைக்க சொல்றாங்க...அதான் முட்டை நீர்த்து போய் விடுகிறது என நினைக்கிறேன்..

காடை  முட்டை  சாப்பிடுவதால் என்ன நன்மைகள்:(கொஞ்சம் கிளிக்கி படிங்க..)



இந்த முட்டை நல்ல சுவையுடன் தான் இருக்கிறது....என்ன....கோழி முட்டைய முழுசாய் அப்படியே வாயில போட்டு முழுங்குவோம். இது என்னடான்னா ரொம்ப சின்னதா இருக்கா...ஏதோ வாய் கொள்ள மாட்டேங்குது.

நேசங்களுடன் 

ஜீவானந்தம்


1 comment:

  1. காடை முட்டைகளை பதிவு போட்டது நன்றாக இருந்தது காடை முட்டை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் என போட்டு இருப்பதை படிக்கமுடியவில்லை ஜீவா கொஞ்சம் பெரிசா போட்டு இருந்தா நல்லா இருக்கும்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....