Wednesday, April 11, 2012

கோவை குற்றாலம் - (Kovai Kutralam)


கோவை குற்றாலம்
கோவையின் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி நதியில் இருந்து வனபகுதிக்குள் கொட்டுகிற ஒரு அருவி தான் இந்த கோவை குற்றாலம். அடர்ந்த வனம்..சுற்றிலும் பசுமை...இதுதான் இந்த கோவை குற்றாலம்.

 

 
எனது வீட்டிலிருந்து கிளம்பி கோவை குற்றாலம் அடையும் வரை 40 கிலோ மீட்டர் தூரம். சாய்பாபா கோவில், செல்வபுரம் , பேரூர், மாதம்பட்டி,ஆலாந்துறை, சாடிவயல்,காருண்யா நகர், பின் கோவை குற்றாலம் வனப்பகுதி செக் போஸ்ட் அடைந்தோம்.இங்க இருக்கிற கட்டிடங்கள் அனைத்திலும் காடுகள் போல விலங்குகள் இருக்கிற மாதிரி வரைந்து வைத்து இருக்கின்றனர்.

வனத்துறை செக் போஸ்டில் நுழைவு கட்டணம், கேமரா கட்டணம், பராமரிப்பு கட்டணம் என அனைத்தும் செலுத்தி விட்டு வன பாதைக்குள் நுழைந்தோம்.இங்கே இருந்து சிறுவாணி அணைக்கும் அருவிக்கும் பாதை பிரிகிறது. செக் போஸ்டில் இருந்து 3 கிலோ மீட்டர் உள்ளே சென்ற வுடன் அங்கு காரை நிறுத்தி விட்டு நடக்க தொடங்கினோம்.ஓங்கிஉயர்ந்த மரங்களில் உள்ள சில்வண்டுகளின் ரீங்காரம் நம் காதுகளில் ஒலிக்கிறது.
அதுக்கு முன்னாடி நம்ம பைகளை சோதனை போடறாங்க.சரக்கு பாட்டில் ஏதாவது இருக்குமா அப்படின்னு.உள்ளே மது அருந்த அனுமதி இல்லை.ஆனாலும் நம்மாளுங்க போட்டுகிட்டே வந்து விடுகிறார்கள்.(இதுக்கு முன்னாடி நாங்கலாம் போன போது பீர் பாட்டிலை பேண்ட்க்குள் சொருகி வைத்து கொண்டு உள்ளே நுழைவோம்..அங்கு சலசலக்கிற குளிர்ச்சியான அருவியின் தண்ணீரில் பாட்டிலை மூழ்க வைத்து விட்டு குளிப்போம்.பின்னர் பாட்டில் குளிர்ச்சி அடைந்தவுடன் குடிப்போம்...குளிப்போம். ம்கூம்....அது ஒரு கனா காலம் ..)
அப்புறம் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தவுடன் நம்மை அருவி வரவேற்கிறது.உயரமான பாறைகளின் மேலிருந்து தண்ணீர் வழிந்து வருவது கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது அருவியை ஒட்டி அருகில் இருக்கிற மரங்கள் எல்லாம் பசுமையாக இருக்கு.மேட்டுல இருக்கிற தேக்கு மரங்கள் எல்லாம் சரியான மழை இல்லாததால் ரொம்ப காஞ்சு போய் இருக்கு.நல்ல மழைக்காலம் அன்று சென்று இருந்தால் இன்னும் பசுமையாய் இருக்கும்.
பத்து வருடம் முன்பு செல்லும் போது அதிகம் வசதிகள் இல்லாமல் இருந்தது.இப்போ பெண்கள் உடை மாற்றும் அறை, பாதுகாப்பு வசதிகள், பாலம், படிக்கட்டுகள், சிறுவர்களுக்கு குளம் என நிறைய மாறி விட்டு இருக்கிறது.நாங்கள் மேற்பகுதியில் கொட்டுகிற அருவியில் குளிக்க ஆரம்பித்தோம்..தண்ணீர் வரத்து இப்போ கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நல்ல குளிர்ச்சியுடன் இருக்கிறது.குடிப்பதற்கு மிகவும் சுவையாகவும் இருக்கிறது.கீழே நிறைய பேர் ஆண்கள் பெண்கள் சகிதமாய் குளித்து கொண்டு இருந்தனர்.அருவி செல்லும் வழி எங்கும் ஆங்காங்கே குளித்து கொண்டு இருந்தனர். 


எப்பவும் போல இங்கு நம்ம முன்னோர்கள் அதிகமா இருக்காங்க..அதுக்கு மேல நம்ம காதல் பறவைகள். தள்ளிக்கிட்டு, கூட்டிகிட்டு, ஓட்டிகிட்டு வந்தது என நிறைய....வழி எங்கும் நிரவி ..பரவி...கிடக்கிறாங்க...சாரி இருக்காங்க..ஒரு ஜோடி குளிச்சிட்டு சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸ் கழுவி கொண்டிருந்ததை யும் பார்த்தேன்..இன்னொரு ஜோடி நாம வர்றதை பார்த்து விட்டு உடனே கை எடுக்கிறதையும் பார்த்தேன்....(.ம்கூம்...காதல் வாழ்க.. நமக்கு இந்த மாதிரி ஒரு கொடுப்பினை இல்லையே.)..
அப்புறம் இங்க 10 மணி முதல் 4 மணி வரைக்கும் தான் குளிக்க அனுமதி.ரொம்ப நேரம் குளித்ததினால் மனமும் உடலும் புத்துணர்ச்சி யடைய வீட்டிற்கு கிளம்பினோம்..அப்புறம் வழியெங்கும் திடீர் கடைகள் நிறைய இருக்கு..மாங்காய், எலந்தவடை, சிப்ஸ், தண்ணீர் பாட்டில், என அனைத்தும் இருக்கு.என்ன விலை தான் அதிகமா சொல்வாங்க..அதனால வரும்போதே எல்லாம் வாங்கி வந்துடுங்க...
ரொம்ப செலவு இல்லாத சுற்றுலா இடம் எதுன்னா இத சொல்லலாம்.பஸ்சில் வந்தா செலவு ரொம்ப கம்மி.செக் போஸ்ட் வரைக்கும் தான் பஸ் வரும் அதனால ரொம்ப தூரம் நடக்கணும்.
காதல் பறவைகளுக்கும் மற்றவங்களுக்கும் ஓகே. எங்காவது ஒதுங்கி கொஞ்சம் பூஸ்ட் அப் பண்ணிக்குவாங்க...கடலை போட்டு கிட்டே அருவி வரைக்கும் வந்து விடுவார்கள்.குழந்தை குட்டிகளுடன் செல்பவர்கள் ரொம்ப தூரம் நடக்க முடியாது.பைக்கிலோ அல்லது காரிலோ செல்லலாம்.
கோவை குற்றாலம் செல்லும் வழியில் தான் காருண்யா பார்க், பூண்டி வெள்ளியங்கிரி மலை, ஈசா தியான லிங்கம் இருக்கிறது.
நுழைவு கட்டணம் – 15, கேமரா – 25, கார் – 15
ஒருநாள் சுற்றுலாவிற்கு ஏத்த இடம்.மனம் லேசாகும் இயற்கையை காணும் பொழுது..

10 comments:

  1. ஒருநாள் சுற்றுலாவிற்கு ஏத்த இடம்.மனம் லேசாகும் இயற்கையை காணும் பொழுது..

    இயற்கைப் பகிர்வு..

    சுற்றிலும் விரவி இருக்கும் பாட்டில் துகள்கள் , மற்றகாட்சிகளுக்காகாக இப்போதெல்லாம் தடை செய்யப்பட்ட இடமாகிவிட்டது...

    முன்பு அடிக்கடி சென்றுகொண்டிருந்தோம்..

    ReplyDelete
  2. நன்றி ராஜேஸ்வரி....இப்போ போறது இல்லையா..?

    ReplyDelete
  3. இது மாதிரி இடங்கள்ல எப்பவுமே விற்கும் எல்லாமே விலை அதிகமாவே தான் இருக்கு.வாங்கித்தானே ஆகனும்ங்கற நினைப்புதான்.

    ReplyDelete
  4. :-) .................இப்படின்னா என்ன தலைவரே...
    வெளங்கவே இல்லையே...

    ReplyDelete
  5. ஜீவா சார் நல்ல கவர் பண்ணி இருக்கீங்க. போட்டோஸ்-ill அந்த இடம் கொஞ்சம் வசதிகள் வந்த மாதிரி இருக்கு. நான் 1993 இல் அங்கு சென்று இருக்கிறேன். சுத்தமாக ஒன்றுமே இருக்காது. காட்டு விலங்குகள் வந்துவிடும் என்ற பயம் வேறு. பயந்துகொண்டே குளித்துவிட்டு கொண்டுபோன கட்டுசாததை ஒரு பிடி பிடித்த நினைவு வருகிறது. ரேஞ்சர்கள் தொந்திரவு வேறு. ஆனா நீர்வரத்தை பார்த்தல் அதேபோல கொஞ்சமாக இருக்கிறது. நன்றாக தண்ணீர் வரும்போது ஒரு விசிட் செய்து போட்டோ போடுங்கள்.
    நன்றி - சிங்கை ஜெயராமன்.

    ReplyDelete
  6. அண்மையில் சென்று வந்தேன் - பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. குளு குளு என்று இருக்கிறது

    ReplyDelete
  8. leeches angu athigam endru kelvi pataenae??

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....